Published:Updated:

வெயிலுக்கு இதமான பாக்கெட் ஏசி... சோனியின் புதிய கேட்ஜெட்!

சோனி பாக்கெட் ஏசி

இதுவரை ஜப்பானில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஏசி இந்தியாவிற்கு வருமா என்ற கேள்விக்கு சோதனை முடிவுகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

வெயிலுக்கு இதமான பாக்கெட் ஏசி... சோனியின் புதிய கேட்ஜெட்!

இதுவரை ஜப்பானில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஏசி இந்தியாவிற்கு வருமா என்ற கேள்விக்கு சோதனை முடிவுகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

Published:Updated:
சோனி பாக்கெட் ஏசி

வெயிலில் மணிக்கணக்காக டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு, சிக்னலில் ஹெல்மெட் அணிந்துகொண்டு பச்சை சிக்னல் விழும் வரை சூரிய பகவானை நிந்தித்து கொண்டே நிற்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் உறங்கி கிடக்கும் ஐன்ஸ்டீனுக்கு, ``A.C பொருத்திய சட்டையை நாம் கண்டுபிடித்தால் என்ன?" என்ற யோசனை வந்திருக்கும். அதே ஐடியாவை கையில் எடுத்து ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகமே செய்துவிட்டது சோனி நிறுவனம். ஆம், Pocket AC-யை தயாரித்து அதை ஜப்பானில் விற்பனை செய்ய தொடங்கிவிட்டது சோனி. அந்த மினி ஏசி எப்படி மக்களுக்கு பயன்படும் என்கிறீர்களா, விரிவாக பார்க்கலாம் வாங்க!

நமது நாட்டில் உள்ள வெயில் காலத்தை போலவே, ஜப்பான் நாட்டின் வானிலையையும் எளிதாகக் கணிக்க முடியாது. எப்போது வெயில் வறுத்தெடுக்கும்; எப்போது குளிர் வாட்டியெடுக்கும் என யாருக்கும் தெரியாது. இதை சமாளிக்கவே இந்த பாக்கெட் ஏசியை அறிமுகப்படுத்தியிருக்கிறது சோனி. ரியான் பாக்கெட் (Reon Pocket) என அழைக்கப்படும் இந்தக் கையடக்க ஏசியை தற்போதைக்கு சோதனை ஓட்டமாக ஜப்பானில் மட்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது சோனி நிறுவனம்.

36° C (96° F) வெப்பநிலையை 23° C (73.4° F) வரை இதனால் குறைக்க முடியும் என்று கூறுகிறது சோனி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிவாஜி படத்தில் வருவதுபோல இது விண்வெளி உடைபோல பெரிதாக எல்லாம் இல்லை. இந்த ரியான் பாக்கெட் (Reon Pocket) உள்ளங்கை அளவும், வெறும் 80 கிராம் எடையும் கொண்ட ஒரு சாதனம். இதை முதுகில், இரு தோள்பட்டைகளுக்கு நடுவே ஒட்டிக்கொள்ள வேண்டும். அப்படி செய்த பின் இதை நமது ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்டு மொபைலுடன் ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்ய முடியும். USB-C கேபிள் கொண்டு இதனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் நாம் செலக்ட் செய்யும் மோடை பொறுத்து 2- 3 மணிநேரம் வேலை செய்யும். இதனை முதுகில் ஒட்டிக்கொள்ள அசௌகரியமாக இருந்தால் இதனை சுமந்து கொள்ள பாக்கெட்டுடன் கூடிய டீ ஷர்ட் ஒன்றையும் பிரத்யேகமாக வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது சோனி. அதனை போட்டுக்கொண்ட பிறகு, நமது உடம்பின் வெப்பத்தைக் குறைக்கவும் பயன்படுத்தலாம்; அதிகரிக்கவும் பயன்படுத்தலாம். இதனால் இதை ஹீட்டர் போல கூட பயன்படுத்த முடியும்.

சோனி பாக்கெட் ஏசி
சோனி பாக்கெட் ஏசி

சோனியின் ஆராய்ச்சிக்கூடம், இந்தக் கையடக்க ஏசி மூலம் உங்கள் உடல் மேற்பரப்பு வெப்பநிலையை 13° C வரை குறைக்கலாம் என்று கூறுகிறது, எடுத்துக்காட்டாக 36° C (96° F) வெப்பநிலையை 23° C (73.4° F) வரை இதனால் குறைக்க முடியும் என்று கூறுகிறது சோனி. பொதுவாக வெயில் காலத்தில் இதை பயன்படுத்தும்போது, எப்படி ஒரு பனிக்கட்டியை முதுகில் வைத்தால் ஒரு நல்ல இதம் தருமோ, அதேபோல இது செய்யும். மத்தபடி உடலெங்கும் குளிரை இது கடத்தி செல்லாது. தினசரி வெயிலில் அலைபவர்கள் இந்த பாக்கெட் ஏசியை பயன்படுத்தினால் சற்று இதமாக உணரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை ஜப்பானில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஏசி இந்தியாவிற்கு வருமா என்ற கேள்விக்கு சோதனை முடிவுகள்தான் பதில் சொல்ல வேண்டும். இந்த சாதனத்தின் விலை 13,000 யென் (இந்திய மதிப்பில் சுமார் 9,000 ரூபாய்). இதற்கான பிரத்யேக அண்டர்ஷர்ட்ஸ் (வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் கிடைக்கிறது) ஒன்றின் விலை 1,800 யென் (இந்திய மதிப்பில் சுமார் 1,200 ரூபாய்). வேண்டுமென்றால் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து இதை இங்கு பயன்படுத்தலாம்.

சூப்பர் கண்டுபிடிப்புல..! இந்த மாதிரி வேறு என்ன தொழில்நுட்பம் வந்தால் நல்லா இருக்கும்னு நினைக்குறீங்க? கமென்ட்களில் பதிவிடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism