Published:Updated:

ஸ்மார்ட்பேண்ட் 4, வாட்டர் ப்யூரிஃபையர், நைட் லைட்... மொபைலைத் தாண்டியும் கலக்கும் ஷியோமி!

இன்று நடந்துமுடிந்த 'Smarter Living' விழாவில் பல சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் புதிய டிவிகள் மட்டுமல்லாமல் மற்ற புதிய சாதனங்களும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Mi Water Purifier
Mi Water Purifier

Mi SmartBand 4

தற்போதைக்கு இந்திய மொபைல், டிவி சந்தைகளைப்போல ஃபிட்னஸ் பேண்ட் சந்தையிலும் ஷியோமிதான் ராஜா. இதுவரை வெளியான அனைத்து ஃபிட்னெஸ் பேண்ட்டுகளுமே ஹிட்தான். இப்போது இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது MI ஸ்மார்ட்பேண்ட் 4.

MI Band 4
MI Band 4

இதை ஏற்கெனவே சீனாவில் அறிமுகப்படுத்திவிட்டதால் இந்தியாவில் எப்போது வெளியாகும் எனப் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர் ரசிகர்கள். இறுதியாக இன்று இது வெளியாகியிருக்கிறது, MI பேண்ட் 3-யை ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய மாற்றங்கள் என்று எதுவும் இல்லை. 0.95 இன்ச் MI பேண்ட் 4 சூப்பர் AMOLED கலர் டிஸ்ப்ளே (120x240 pixels) கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்புபோல இதே ஸ்கிரீனில் ஆப் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்க முடியும். கால்களை அட்டெண்ட் செய்ய முடியும்.

புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் Six-axis motion சென்சாரால் நடப்பது, ஓடுவது, நீச்சல் அடிப்பது போன்ற விஷயங்களை முன்பைவிட சிறப்பாகக் கணக்கிடும் இந்த Mi SmartBand 4.50 மீட்டர் வரை வாட்டர்ஃப்ரூப், வானிலை அறிக்கை, மெசேஜ்களை வாசிக்கும் வசதி என பேண்ட் 3-யில் அசத்திய வசதிகள் இந்த மாடலில் இருக்கின்றன. இதுவும் ஒரு சார்ஜில் 20 நாள்கள் தாக்குப்பிடிக்கும் எனக் கூறும் ஷியோமி MI பேண்ட் 3-யின் ஸ்ட்ராப் இதற்கும் சேரும் என்றும் தெரிவித்திருக்கிறது. முன்பைவிடவும் இந்திய ஃபிட்னஸ் சந்தையில் தற்போது கடும்போட்டி நிலவுகிறது. இதில் முன்பைப்போல ஷியோமி கெத்து காட்டுமா என்பது சந்தேகம்தான். ஆனால், இதன் விலை நிச்சயம் அதற்கு உதவும்.

Mi ஸ்மார்ட்பேண்ட் 4-யின் விலை 2,299 ரூபாய்.

Mi Water Purifier

Mi Water Purifier
Mi Water Purifier

வெறும் A4 பேப்பர் அளவில்தான் இந்த நீர் சுத்திகரிக்கும் சாதனம் இருக்கும் என்கிறது ஷியோமி. FDA அங்கிகாரம் பெற்ற இதில் PPC (polypropylene cotton), activated carbon, RO போன்ற ஃபில்டர்களால் நீர் சுத்திகரிக்கப்படும். இப்படி சுத்திகரிக்கப்படும் நீர் BIS தரநிலைக்கு ஏற்ப இருக்கும் என்கிறது ஷியோமி. ஆனால், இதில் கூடுதல் ஸ்பெஷல் இதில் இருக்கும் ஸ்மார்ட் வசதிகள்தான். MI Home ஆப்பிலிருந்து இதை உங்களால் மொபைலிலிருந்தே இயக்க முடியும், TDS மற்றும் ஃபில்டர் தரத்தைக் கண்காணிக்க முடியும். கேட்ரிட்ஜ்களை வாங்க மொபைலில் ஆர்டர் செய்தாலே போதும். இந்த கேட்ரிட்ஜ்களை யாருவேண்டுமானாலும் மாற்றும் வண்ணம் எளிதாகவும் வடிவமைத்திருக்கிறது ஷியோமி.

இதன் விலை 11,999 ரூபாய்

Mi Motion Activated Night Light 2

ஷியோமியின் கூட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ் விற்பனைக்கு வருகிறது இந்தச் சாதனம். இதில் இருக்கும் infrared சென்ஸார் கொண்டு அறையில் யாரவது இருக்கிறார்களா என்பதை சோதித்து அதை வைத்து ஒளிவிடும் இந்த இரவு மின்விளக்கு. 500 ரூபாய் செலுத்துவதன் மூலம் இதில் ஒன்றை உங்களால் வாங்க முடியும்.

Mi Motion Activated Night Light 2
Mi Motion Activated Night Light 2
MI Soundbar
MI Soundbar
Vikatan

மேலும், ஏற்கெனவே வெளியான MI சவுண்ட்பார் இனி கறுப்பு நிறத்திலும் கிடைக்கும் என்று இந்த நிகழ்வில் அறிவித்திருக்கிறது ஷியோமி. இது ரசிகர்கள் பலரும் பல நாள்களாகக் கேட்டுவந்த ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.