Published:Updated:

`சீனாவுக்கு பை... வியட்நாமுக்கு ஹாய்' - ஆப்பிளின் புதிய திட்டம்! #TradeWar

சீனா-அமெரிக்கா வர்த்தக உறவு இன்னும் நிலையாக இல்லாததால், தங்கள் பொருள்களைத் தயாரிக்க சீனாவுக்கு மாற்று இடங்களைத் தேடிவருகின்றன அமெரிக்க நிறுவனங்கள்.

ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம்

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தக உறவு பிரச்சனையாகவே இருந்துவருகிறது. இந்த நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரின் ஒருபகுதியாக, உலக அளவில் அதிகமான ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் இரண்டாவது பெரிய நிறுவனமான வாவே-வுடன்(Huawei) அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்யத் தடைவிதித்தது ட்ரம்ப் அரசு. இது, உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இப்போது இந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டாலும் வர்த்தக உறவு இன்னும் நிலையாக இல்லாததால், தங்கள் பொருள்களைத் தயாரிக்க சீனாவுக்கு மாற்று இடங்களைத் தேடிவருகின்றன அமெரிக்க நிறுவனங்கள். அப்படி வியட்நாமுக்கு டிக் அடித்திருக்கிறது 'ஆப்பிள்' எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் நிறுவனங்களின் பார்வை வியட்நாம் பக்கம் திரும்ப முக்கியக் காரணம், சீனாவைப் போல உற்பத்திசெய்யும் திறனை தற்போது அது பெற்றிருப்பதே!

தங்கள் போன்களின் எண்ணிக்கையில் பாதிக்குமேல் ஏற்கெனவே அங்குதான் சாம்சங் உற்பத்திசெய்கிறது. ஆப்பிளுக்காக போன் உற்பத்திசெய்யும் முக்கிய நிறுவனமான ஃபாக்ஸ்கான், இதற்கான வேலைகளை அங்கு பார்க்கத் தொடங்கிவிட்டது.

ஏற்கெனவே, சென்னையில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவியிருக்கும் அந்த நிறுவனம், பெரும் தொகை ஒன்றையும் இங்கு முதலீடு செய்ய உள்ளது.

 iPhone
iPhone

பெரும் நிறுவனங்களின் பார்வை வியட்நாம் பக்கம் திரும்ப முக்கியக் காரணம், சீனாவைப் போல உற்பத்திசெய்யும் திறனை தற்போது அது பெற்றிருப்பதே. நிலத்தின் விலை சார்ந்த பிரச்னைகள், திறன் படைத்த தொழிலாளர்கள் பற்றாக்குறை, உற்பத்திசெய்ய தேவைப்படும் பொருள்கள் போதிய அளவில் இல்லாதது எனப் பல சிக்கல்களை முன்பு கண்டிருந்தாலும் இப்போது, இதுபோன்ற முதலீடுகளை வரவேற்கும்வண்ணம் அவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தகப் போர், இந்தியாவின் பக்கமும் அமெரிக்கா நிறுவனங்களின் பார்வையைத் திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.