Published:Updated:

ஆளப்போகும் 'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்!

'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்

எந்த இடையூறும் இல்லாத ஃபுல் வியூ டிஸ்ப்ளேவாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கித்தான் அனைத்து மொபைல் நிறுவனங்களும் பயணித்துவருகின்றன. அதன் அடுத்தகட்டம்தான் இந்த, 'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்!

ஒரு மொபைலுக்கு, அதன் டிஸ்ப்ளேதான் பிரதானம். மொபைலில் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பதும் அதுதான். அதை எந்த இடையூறும் இல்லாத ஃபுல் வியூ டிஸ்ப்ளேவாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கித்தான் அனைத்து மொபைல் நிறுவனங்களும் பயணித்துவருகின்றன. மொபைல் சந்தையைத் தொடர்ந்து கவனித்துவரும் அனைவருக்குமே அது தெரிந்திருக்கும். பல வருடங்களாகவே அந்த முயற்சி நடந்து வந்தாலும்கூட, 'நாட்ச்' என்ற விஷயம் மொபைலில் வந்த பிறகு அது வேகமெடுத்தது என்றே கூறலாம்.

நாட்ச் vs அண்டர் டிஸ்ப்ளே கேமரா
நாட்ச் vs அண்டர் டிஸ்ப்ளே கேமரா

ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவை கொடுக்க, ஒரு மொபைலில் முன்பக்கம் இருந்த பல விஷயங்களை இடம் மாற்ற வேண்டியிருந்தது. முதலில், அனைத்து சென்சார்களும் ஸ்கிரீனுக்கு அடியில் செல்லத் தொடங்கின. அடுத்ததாக, முன்னால் இருந்த ஸ்பீக்கரும் மறைந்தது. அதன்பிறகும் மிச்சம் இருந்த ஒரு விஷயம் கேமராதான். பாப்-அப் வந்து அதற்கும் விடுதலைகொடுத்தாலும் அதில் சில குறைபாடுகள் இருந்தன. பாப்-அப், ஃப்ளிப், ரொட்டேட்டபிள் எனப் பல அமைப்புகள் வந்தாலும்கூட, ஃபிரன்ட் கேமராவுக்கு ஒரு சரியான இடம் என்பது கிடைக்கவில்லை. தற்போது, அதற்கு வழி கண்டுபிடித்திருக்கின்றன சீன நிறுவனங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
LED வகை டிஸ்ப்ளேக்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஏனெனில், இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டுவந்த IPS டிஸ்ப்ளேக்கள் மட்டுமே இருந்திருந்தால் எந்த முன்னேற்றமும் இருந்திருக்காது.
'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்
'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்

கடந்த மாதம் ஓப்போ நிறுவனம், அண்டர் கிளாஸ் கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டதாக அறிவித்தது. அதன் பிறகு, சிறிது நேரத்திலேயே ஷியோமியும் அதே போல ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்தது. ஒரு வகையில் இதற்கு விதை போட்டது சாம்சங்காகத்தான் இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர், இது போன்ற இன் டிஸ்ப்ளே கேமராவை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக சாம்சங் தெரிவித்திருந்தது. கிட்டத்தட்ட அந்த முயற்சியில் வெற்றிபெற்ற பின்னரே அந்தத் தகவலை சாம்சங் வெளியிட்டிருக்கும் என நம்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களுக்கும் அந்த டிஸ்ப்ளேவை கொடுத்திருக்கலாம். காரணம், மொபைல்களுக்கான LED டிஸ்ப்ளேக்களைத், தயாரிப்பதில் சாம்சங் நிறுவனமே உலகில் முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் சாம்சங் தயாரிக்கும் டிஸ்ப்ளேவைத்தான் வாங்கிப் பயன்படுத்துகின்றன. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல நிறுவனங்கள் இதைப் பற்றி பேசி வந்தாலும், ஓப்போதான் ஒருபடி மேலே போய், அதன் மாதிரியை உலகுக்கு முதல் முறையாகக் காட்டியிருக்கிறது. அண்டர் கிளாஸ் கேமரா தொழில்நுட்பத்தைக்கொண்ட ஒரு மொபைலை ஷாங்காய் நகரில் நடந்து முடிந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைத்திருந்தது. அதன் செயல்பாட்டைப் பார்த்து பலரும் வியந்துபோயிருக்கிறார்கள்.

'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்
'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்

எப்படி செயல்படுகிறது இந்த டிஸ்ப்ளே?

நீண்டகாலமாக, கனவாக மட்டும் இருந்துவந்த இந்த தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தியதில் LED வகை டிஸ்ப்ளேக்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஏனெனில், இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டுவந்த IPS டிஸ்ப்ளேக்கள் மட்டுமே இருந்திருந்தால் எந்த முன்னேற்றமும் இருந்திருக்காது. பெரும்பாலான டிஸ்பிளேக்கள் அனைத்தும் ஒரு பக்கம் மட்டுமே ஒளி புகும் தன்மையைக்கொண்டவை. உள்ளே இருந்துவரும் ஒளியை வெளியே அனுப்புமே தவிர, வெளியிலிருந்து வரும் ஒளியை உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. அந்த இடத்தில்தான் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்ட டிஸ்பிளேக்கள் வேறுபடுகின்றன. அண்டர் கிளாஸ் கேமரா தொழில்நுட்பத்தில் இருக்கும் டிஸ்பிளேக்கள், இருபுறமும் ஒளிபுகும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.

டிஸ்ப்ளேவுக்குக் கீழே இருக்கும் கேமராவுக்கு ஒளிதான் அவசியம். ஆனால், ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஸ்கிரீன் வழியே வெளியிலிருந்து ஒள் உள்ளே செல்வதற்கு வாய்ப்பில்லை. ஆதலால், கேமரா இருக்கும் பகுதிக்கு நேராக ஒரு ஒளி கடத்தும் தன்மை வாய்ந்த பகுதி இருக்கும். அது, கேமராவுக்கு வெளியிலிருந்து வரும் ஒளியை அனுமதிக்கிறது. எனவே, கேமராவும் எப்போதும் போல் செயல்படுகிறது. இது, தற்போது தொடக்க நிலையில் இருப்பதால் கேமரா இருக்கும் பகுதி ஸ்கிரீனுக்கு மேல் சற்று வித்தியாசமாகத் தெரியும். மேலும் ஒளியானது, லென்ஸுக்கு செல்வதற்கு முன்னால் டிஸ்பிளேவின் ஒரு அடுக்கைக் கடந்துசெல்லும் என்பதால், போட்டோக்கள் சற்று தெளிவில்லாமல் இருக்கலாம். நிறுவனங்கள் அந்தக் குறையை மென்பொருளை வைத்து தற்காலிகமாகச் சரிசெய்யக்கூடும்.

'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்
'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்

இது முதல்படிதான். அடுத்தடுத்து இது மேம்படுத்தப்படும். ஆப்பிள், சாம்சங் எனப் பெரிய நிறுவனங்களுக்கு முன்னால் இது சீன நிறுவனங்களின் கையில் இப்போது இருக்கிறது. ஒரு புதிய தொழில்நுட்பத்தை வேகமாகவும் அதே சமயத்தில் விலை குறைவாகவும் மக்களிடையே கொண்டுசெல்வதில் அந்நிறுவனங்கள் அதிகமாக ஈடுபாடு காட்டுபவை. எனவே, இந்த அண்டர் கிளாஸ் கேமராவை கூடிய விரைவில் சந்தையில் பார்க்கலாம்.