Published:Updated:

சோப் டிஸ்பென்ஸர் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை... புது ஷாவ்மி கேட்ஜெட்ஸில் என்ன ஸ்பெஷல்?!

Mi Smarter Living Event 2021
News
Mi Smarter Living Event 2021

மொபைல் அல்லாத மற்ற சாதனங்களை 'Smarter Living' என்ற நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் ஷாவ்மி அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த நிகழ்வு ஆன்லைனில் நடந்து முடிந்திருக்கிறது.

கம்மி விலை, தாறுமாறு ஸ்பெக்ஸ் என இந்தியாவில் மொபைல் நிறுவனமாக களமிறங்கிய ஷாவ்மி இன்று மொபைல் சந்தையைத் தாண்டி பல எலக்ட்ரானிக் பிரிவுகளிலும் கல்லா கட்டி வருகிறது. இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஃபிட்னஸ் பேண்ட் பிரிவிலும் ஷாவ்மியே ஆதிக்கம் செலுத்திவருகிறது. இது இல்லாமலும் பல புதிய சாதனங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது அந்த நிறுவனம். அப்படி மொபைல் அல்லாத மற்ற சாதனங்களை 'Smarter Living' என்ற நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் ஷாவ்மி அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த நிகழ்வு ஆன்லைனில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்கள் என்ன, அவற்றின் விலை என்ன... விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்...

Mi Watch Revolve
முதலில் Mi Watch Revolve என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகப்படுத்தியது ஷாவ்மி. இந்தியாவில் ஷாவ்மி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்மார்ட் வாட்ச் இதுதான்.
Mi Watch Revolve
Mi Watch Revolve
Xiaomi

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகமான Mi Watch Color மாடலை ரீ-பிராண்ட் செய்திருக்கிறார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ரேம், 46 மில்லிமீட்டர் டயல் கொண்டுள்ளது இந்த வாட்ச். 1.39-இன்ச் AMOLED டச் டிஸ்ப்ளே (454 x 454) மேல் இருப்பது கொரில்லா கிளாஸ் 3, இதனால் அவ்வளவு எளிதில் இந்த வாட்ச் உடைய வாய்ப்பில்லை. இந்த டிஸ்ப்ளே பிரைட்னெஸ் 450 nits, இது கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன்களில் இருக்கும் டிஸ்ப்ளேக்களில் இருக்கும் பிரைட்னெஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெளிவரும்போது 112 வாட்ச் ஃபேஸ்களுடன் வருகிறது Mi Watch Revolve. விரைவில் இது 1000-ஆக உயரும் எனத் தெரிவித்திருக்கிறது ஷாவ்மி. இரண்டு நிறங்களில் (Midnight Black and Chrome Silver) இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும். Leather, Astral Olive, Cosmic Dust Maroon, Neptune Blue, Space Black எனப் பல வகை ஸ்ட்ராப்களையும் இத்துடன் நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும்.

பொதுவாக பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்கள் பெரும்பாலும் ஃபிட்னஸ் பேண்ட்டில் இருக்கும் வசதிகளைக் கொண்டவையாகவே இருக்கும். டிசைனில் மட்டும் பார்க்க வாட்ச் போல இருக்கும். இதனால் தனித்துத் தெரிய ஸ்மார்ட்வாட்ச்சுக்கென ஸ்பெஷலாக சில வசதிகளைச் சேர்த்திருக்கிறார்கள். அதில் முக்கியமானதாக ஷாவ்மி சொல்வது FIRSTBEAT motion algorithm. இந்த அல்காரிதம் இதயத்துடிப்பு, தூங்கும் நேரம், ஆற்றல் அளவு, ஸ்ட்ரெஸ் ஆகியவற்றைக் கண்காணித்து மொத்தமாக நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள், ஃபிட்டாக என்னென்ன முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என உங்களுக்குச் சொல்லும்.

Mi Watch Revolve | ஷாவ்மி
Mi Watch Revolve | ஷாவ்மி
Xiaomi

VO2 Max அளவும் இதில் எடுக்க முடியும். இது இருதய ஆரோக்கியம் எப்படி இருக்கிறது எனச் சொல்லும். இதுபோக சைக்கிளிங், யோகா உட்பட 10 ஸ்போர்ட்ஸ் மோடு ட்ராக்கிங்கும் இருக்கிறது. இது ஒவ்வொரு பயிற்சியிலும் எவ்வளவு கலோரிகளை ஏரிக்கிறீர்கள் எனத் துல்லியமாகக் கண்காணிக்குமாம். பில்ட்-இன் GPS/GLONASS இருப்பதால் மொபைல் இல்லாமல் தன்னிச்சையாக இதனால் லொகேஷன் ட்ராக்கிங் செய்ய முடியும். இது 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டென்ட் என்பதால் நீச்சல் ட்ராக்கிங்கும் உண்டு.

சரி கடைசியாக முக்கிய விஷயத்துக்கு வருவோம். ஸ்மார்ட் வாட்ச்களில் பெரிய பஞ்சாயத்தாக இருப்பது பேட்டரிதான். பெரும்பாலான ஸ்மார்ட் வாட்ச்களில் ஒரு நாள் முழுவதும் கூட சார்ஜ் நிற்பதில்லை. ஆனால், Mi Watch Revolve சராசரி பயன்பாட்டில் 14 நாள்கள் வரை ஒரு சார்ஜில் தாக்குப்பிடிக்கும் என்கிறது ஷாவ்மி.

விலை- 10,999 ரூபாய்.

ஆனால், அறிமுக சலுகையாக தீபாவளி வரை இந்த வாட்ச்சை 9,999 ரூபாய்க்கு வாங்கலாம். அமேசான், mi.com மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அக்டோபர் 6 முதல் இதை நீங்கள் ஆர்டர் செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Mi Band 5
அடுத்ததாக Mi band 5 அறிமுகம் செய்யப்பட்டது. ஜூன் மாதமே இது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டதால் அப்போதே இதன் ஸ்பெக்ஸ் பற்றித் தெரியவந்தது.

முந்தைய மாடலான Mi band 4-க்கும் இதற்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்ன என்று விரிவாகத் தெரிந்துகொள்ளக் கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.

Mi Band 5
Mi Band 5
Xiaomi

சீனா மாடல் போல இதில் NFC கிடையாது. இந்த கொரோனா நேரத்தில் மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய வசதியான SpO2 சென்சார் இல்லாதது ஏமாற்றம். முதல்முறையாக மேக்னெட்டிக் சார்ஜர் கொடுத்திருக்கிறார்கள். இதனால் ஸ்ட்ராப்பிலிருந்து சாதனத்தைக் கழட்ட வேண்டிய தேவை இருக்காது.

விலை 2,499 ரூபாய்.

அமேசான், mi.com மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அக்டோபர் 1 முதல் இதை நீங்கள் ஆர்டர் செய்ய முடியும்.

Mi Smart Speaker
இறுதியாக இந்தியாவில் அதன் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்திருக்கிறது ஷாவ்மி. இதுவும் ஏற்கெனவே சீனா மற்றும் பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட Mi Art Smart Speaker-ன் ரீ-பிராண்டட் வெர்ஷன்தான். Xiao AI-க்கு பதிலாக இந்தியாவில் கூகுள் அசிஸ்டென்ட் கொடுத்திருக்கிறார்கள்.
Mi Smart Speaker
Mi Smart Speaker
Xiaomi

'ஏற்கனவே இருக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் செம ஸ்மார்ட்டாக இருக்கின்றன. ஆனால் ஆடியோ தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. அந்த குறையைத் தீர்க்கும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்' என இதை அறிமுகப்படுத்தியது ஷாவ்மி. 63.5 mm ஆடியோ டிரைவர், 12 W ஆடியோ அவுட்புட் என ஒரு அறையை முழுவதுமாக ஒலியால் நிரப்பக்கூடிய திறன் இந்த ஸ்பீக்கருக்கு இருக்கிறது. இரண்டு ஸ்பீக்கர்கள் வாங்கி இவற்றை டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களாக மாற்றலாம்.

கூகுள் ஹோம், அமேசான் எக்கோ மட்டும் இருந்துவந்த இந்த ஏரியாவில் ஷாவ்மியின் இந்த ஸ்பீக்கர் நல்ல ஒரு வரவுதான்.

விலை- 3,499 ரூபாய்.

ஃப்ளிப்கார்ட், mi.com மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அக்டோபர் 1 முதல் இதை நீங்கள் ஆர்டர் செய்ய முடியும்.

சோப் டிஸ்பென்ஸர்
இந்த நிகழ்வில் கொரோனா ஸ்பெஷல் சாதனம் ஒன்றையும் அறிமுகம் செய்தது ஷாவ்மி. அது Mi ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்ஸர்.
Mi ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்ஸர்
Mi ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்ஸர்

கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத இந்த நேரத்தில் கைகழுவுவதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் மிகமுக்கிய ஆயுதம் அதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், ஹேண்ட்வாஷ் போட்டு கைகழுவுவதில் ஒரு சிக்கல் உண்டு. எப்படியும் கை கழுவுவதற்கு முன்பு ஹேண்ட்வாஷ் பாட்டிலை தொட்டுத்தான் ஆக வேண்டும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு தருகிறது Mi ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்ஸர். இதன் இன்-பில்ட் Proximity infrared சென்ஸார் நீங்கள் உங்கள் கைகளை அதன் அருகில் கொண்டு போனாலே அதை கண்டறிந்து சோப் நுரையை வெளியேற்றும். அதுவும் கால் நொடியில்!

300 ml கொள்ளளவு கொண்டுள்ள இந்த சாதனம் நான்கு AA பேட்டரிகளில் இயங்குகிறது. இதை வாங்கும்போது இலவசமாக சோப் லிக்விடும் ஷாவ்மி தருகிறது.

விலை 999 ரூபாய்

இதை அக்டோபர் 15-ம் தேதி முதல் Mi.com தளத்தில் ஆர்டர் செய்யலாம். கூடுதல் சோப் லிக்விட் (3 Pack) 599 ரூபாய்க்கு கிடைக்கும்.

இது போக ஒரு வெள்ளை ஸ்மார்ட் பல்ப் 399 ரூபாய்க்கும் Mi Athleisure shoe என்ற ஸ்போர்ட்ஸ் ஷூவை 1,499 ரூபாய்க்கும் அறிமுகம் செய்தது ஷாவ்மி. இந்த நிகழ்வில் அமேசான், ஃப்ளிப்கார்ட்க்கு அடுத்தபடியாக இந்திய மக்கள் அதிகம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் இ-காமர்ஸ் தளம் mi.com என்றும் தெரிவித்தது. இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் ஒருமுறை தங்களது டார்கெட் ஸ்மார்ட்போன் சந்தை மட்டுமல்ல என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது ஷாவ்மி.

இந்த புது ஷாவ்மி கேட்ஜெட்ஸில் உங்களை அதிகம் கவர்ந்தது எது? கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!