Published:Updated:

ஒன்ப்ளஸ் 8 கேமராக்களைப் பல மடங்கு மேம்படுத்தும் கூகுள் கேமரா! - என்ன ஸ்பெஷல்?

ஒன்ப்ளஸ் 8 கேமராக்களை பல மடங்கு மேம்படுத்தும் கூகுள் கேமரா
ஒன்ப்ளஸ் 8 கேமராக்களை பல மடங்கு மேம்படுத்தும் கூகுள் கேமரா ( XDA Developers )

ஒன்ப்ளஸ் போன்கள் டிஸ்ப்ளே, பர்ஃபாமென்ஸ் என அனைத்து அம்சங்களிலும் 'பெஸ்ட்' என்ற பெயர் எடுத்தாலும், கேமரா விஷயத்தில் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களின் போன்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும், ஒன்ப்ளஸ் போன்கள்.

ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் போன்களை சமீபத்தில் அறிமுகப் படுத்தியிருந்தது, ஒன்ப்ளஸ் நிறுவனம். இந்த போன்கள், சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கும் வந்தது. இந்த போன்களைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள, கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.

விலையில் ஐபோனை முந்தும் ஒன்ப்ளஸ்... 8 சீரிஸில் என்ன ஸ்பெஷல்? #FirstImpressions
ஒன்ப்ளஸ் 8 pro
ஒன்ப்ளஸ் 8 pro

ஒன்ப்ளஸ் போன்கள் டிஸ்ப்ளே, பர்ஃபாமென்ஸ் என அனைத்து அம்சங்களிலும் 'பெஸ்ட்' என்ற பெயர் எடுத்தாலும், கேமரா விஷயத்தில் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களின் போன்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும். இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது.

கேமரா விஷயத்தில் ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரையில் சிறந்த மென்பொருளை வைத்திருக்கும் நிறுவனம், கூகுள்தான். இதனால்தான், கூகுளின் பிக்ஸல் போன்களை 'பெஸ்ட் கேமரா போன்கள்' எனச் சொல்வார்கள். ஆனால், இந்த கூகுள் கேமரா ஆப்பை இப்போது ஒன்ப்ளஸிலும் பயன்படுத்த முடியும். இது போன்ற Gcam mods-ஐ ஒவ்வொரு போனிற்கும் ஏற்றவாறு மறுவடிவமைப்பு செய்து வெளியிடுவார்கள் டெவலப்பர்கள். இவை அதிகாரபூர்வ வெளியீடுகள் கிடையாது. அப்படித்தான் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்ப்ளஸ் 8-க்கும் இந்த ஆப் தயார் செய்யப்பட்டுள்ளது. மெயின் கேமராவுக்கு மட்டுமே இதுபோன்ற Gcam mod கிடைக்கும். ஆனால் ஒன்ப்ளஸ் 8 ப்ரோவில், மெயின் கேமரா அல்லாத கேமராக்களிலுமே இந்த ஆப் வேலை செய்யும். அதாவது, UltraWide, Telephoto கேமராக்களிலும் இதில் புகைப்படங்கள் எடுக்கமுடியும். இதுபோன்ற போர்ட் செய்யப்பட்ட ஆப்களைப் பயன்படுத்த சில போன்கள் ரூட் செய்யப்பட வேண்டியதிருக்கும். ஆனால், ஒன்ப்ளஸ் எதுவும் செய்யாமல் நேராகவே இந்த கூகுள் கேமரா ஆப்பை பயன்படுத்தலாம்.

Oneplus 8 pro Camera
Oneplus 8 pro Camera
Oneplus

ஒன்ப்ளஸ் கேமராக்கள் ஏற்கெனவே ஓரளவு நல்ல புகைப்படங்களையே எடுக்கும். ஆனால், இந்த ஆப் உதவியுடன் மிகச் சிறந்த புகைப்படங்களை எடுக்கின்றன ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் போன்கள். இந்த போர்ட் செய்யப்பட்ட GCam ஆப்பை பிரபல டெவலப்பர் 'Urnyx05' வெளியிட்டிருக்கிறார்.

இது, இன்னும் முழுமைபெறாத ஆப்தான். ஒன்ப்ளஸ் 8 ப்ரோ கலர் ஃபில்டர் கேமரா, ஒன்ப்ளஸ் 8 மேக்ரோ கேமரா ஆகியவை இன்னும் இந்த ஆப்பில் சேர்க்கப்படவில்லை. 48MP கேமராவில் RAW இமேஜ்களை இதைவைத்து எடுக்க முடியாது.12MP-ல்தான் புகைப்படங்கள் எடுக்கப்படும். ஆனால், சாதாரண கேமராவுக்கும் இதற்கும் பெரும் வித்தியாசத்தைப் பார்க்கமுடிகிறது. படங்களின் வண்ணங்கள் தெளிவாக உள்ளன, Exposure-ம் சீராக இருக்கிறது. சொல்வதைவிட நீங்களே பார்த்தால் உங்களுக்குப் புரிந்துவிடும்.

ஒன்ப்ளஸ் 8 கேமராக்களை பல மடங்கு மேம்படுத்தும் கூகுள் கேமரா
ஒன்ப்ளஸ் 8 கேமராக்களை பல மடங்கு மேம்படுத்தும் கூகுள் கேமரா
XDA Developers

மற்றும் சில சாம்பிள் புகைப்படங்களைப் பார்க்கவும், ஆப்பை பதிவிறக்கவும் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு