Published:Updated:

புதிய அப்டேட்களுடன் ஆப்பிளின் `Unleashed' நிகழ்வு... என்னென்ன அறிவிப்புகள்?!

கடந்த செப்டம்பர் மாத நிகழ்வில் எந்தெந்த கேட்ஜெட்ஸ் எல்லாம் மிஸ் ஆனதோ, அவற்றுக்கான அப்டேட்டை எல்லாம் இந்த அன்லீஷ்டு நிகழ்வில் அறிவித்திருக்கிறது ஆப்பிள்.

WWDC-ஐ தவிர்த்து வருடம் மூன்று சிறப்பு நிகழ்வுகளையாவது நடத்திவிடுவது ஆப்பிளின் வழக்கம். ஒவ்வொரு நிகழ்விலும் ஆப்பிள் என்ன தொழில்நுட்பத்தை அல்லது கேட்ஜெட்டை வெளியிடப் போகிறது என்பதைப் பார்ப்பதற்காகவே உலகம் முழுவதும் காத்திருப்பார்கள் ஆப்பிள் ரசிகர்கள். அவர்கள் மட்டுமின்றி ஆப்பிள் புதிதாக என்ன செய்யவிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மற்றவர்களும் ஆர்வமாகவே இருப்பார்கள். அதேபோல், ஒவ்வொரு வருடமும் கேட்ஜெட்களுடன் சேர்ந்து விலையும் ஏறும்.

Apple Unleashed Event
Apple Unleashed Event

இந்த வருடம் ஏப்ரலில் 'ஸ்பிரிங் லோடட்' நிகழ்வையும், ஜூனில் WWDC-யையும், கடந்த செப்டம்பர் மாதம்தான் 'கலிபோர்னியா ஸ்ட்ரீமிங்' நிகழ்வையும் நடத்தி முடித்தது ஆப்பிள். சரியென்று மூச்சு விடுவதற்குள் 'அன்லீஷ்டு' (Unleashed) நிகழ்வுடன் அக்டோபரில் எண்ட்ரி கொடுத்திருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் ஈவன்டின் ஸ்டைலே, ஒரு பெரிய அப்டேட் அதனுடன் கொஞ்சம் குட்டி குட்டி அப்டேட்கள் மற்றும் ஒரு சின்ன சர்ப்ரைஸ் அப்டேட் என்பதாகத்தான் இருக்கும். இந்த அன்லீஷ்டு ஈவண்டில் என்னென்ன அப்டேட்களை அள்ளிப் போட்டு வந்திருக்கிறது ஆப்பிள்? பார்க்கலாம்.

கடந்த செப்டம்பர் மாத நிகழ்வில் எந்தெந்த கேட்ஜெட்ஸ் எல்லாம் மிஸ் ஆனதோ, அவற்றுக்கான அப்டேட்டை எல்லாம் இந்த அன்லீஷ்டு நிகழ்வில் அறிவித்திருக்கிறது ஆப்பிள்.

M1 Pro மற்றும் M1 Max:

புதிய சிப்செட்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என நாம் எதிர்பார்த்திருக்க, ஆப்பிளின் M1 சிப்செட்டின் அப்டேட் செய்து M1 சிப்செட்டின் வெர்ஷன்கள் போல் M1 Pro மற்றும் M1 Max ஆகிய இரண்டு சிப்செட்களை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். 33.7 மில்லியன் ட்ரான்சிஸ்டர்கள் மற்றும் 10-கோர் CPU டன் M1 சிப்பை விட 70 சதவிகிதம் வேகமான சிபியூ பெர்ஃபாமன்ஸை M1 Pro வெளிப்படுத்தும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். அதோடு முந்தைய சிப்பை விட 70 சதவிகிதம் குறைவான ஆற்றலையே உபயோகிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

M1 Chips
M1 Chips

ஆப்பிளின் ஹை-எண்ட் சிப்செட் என்ற பெருமையை தட்டிச் செல்கிறது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் M1 Max. 57 பில்லியன் ட்ரான்சிஸ்டர்கள், 10-கோர் CPU மற்றும் 32-கோர் GPU உடன் M1 சிப்பை விட நான்கு மடங்கு வேகமான கிராபிக்ஸ் பெர்ஃபாமன்ஸை இந்தப் புதிய M1 Max சிப்செட் கொண்டிருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். அதோடு இந்த Max சிப்செட் 40 சதவிகிதம் குறைவான ஆற்றலையே உபயோகிக்குமாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

MacBook Pro:

இந்த ஆப்பிள் நிகழ்வின் ஹைலைட்டே இந்த மேக்புக் ப்ரோதான். இரண்டு அளவுகளில் மேற்கூறிய இரண்டு சிப்களுடன் மேக்புக்கை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். இந்த மேக்புக்குகளில் சர்ப்ரைஸ் என டிஸ்ப்ளேவின் மேல்பகுதியில் மொபைலில் இருப்பது போன்றே ஒரு நாட்ச்சையும் வைத்து அனுப்பியிருக்கிறது ஆப்பிள். 'ஐபோன்லையே எப்போ நாட்ச் எடுப்பீங்கனு கேட்டுட்டு இருக்கோம், இப்போ மேக்புக்லையுமா' என்பதே ஆப்பிள் ரசிகனின் மைன்ட்வாய்ஸாக இருக்கும். ஆனால், 1080p வெப்கேமுடன் மேக்புக் வருகிறது என்பது நாட்ச்சிற்கான ஆறுதல். முந்தைய 13 இன்ச் டிஸ்ப்ளேக்களை ஓரம்கட்டி வைத்து விடலாம். புதிதாக 14 மற்றும் 16 இன்ச் டிஸ்ப்ளேக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். ஸ்டான்டர்டாக 512 GB SSD-யில் தொடங்குகிற ஸ்டோரேஜ் வசதி 8 TB வரை கான்ஃபிகர் செய்து கொள்ளும் வசதியோடு இருக்கிறது.

MacBook Pro
MacBook Pro

HDMI போர்ட் மற்றும் SD கார்டு ரீடர் ஆகியவற்றை இந்த மேக்புக்குக்கு அழைத்து வந்திருக்கிறது ஆப்பிள். சார்ஜிங்கிற்கு MagSafe 3 கனெக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. தண்டர்போல்ட் 4 போர்ட்ஸும் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிஸ்ப்ளே, லிக்விட் ரெட்டினா XDR. ஸ்டான்டர்டாக 14-கோர் GPU-உடன் வருகிறது, 32 கோர் GPU வரை கான்ஃபிகர் செய்து கொள்ளலாம். குறைந்தபட்ச ஸ்பெசிபிகேஷன்களுடன் 1,94,900 ரூபாய் விலையில் தொடங்கி அதிகபட்சமாக 3,29,900 ரூபாய் வரையான விலையில் வெளியாகியிருக்கிறது மேக்புக் ப்ரோ. நாம் தேர்ந்தெடுக்கும் அளவு, CPU கோர், GPU கோர், ஸ்டோரோஜ் ஆகியவற்றுக்கு ஏற்ப விலை மாறும்.

AirPods, HomePod மற்றும் Apple Music:

3rd Gen ஏர்பாட்ஸை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இந்தப் புதிய ஏர்பாட்ஸில் ஸ்பேஷியல் ஆடியோவை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள். மிகவும் முக்கியமான மற்றும் தேவையான அப்டேட்டாக பேட்டரி லைஃபை இந்த ஏர்பாட்ஸில் அதிகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். தொடர்ந்து ஆறு மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் 30 மணி நேரமும் இந்த ஏர்பாட்ஸைப் பயன்படுத்த முடியும். வரவேற்கத்தக்க அப்டேட். 18,500 ரூபாய் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த 3rd Gen ஏர்பாட்ஸ்.

Apple AirPods
Apple AirPods

இதுவரை ஸ்பேஸ் க்ரே மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டும் இருந்து வந்த ஆப்பிளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களான ஹோம்பாட்ஸ் இனி மஞ்சள், ஆரஞ்சு மற்றும் நீல நிறத்திலும் கிடைக்கும். விலை: 9,900 ரூபாய்

ஆப்பிள் மியூசிக்குக்கான வாய்ஸ் ப்ளான் என்ற ஆப்ஷனையும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இதன் மூலம் ஆப்பிள் மியூசிக்கை ஆப்பிளின் AI-யான சிரியைக் கொண்டு பயன்படுத்த முடியும். மாதம் 49 ரூபாய் விலையில் இந்த வாய்ஸ் ப்ளானிற்கு சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளலாம்.

இந்த ஆப்பிள் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட கேட்ஜெட்களில் உங்களுக்குப் பிடித்த கேட்ஜெட் எது?! கமென்ட்ல சொல்லுங்க.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு