Published:Updated:

`மாஸ்க்குடன் ஃபேஸ் அன்லாக் செய்வதில் சிக்கல்!' - தீர்வு தரும் ஐபோன் அப்டேட்

மாஸ்க்
மாஸ்க்

இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் பணி நேரத்தின் போது முகக் கவசத்தைக் கழற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது.

ஆப்பிள் ஐபோனின் ஐஓஎஸ் 13.5 அப்டேட் இன்னும் சிறிது நாள்களில் வெளிவரவுள்ளது. இந்தப் புதிய அப்டேட்டில் முகக் கவசம் அணிந்துகொண்டே மொபைலை அன்லாக் முடியும். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அனைவரும் முகக் கவசங்களுடனேயே வெளியில் செல்கின்றனர். இப்படிப்பட்ட சூழலால் ஆப்பிள் ஐபோனைப் பயன்படுத்துபவர்கள் முகக் கவசம் அணிந்து ஃபேஸ் ஐடி பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யும் வசதியைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

ஆப்பிள் ஐபோன் | Iphone
ஆப்பிள் ஐபோன் | Iphone
AP / Kathy Willens

இந்தப் பிரச்னைக்கு அடுத்த ஐஓஎஸ் அப்டேட்டில் தீர்வுகாணப்படும் எனச் சொல்லப்பட்டது. அந்த அப்டெட்டின் பீட்டா வெர்ஷன் இப்போது டெவலப்பர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் ஃபேஸ் ஐடியைப் பயன்படுத்தும் போது மாஸ்க் அணிந்திருப்பது தெரிந்தால் தானாகவே பாஸ்வேர்டு பின் கேட்கும். அதைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்துகொள்ளலாம். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் பணி நேரத்தின் போது முகக் கவசத்தைக் கழற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது.

இதோடு முன்பு தெரிவித்திருந்தபடி கூகுளுடன் இணைந்து ஆப்பிள் முன்னெடுக்கும் கான்டக்ட் ட்ரெஸிங்கிற்கான API-ம் இதில் இடம்பெறும். இதுகுறித்து விரிவாக கீழ்க்காணும் கட்டுரையில் படியுங்கள்!

கொரோனாவுக்கு எதிராகக் கைகோக்கும் ஆப்பிள் - கூகுள் கூட்டணி! இது எந்தளவுக்குப் பலன் தரும்? #LongRead

இந்தியாவில் உள்ள 'கான்டக்ட் ட்ரெஸிங்' செயலியான ஆரோக்கிய சேதுவில் இது சேர்க்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுபோக பல சிறு சிறு கோளாறுகள் இந்த அப்டேட்டில் சரிசெய்யப்படும். இந்த அப்டேட்டை ஐபோன் பயனாளர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு