Published:Updated:

டி-ஷர்ட்டுக்குள்ளேயே ஒரு மினி ஏ.சி... சோனி நிறுவனத்தின் புது கேட்ஜெட்!

விஷால் ராம்

நம் உடைக்குள் வைத்துக்கொள்ளும்படியான ஏ.சி ஒன்றை உருவாக்கியுள்ளது சோனி நிறுவனம்

ரியான் ஏ.சி
ரியான் ஏ.சி ( Sony )

அடிக்கிற வெயிலுக்கு சிவாஜி பட‌த்‌துல வர்றமாதிரி ஒரு A/C டிரஸ் இருந்தா நல்லாயிருக்கும் என்று நம் அனைவரையும் முனுமுனுக்க வைத்தது தமிழகத்தின் வெப்பம். அது சூரிய பகவானுக்கு கேட்டுச்சோ இல்லையோ சோனி நிறுவனத்துக்கு கேட்டுருச்சு போல ``அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆடரு" என்று சோனி நிறுவனம் தற்போது ஒரு குளிர்சாதன உடையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரியான் ஏ.சி
ரியான் ஏ.சி
Sony

`ரீயான் பாக்கெட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனத்தை உடையில் இருக்கும் சிறிய பாக்கெட்டில் பொருத்திக் கொள்ளலாம். இத‌ற்கான பிரத்யேக உடை S,M,L என்று மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. 13 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியையும் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும் தரும் இதை Bluetooth மூலம் மொபைலிருந்து கட்டுப்படுத்தலாம்.

ரீசார்ஜபிள் பேட்டரியுடன் வரும் இந்த சாதனத்தை இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் ஒன்றரை மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். 85 கிராம் எடையுள்ள இந்த சாதனம் இரண்டு வேரியென்ட்களில் வருகிறது. ரீயான் பாக்கெட் ஸ்டாண்டர்ட்டின் விலை சுமார் 9,000 ரூபாய் வரும். மற்றொரு வேரியென்ட்டான ரீயான் பாக்கெட் லைட் விலை சுமார் 12,000 ரூபாய் வரும். இந்த பாக்கெட் ஏசி 2020-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.