Published:Updated:

டெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-ஃபிட்பிட் வெர்ஸா 2

என்ன கேட்ஜெட் வாங்கலாம்?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஃபிட்பிட் வெர்ஸா 2
டெக் தமிழாவின் இந்த மாத கேட்ஜெட் ரெகமெண்டெஷன்.

அமேசான் அலெக்ஸா சப்போர்ட்டுடன் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்லீப், ஹார்ட் ரேட், ஸ்விம் போன்ற ஹெல்த் தொடர்பான கண்காணிப்புகளைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது. ரிச்சான டிசைனில் வரும் இதன் எடையும் மிகவும் குறைவுதான்(4.54 கிராம்). 50 மீட்டர் வரை வாட்டர்ஃப்ரூப்பாக இருக்குமாம். ஆப்பிள் வாட்ச் போன்ற ஒரு ப்ரீமியம் ஸ்மார்ட்வாட்ச் வேண்டும். ஆனால், அது ஆண்ட்ராய்டில் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஃபிட்பிட் வெர்ஸா 2 சிறந்த சாய்ஸ்.

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் வரும் அதே ஆல்வெஸ் ஆன் டிஸ்ப்ளே இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 300 பாடல்கள் வரை ஆப்ஃலைனில் இதில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள முடியும். பல வண்ணங்களில் இது வெளிவந்திருக்கும் தன் முக்கிய ஹைலைட் இதன் பேட்டரிதான். ஒரு சார்ஜில் 4-5 நாள் தாக்குப்பிடிக்கிறது இந்த ஸ்மார்ட்வாட்ச். கடந்த மாதம்தான் கூகுள் ஃபிட்பிட் நிறுவனத்தைப் பெரும் தொகை கொடுத்து வாங்கியது என்பதால் இதன் மென்பொருளில் சில முக்கிய மாற்றங்கள் வரலாம் என நம்பலாம். ஏற்கெனவே இது ஆண்ட்ராய்டின் வியர் ஓஎஸ் இயங்குதளத்தில்தான் இயங்குகிறது.

`ஸ்மார்ட்வாட்ச்களில் கவனம் செலுத்தும் கூகுள்'- ஃபிட்பிட் நிறுவனத்தைப் பெரும்விலை கொடுத்து வாங்கியது!
விலை: 18,900 ரூபாய் (நிறத்திற்கு ஏற்றவாறு மாறும்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாட்ஸ்அப் ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக்!
டெக் தமிழா (Feature)

கைரேகைப் பாதுகாப்பை (Fingerprint lock) தனது ஆண்ட்ராய்டு ஆப்புக்கும் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப். இந்தச் சேவையைப் பயன்படுத்த புதிய வாட்ஸ்அப் ஆப்பை அப்டேட் செய்தல் அவசியம். அடுத்து Settings --> Account --> Privacy --> Fingerprint Lock --> Unlock with fingerprint என்று செலக்ட் செய்தால் மொபைலில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள ஃபிங்கர்ப்ரின்ட் வாட்ஸ்அப் ஆப்புக்கும் செட் ஆகிவிடும். வாட்ஸ்அப்பை விட்டு வெளிவந்த அடுத்த நொடியே லாக் ஆகும்படியும் 1 நிமிடம், 30 நிமிடங்கள் கழித்து லாக் ஆகும்படியும் ஆப்ஷன்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

Remote Fingerprint Unlock(ஆண்ட்ராய்டு)
App

இந்த ஆப் மூலம் உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டருக்கும் ஃபிங்கர்ப்ரின்ட் பாதுகாப்பு கொடுக்கமுடியும். இதற்கு ஆண்ட்ராய்டில் இந்த ஆப்பையும், விண்டோஸ் கம்ப்யூட்டரில் Fingerprint Credential Provider மென்பொருளையும் இன்ஸ்டால் செய்யவேண்டும். இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் மூலம் உங்கள் கம்ப்யூட்டரை அன்லாக் செய்யமுடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு