Published:Updated:

சந்தையில் குவியும் போலி ஷாவ்மி தயாரிப்புகள்... ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி?

போலி ஷாவ்மி தயாரிப்புகள்
போலி ஷாவ்மி தயாரிப்புகள்

ஒரிஜினல் ஷாவ்மி சாதனங்கள் எதுவென்று கண்டுபிடிப்பது எப்படி?

தற்போது, இந்தியாவில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பலருக்கும் அறிமுகமான நிறுவனம், ஷாவ்மி. ஸ்மார்ட்போன்கள் விற்பதில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று டிவி, LED Bulb, Air Purifier, Water Purifier போன்ற பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களையும் விற்கிறது. இப்படி சந்தையில் பிரபலமான பிராண்டாக இருப்பதன் காரணத்தால், பல போலியான சாதனங்களும் இந்நிறுவனத்தின் பெயரில் ஆங்காங்கே விற்கப்படுகின்றன.

போலி ஷாவ்மி தயாரிப்புகள்
போலி ஷாவ்மி தயாரிப்புகள்
Twitter

போலியான பொருள்கள் விற்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் ஏற்கெனவே காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது. இதன் காரணமாக, காவல்துறை அதிகாரிகளும் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளும், கடந்த வாரம் டெல்லியில் உள்ள பிரபலமான சந்தைகளில் ஒன்றான கஃபர் மார்க்கெட்டில் சோதனை நடத்தினர். அதில், 2000-க்கும் மேற்பட்ட போலி ஷியாமி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை விற்ற கடை உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஷாவ்மி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், Mi Powerbanks, Mi Neckbands, Mi Travel Adaptor with Cable, Mi Earphone Basic, Mi Wireless Headsets, Redmi Air Dots, Mi 2-in-1 USB கேபிள் போன்ற 2000-க்கும் மேற்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்ததாகவும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ 13 லட்சம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் விற்ற கேலக்ஸி மொபைல் அக்சசரீஸ், பி.சி.எம் பிளாசா, கடை எண் 14 - சேகா மார்க்கெட், கடை எண் 2 - லோட்டஸ் பிளாசா ஆகிய நான்கு கடை உரிமையாளர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் பாதி இந்தியாவில் இன்னும் ஷாவ்மி அறிமுகம் செய்யாத பொருள்கள். இப்படியாக, வருடந்தோறும் போலியான பொருள்கள் விற்கப்படுவது அதிகரித்து வருவதாகவும் வாடிக்கையாளர்தான் போலியான பொருள்களைக் கண்டறிந்து, சரியானதை வாங்க ,வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

போலி ஷாவ்மி தயாரிப்புகள்
போலி ஷாவ்மி தயாரிப்புகள்
Twitter

இப்படியான நிலையில், ஒரிஜினல் ஷாவ்மி சாதனங்கள் எதுவென்று கண்டுபிடிப்பது எப்படி?

1. ஷாவ்மி நிறுவனம் போலிகளைக் கண்டறிவதற்கென்றே Mi Verification App என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், உங்கள் Mi சாதனத்தில் குறிப்பிட்டுள்ள QR Code-ஐ Scan செய்து போலியா ஒரிஜினலா என்று கண்டுபிடிக்கலாம். இந்தச் செயலியை Mi Store -லிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

2. அசல் பொருளுக்கும் போலியான பொருளுக்கும் பேக்கேஜிங் தரம் மாறுபடும். அசல் பொருளின் பேக்கேஜிங் முறையை எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள Mi Home அல்லது Mi Store ஐ அணுகலாம்.

3. அனைத்து ஷாவ்மி தயாரிப்புகளிலும் அசல் MI லோகோ இருக்கும். இதனால் ஷாவ்மி பொருள்கள் வாங்குவதற்கு முன் சரியான லோகோ இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி?
ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி?

4. ஃபிட்னெஸ் சாதனங்கள் நிச்சயம் MI fit ஆப்புடன் கனெக்ட் ஆகும். அதை வைத்து அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளலாம்.

5. அனைத்து ஷாவ்மி சாதனங்களின் பேட்டரிகளிலும் “Li-poly” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவேளை “li-ion” என்று இருந்தால், அது போலி ஷாவ்மி சாதனம் என்று அறியலாம்.

6. ஷாவ்மி என்றில்லை... முடிந்தவரை எல்லா தொழில்நுட்ப சாதனங்களையும் அந்தந்த நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அல்லது கூட்டணி வைத்திருக்கும் இ-காமர்ஸ் தளத்தில் அல்லது அதிகாரபூர்வ ஷோரூம்களில் வாங்குவது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு