Published:Updated:

இன்டெர்நெட் வேகம் போதவில்லையா? இப்படி செஞ்சு பாருங்க! #GadgetTips

பெரும்பாலும் நம் ரெளட்டரை நாம் அணைப்பதே இல்லை. மாதத்துக்கு ஒரு முறையாவது ரெளட்டரை ரீஸ்டார்ட் செய்வது பல பிரச்னைகளைத் தீர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"இணையம் இல்லா வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்ல வேண்டாம்" எனச் சொல்லுமளவுக்கு அன்றாட வாழ்க்கையில் இணையம் முக்கியமான தேவையாகிவிட்டது. மாநகரவாசிகள் பலரும் டிடிஹெச்சுக்கு குட்பை சொல்லிவிட்டு இணையம் மூலமே தொலைக்காட்சியைப் பயன்படுத்தும் நாள் வந்துவிட்டது. ஹாட் ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் மட்டுமே போதுமென்கிறார்கள். லேப்டாப், மொபைல் மட்டுமே இணையம் பயன்படுத்தும் என்ற நிலையும் மாறிவிட்டது. குறைந்தது 10 கேட்ஜெட்டாவது இணையம் தேவை என்னும் காலத்திலிருக்கிறோம். அதனால், ரெளட்டரின் வேகம் முக்கியமான விஷயமாகிறது. இணையத்தின் வேகம் குறைந்தால் அவ்வளவுதான். கை ஒடிந்ததுபோல் ஆகிறோம். எப்படி நம் வைஃபை ரெளட்டரின் வேகத்தைக் கூட்டுவது, அதை நம்மால் செய்ய முடியுமா?

முடியும். இந்த டிப்ஸ்களைப் பின்பற்றிப் பாருங்கள்.

Vikatan

1. இடம்:

உங்கள் வீட்டில் வைஃபை ரெளட்டர் எங்கே இருக்கிறது எனப் பாருங்கள். வீட்டின் நடுவில் இருந்தால் நல்லது. போலவே, சற்று உயரமாக இடத்தில் இருந்தாலும் வேகம் அதிகரிக்கக்கூடும். அருகில் சுவர் இல்லாமலிருந்தால் இன்னும் நல்லது. செல்ஃப், கப் போர்டு போன்ற அடைபட்ட இடங்களில் ரெளட்டரை வைக்கவே கூடாது. ரெளட்டருக்கு அருகில் வேறு எந்த மின்னணு சாதனமும் இருக்கக் கூடாது. தொலைக்காட்சி, கணினி, மைக்ரோ வேவ்,  கார்டுலெஸ் போன்ற பொருள்கள் அருகிலிருந்தால் அவைகூட ரெளட்டரின் வேகத்தைப் பாதிக்கலாம். ப்ளுடூத் ஸ்பீக்கர்கள் கூட ரெளட்டரின் திறனைப் பாதிக்கலாம்.

2. பாஸ்வேர்டு:

அளவற்ற இணையம் என்பதால் பலர் பாஸ்வேர்டு போடாமல் ஓப்பனாக விட்டிருப்பார்கள். அதனால் ஒரே நேரத்தில் நமக்கே தெரியாமல் பல கேட்ஜெட்கள், நம் வீடு தாண்டிகூட, இணையத்தைப் பயன்படுத்தலாம். அதனாலும் வேகம் குறையலாம். பாஸ்வேர்டு போடுவது பாதுகாப்பையும் அதிகரிக்கும்.

Wifi Router
Wifi Router
Pixabay

3. ரீபூட்:

பெரும்பாலும் நம் ரெளட்டரை நாம் அணைப்பதே இல்லை. மாதத்துக்கு ஒரு முறையாவது ரெளட்டரை ரீஸ்டார்ட் செய்வது பல பிரச்னைகளைத் தீர்க்கும். சில ரெளட்டரில் ஆட்டோமேட்டிக்காகக் குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை ரீபூட் ஆகும்படி ஷெட்யூல் செய்ய முடியும். அந்த வசதி இல்லாதவர்கள் மேனுவலாக மாதம் ஒரு முறை ரீபூட் செய்யலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. சிக்னல் பூஸ்டர் அல்லது ரிப்பீட்டர்:

பெரிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த பூஸ்டர் உதவக்கூடும். இது வைஃபை பரவும் தூரத்தை அதிகரிப்பதோடு சிக்னல் பலத்தையும் கூட்ட உதவும்.

Aluminium foil
Aluminium foil

5. அப்டேட்:

ரெளட்டர்களுக்கும் மொபைல் போலவே அப்டேட் வரும். உங்கள் ரெளட்டர் அப்டேட்டாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். போலவே, 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரெளட்டர்களை இன்றைய இணைய வேகத்துக்குப் பயன்படுத்துவதும் வேலைக்காவாது. உங்கள் இன்டெர்நெட் புரொவைடர் தரும் இணைய வேகத்துக்கு ஏற்ற ரெளட்டர்தான் பயன்படுத்துகிறீர்களா என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

6. அலுமினியம் ஃபாயில்:

அலுமினியம் ஒரு நல்ல கடத்தி. அலுமினியம் ஃபாயில் வைஃபை சிக்னலை சிறப்பாகக் கடத்தும். எனவே, ரெளட்டர் ஆன்டனாவுக்கு பின்னால் நிறுத்தி வைத்தால் அதிவேகம் உறுதி.

இவ்வளவும் செய்த பின்னும் இணைய வேகம் குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் Speedtest செயலி மூலம் இணையத்தின் வேகத்தை சோதித்துப் பாருங்கள். பின், இன்னொரு மொபைல் அல்லது கேட்ஜெட் மூலமும் சோதித்துப் பாருங்கள்.

ஏதேனும் ஒரு கேட்ஜெட்டில் மட்டும் இணையம் வேகமாக இல்லையென்றால் பிரச்னை அந்த கேட்ஜெட்டில்தான். எல்லா கேட்ஜெட்டிலும் குறைவான வேகம் என்றால் உங்கள் இன்டெர்நெட் சர்வீஸ் புரொவைடரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு