Election bannerElection banner
Published:Updated:

டெக்தமிழா ஷேர்ஸ்

டெக் தமிழாவின் இந்த மாத ரெகமெண்டெஷன்ஸ்!

Zeb-Masterpiece Bluetooth Speaker

Gadget: Zeb-Masterpiece Bluetooth Speaker

ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம் வேண்டும் அதே நேரம் கையில் எடுத்துச் செல்லும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற இரண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது ஸெப்ரானிக்ஸ் மாஸ்டர்பீஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர். முன்பை விடவும் இப்போதெல்லாம் அதிகமாகவே ப்ளூடூத் ஸ்பீக்கர்கர்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் இருக்கும் சிக்கல் அவற்றில் ஸ்டீரியோ சவுண்ட் அனுபவத்தைப் பெற முடியாது. காரணம் ஒரு போனில் ஒரே நேரத்தில் ஒரு ஸ்பீக்கரை மட்டுமே கனெக்ட் செய்ய முடியும். ஆனால் இந்த மாஸ்டர்பீஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் TWS தொழில்நுட்பம் இருப்பதால் இரண்டு ஸ்பீக்கர்கள் அருகிலிருந்தால் ஒன்றோடொன்று கனெக்ட் செய்து கொள்ளும். அதில் ஏதாவது ஒரு ஸ்பீக்கரை போனில் கனெக்ட் செய்து கொள்ளலாம். அதனால் ஒரு பாடலை இரண்டு ஸ்பீக்கர்களிலும் ஒரே நேரத்தில் ஒலிக்கும் என்பதால் ஸ்டீரியோ சவுண்ட் அனுபவம் கிடைக்கிறது. ஒரு ஸ்பீக்கராக பயன்படுத்தவேண்டும் என்றாலும் இதன் சவுண்ட் குவாலிட்டி நன்றாகவே இருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்துக்கும் மேலாகப் பாடல்களைக் கேட்க முடியும். ஸ்டீரியோ சவுண்ட் வேண்டுமென்றால் இரண்டு ஸ்பீக்கர்களை வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு ஸ்பீக்கரின் விலை 2,699 ரூபாய்.
Caller ID & SPAM

Feature

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பலருக்கும் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் ட்ரூகாலர் போன்ற தெர்ட் பார்ட்டி ஆப்கள் எதுவும் இன்றியே தொந்தரவு தரும் Spam கால்களை ப்ளாக் செய்யமுடியும். இந்த ஆப்களிலேயே ஆபத்துகள் இருக்கின்றன என்பதால் இது பாதுகாப்பானதாக இருக்கும். இதற்கு போன் ஆப்பிற்கு செல்லுங்கள். அதில் செட்டிங்ஸிற்கு சென்று Caller ID & Spam என்ற பிரிவிற்குள் சென்று அங்கு இருக்கும் See Caller and spam ID, Filter spam calls என இரண்டு பட்டன்களையும் enable செய்யுங்கள், Spam தொல்லைகளிலிருந்து தப்பியுங்கள்.

Backdrops- Wallpapers

App:  Backdrops- Wallpapers

உங்கள் போனுடன் வரும் வால்பேப்பர்கள் போர் அடிக்கின்றன. தல, தளபதி வால்பேப்பர்லாம் வேண்டாம் ஃப்ரெஷ்ஷா எதாவது வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் இந்த ஆப்பை பயன்படுத்திப் பார்க்கலாம். பல வண்ணங்களில் வரும் டிசைன் வால்பேப்பர்கள், இயற்கைக் காட்சிகள் என வகைப்பிரித்து இதில் வால்பேப்பர்கள் இருக்கும். நல்ல லைவ் வால்பேப்பர்களும் இதில் உண்டு என்பது கூடுதல் ஸ்பெஷல். மிகவும் எளிமையான இந்த ஆப்பை நிச்சயம் ஒரு முறை முயற்சி செய்துபார்க்கலாம்.

Marianne (Netflix)

Streaming: Marianne (Netflix)

சிலருக்கு பேய் என்றாலே பயம். சில நாடுகளில் சில எண்கள் ராசியில்லாதவை. ஏன் டெக் உலகில் இருக்கும் ஒன்ப்ளஸ் மொபைலுக்கு நான்காம் எண் ராசியில்லையாம். அதுதான் ஒன் பிளஸ் 3T-க்குப்பின்னர், ஒன்ப்ளஸ் 5 என வெளியிட்டனர். இப்படி நாளொரு பேயும், பொழுதொரு பிசாசுமாக ஆளாளுக்கு ஒரு பேய் பயம் உண்டு.

செப்டம்பர் 13-ம் தேதி வெள்ளிக்கிழமைக்கு இப்படியான ஒரு பிளாஷ்பேக் உண்டு. மிகவும் மோசமான நாளாக ஐரோப்பா முழுக்கவே இந்த நாளை என்னுகிறார்கள். இப்படியொரு சுபயோக தினத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது மேரியேன் என்னும் பேய்த்தொடர்.

எம்மா என்னும் எழுத்தாளர் தொடர்ந்து எழுத வேண்டும் என ஆசைப்படும் மேரியேன். மேரியேனை ஒழித்துக்கட்டத் தொடரை முடிக்கும் எம்மா. இந்த இருவரில் யார் இறுதியில் வென்றார்கள் என்பது தான் மேரியேன். LIZZIE LARCK என்னும் பெயரில் பேய் நாவல் ஒன்றை எழுதுகிறார் எம்மா லார்ஸிமோன். தான் பார்த்த, பயந்த விஷயங்களை வைத்துப் புனைவாக அந்த புத்தகத்தில் கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். எல்லாமே அதிரிபுதிரி ஹிட். போதும் என முடிவு செய்யும் எம்மா, லிஸ்ஸி லார்க்குக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். ஆனால், அதற்குப் பின்தான் கதை ஆரம்பிக்கிறது. எம்மாவின் சொந்த ஊரான எல்டனில் அசம்பாவிதங்கள் நிகழத் தொடங்குகின்றன. சிலர் காணாமல் போகிறார்கள். எம்மா இன்றி ஓர் அணுவும் அசையாது எனக் கொக்கரிக்கிறாள் மேரியேன். நாவலைச் சிறப்பாக முடித்துவிட்டால் மேரியேனுக்கு குட்பை சொல்லிவிடலாம். ஆனால், முடியுமா என்கிறது நாவல். நாவலில் வருவது நிஜத்தில் நிகழ்கிறதா இல்ல, நிஜம் நாவலில் வரிகளாகின்றதா என எம்மாவுடன் நம்மையும் சேர்த்துக் குழப்புகிறார்கள். இந்த தொடர் முழுக்க இவர்கள் வைக்கும் சூனியத்தில், நம் பாக்கேட்டையும் அவ்வப்போது செக் செய்ய வேண்டியதிருக்கிறது.

இருட்டில் அமர்ந்து தனியாகப் பார்க்க நல்லதொரு பேய் சீரிஸ் இந்த மேரியேன்.

-கார்த்தி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு