Gadget- சோனி SRS-XB12 ப்ளூடூத் ஸ்பீக்கர்
'போர்ட்டபிளா சின்னதாவும் இருக்கணும், ஆனால் தரமான சவுண்டும் வரணும்' என ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான நல்ல சாய்ஸ் சோனியின் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர். சிறியதாக இருந்தாலும் பில்டு குவாலிட்டி மிகவும் நன்றாக இருக்கிறது. IP67 வாட்டர்ஃப்ரூப் ரேட்டிங், நல்ல பேஸ் அவுட்புட் எனப் பல நல்ல வசதிகள் இருந்தாலும் இதன் ஹைலைட் அதன் பேட்டரிதான். ஒரு சார்ஜில் 15,16 மணிநேரம் தாக்குபிடிக்கிறது இதன் பேட்டரி. ஆனால், முழுவதுமாக சார்ஜாக 4 மணிநேரம் ஆகும் என்பதுதான் ஒரே மைனஸ். ஆனால், 4,000 ரூபாய்க்குள் தரமான ப்ளூடூத் ஸ்பீக்கர் வேண்டுமென்றால் இந்த சோனி SRS-XB12 ப்ளூடூத் ஸ்பீக்கரை வாங்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விலை: 3,450 ரூபாய்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSApp-Unlock Clock (Android)

ரொம்பவும் சிம்பிளான ஒரு ஆப்தான். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து அதை வால்பேப்பராக செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் அன்லாக் செய்யும்போதும் அந்த வால்பேப்பரில் இருக்கும் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும். அதை வைத்து அந்த நாளில் அதுவரை எத்தனை முறை மொபைலை அன்லாக் செய்திருக்கிறோம் என்பது தெரிந்துவிடும். ஒரு நாளில் அதிகம் மொபைல் பயன்படுத்தாமல் இருக்க இது ஒரு ரிமைண்டர் போல இருக்கும். இதனால்தான் இதை உருவாக்கியவர்களே இதை ஒரு 'A Digital Wellbeing Experiment' என்று குறிப்பிடுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Feature-Stay on the previous source (Mi டிவி)

இன்று, இந்தியாவில் அதிகம் விற்கப்படும் டி.வி பிராண்ட் Mi தான். இந்த டி.வி-கள் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே டி.வி சந்தையில் 33 சதவிகிதத்தைக் கைப்பற்றியிருக்கிறது ஷாவ்மி. ஆனால், இந்த டி.வி-யைப் பயன்படுத்துபவர்கள் எரிச்சலாகும் ஒரு விஷயம் ஒன்று அதில் உண்டு. ஆண்ட்ராய்டு டி.வி என்பதால் ஸ்ட்ரீமிங், ஆப்ஸ் பயன்படுத்த எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் கேபிள்/டிடிஹெட்ச் பயன்படுத்தினால் ஆன் செய்யும் ஒவ்வொரு முறையும் அது எந்த போர்ட்டில் கனெக்ட் ஆகியிருக்கிறதோ அதைத் தேடி செலக்ட் செய்ய வேண்டும். அலுப்பை ஏற்படுத்தும் இதைத் தவிர்க்க ஒரு வழி உண்டு. Settings சென்று Inputs பகுதிக்குச் செல்லுங்கள். அதில், கீழே “Stay on the previous source” என்றிருக்கும், அதை செலக்ட் செய்துகொள்ளுங்கள். அப்படிச் செய்யும்போது, கடைசியாக எந்த இன்புட் போர்ட்டில் டி.வி ஓடிக்கொண்டிருந்ததோ அதுவே மீண்டும் ஆன் செய்யும்போதும் இருக்கும்.