Published:Updated:

மேக் ஸ்டூடியோ, ஐபோன் SE, M1 அல்ட்ரா சிப் - Apple Peak Performance நிகழ்வில் வெளியான புதிய அப்டேட்ஸ்!

ஆப்பிள் | Apple

நேற்றைய 'Peak Performance' நிகழ்வில் என்னென்ன அப்டேட்களை அள்ளித் தெளித்திருக்கிறது ஆப்பிள்? விவரங்கள் இதோ...

மேக் ஸ்டூடியோ, ஐபோன் SE, M1 அல்ட்ரா சிப் - Apple Peak Performance நிகழ்வில் வெளியான புதிய அப்டேட்ஸ்!

நேற்றைய 'Peak Performance' நிகழ்வில் என்னென்ன அப்டேட்களை அள்ளித் தெளித்திருக்கிறது ஆப்பிள்? விவரங்கள் இதோ...

Published:Updated:
ஆப்பிள் | Apple

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் புதிய அப்டேட்கள் மற்றும் புதிய அறிமுகங்களோடு கண்டிப்பாக ஒரு நிகழ்வை ஆப்பிள் நடத்திவிடும். இந்த ஆண்டும் மார்ச் மாதம் ஆப்பிள் என்ன செய்யப்போகிறது என ரசிகர்கள் காத்திருக்க, அவர்களை ஏமாற்றாத வகையில் நேற்று புதிய நிகழ்வு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது ஆப்பிள்.

2022-ஐ 'Peak Performance' நிகழ்வோடு தொடங்கியிருக்கிறது ஆப்பிள். புதிய ப்ராசஸர், புதிய பட்ஜெட் ஐபோன் மற்ற சிறிய அப்டேட்கள் என இந்த நிகழ்விலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த ஆப்பிள் சில விஷயங்களை வைத்திருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. நேற்றைய 'Peak Performance' நிகழ்வில் என்னென்ன அப்டேட்களை அள்ளித் தெளித்திருக்கிறது ஆப்பிள்?

ஆப்பிள் M1 Ultra:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

M1 Ultra
M1 Ultra

கடந்த ஆண்டு நடந்த அன்லீஷ்டு நிகழ்வை ஆப்பிள் ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். அந்த நிகழ்வில் ஆப்பிளின் முந்தைய M1 சிப்போடு, பெர்ஃபாமன்ஸை அதிகமாகக் கொண்ட M1 Pro மற்றும் M1 மேக்ஸ் என் இரண்டு புதிய சிப்களை அறிமுகப்படுத்தியிருந்தது ஆப்பிள். தற்போதும் அதே போல M1 லைன்அப்பில் புதிதாக M1 Ultra சிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். திரையை விலக்கிவிட்டுப் பார்த்தால் அடிப்படையில் இரண்டு M1 Max சிப்களை இணைத்து M1 Ultra சிப்பாக உருவாக்கியிருக்கிறது ஆப்பிள். M1 Max சிப்பில் இருக்கக்கூடிய ஸ்பெசிபிகேஷன்கள் அனைத்தும் இரண்டு மடங்காக இந்த M1 Ultra சிப்பில் இருக்கின்றன, 20 CPU கோர்கள், 64 GPU கோர்கள் மற்றும் 128 GB ரேம் ஆகிய அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது M1 Ultra. ஸ்டாண்டர்டான் M1 சிப்பைவிட 8 மடங்கு அதிக திறன் கொண்டதாக இந்த M1 Ultra சிப் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.

இந்தப் புதிய சிப்பை முதல் முறையாக மேக் ஸ்டூடியோவில் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். மேக் ஸ்டூடியோவையும் இந்த நிகழ்வில் ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அது குறித்து கீழே விரிவாகப் பார்க்கலாம். மேக் ஸ்டூடியோவில் மட்டுமல்லாது அடுத்த ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கும் மேக் ப்ரோவிலும் இந்த M1 Ultra சிப் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேக் ஸ்டூடியோ (Mac Studio):

Mac Studio
Mac Studio

ஆப்பிளின் மேக் லைன்-அப்பில் புதிய வரவு மேக் ஸ்டூடியோ. மேக் மினியின் பவர்ஃபுல் வெர்ஷன் என இதனை வைத்துக் கொள்ளலாம். இந்த மேக் ஸ்டூடியோவில்தான் M1 Ultra சிப்பை முதன் முறையாகப் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். மேக் மினியின் பெரிய வெர்ஷன் போல இருக்கும் இந்த மேக் ஸ்டூடியோவானது ஆப்பிளின் டாப் எண்டு மேக் ப்ரோவை விட வேகமான திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.

M1 Ultra சிப் மட்டுமல்லாமல் M1 Max சிப் கொண்ட மேக் ஸ்டூடியோவையும் வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். இரண்டு சிப்களைக் கொண்ட மேக் ஸ்டூடியோவிலும் 8 TB வரை ஸ்டோரேஜ் கான்பிகரேஷன் செய்யும் வசதியைக் கொடுத்திருக்கிறது ஆப்பிள். மேலும், ஒரே நேரத்தில் ஐந்து திறைகளை இந்த மேக் ஸ்டூடியோவில் இணைத்துப் பயன்படுத்த முடியும். நான்கு 6k ரெசொல்யூஷன் கொண்ட திறைகளையும், ஒரு 4K ரெசொல்யூஷன் கொண்ட திரையையும் ஒரே நேரத்தில் இந்த மேக் ஸ்டூடியோவில் இணைத்துப் பயன்படுத்த முடியும்.

விலை:

M1 Max சிப் கொண்ட மேக் ஸ்டூடியோ: 1,89,900 ரூபாய்

M1 Ultra சிப் கொண்ட மேக் ஸ்டூடியோ: 3,89,900 ரூபாய்

ஆப்பிள் ஸ்டூடியோ டிஸ்ப்ளே:

Studio Display
Studio Display

மேக் ஸ்டூடியோவுடன் பயன்படுத்தும் விதமாக புதிய 27 இன்ச் 5K திரையையும் நேற்றைய நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். 2016-லேயே தண்டர்போல்ட் டிஸ்ப்ளேக்களின் தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்தியது ஆப்பிள். 2019 WWDC நிகழ்வில் 4.50 லட்சத்திற்கும் மேல் விலையுள்ள XDR டிஸ்ப்ளேவை அறிமுகப்படுத்தியது. ஆனால், விலை குறைவாக இருக்கக்கூடிய, அனைத்துப் பயனர்களும் பயன்படுத்தக்கூடிய டிஸ்ப்ளேவை ஆப்பிள் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். தற்போது இந்த 5K ஸ்டூடியோ டிஸ்ப்ளேவின் மூலம் அந்தக் குறையைப் போக்கியிருக்கிறது ஆப்பிள். ஸ்டாண்டர்டு மற்றும் நானோ டெக்ஸ்சர் என இரண்டு கிளாஸ் ஆப்ஷன்கள் மற்றும் மூன்று வகையான டிஸ்ப்ளே ஸ்டாண்டு ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது ஆப்பிளின் இந்தப் புதிய டிஸ்ப்ளே.

விலை: 1,59,900 ரூபாய்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆப்பிளின் புதிய ஐபோன் SE:

Iphone SE
Iphone SE

ஆப்பிளின் பட்ஜெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த, அப்டேட் செய்யப்பட்ட புதிய ஐபோன் SE மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். ஐபோன் 13 சீரிஸில் பயன்படுத்தப்பட்ட அதே A15 பயானிக் சிப்பைத்தான் இந்த ஐபோன் SE-யிலும் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். முக்கியமாக 5G வசதியுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய ஐபோன் SE. 4.7 இன்ச் ஸ்கிரீன், முந்தைய SE-யைப் போலவே இதிலும் பெஸல்ஸ் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. முந்தைய SE-யை விட பேட்டரி கொஞ்சமே கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. டச் ஐடி, Qi வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய வசதிகள் இந்த SE-யிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. IP67 ரேட்டிங் இருக்கிறது.

விலை:

64 GB ஸ்டோரேஜ் - 43,900 ரூபாய்

128 GB ஸ்டோரேஜ் - 48,900 ரூபாய்

256 GB ஸ்டோரேஜ் - 58,900 ரூபாய்

புதிய ஐபேடு ஏர்:

Ipad Air
Ipad Air

புதிய சிப் கொண்ட புதிய ஐபேடு ஏர் வெர்ஷனை நேற்றைய பீக் பெர்ஃபாமன்ஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். பயானிக் சிப்களை விட வேகமான, ஆப்பிளின் மேக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்த M1 ப்ராசஸரை ஐபேடு ஏருக்கும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். முன்னதாக இதே சிப்பை ஐபேடு ப்ரோவுக்கும் ஆப்பிள் கொடுத்திருந்தது. மேலும், இந்தப் புதிய ஏரானது 5G வசதியுடனும் வெளியாகியிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் M1 ப்ராசஸரானது, முன்னதாக இதில் பயன்படுத்தப்பட்ட A14 பயானிக் சிப்பைவிட 60 சதவிகிதம் வேகமாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். செல்ஃபி கேமராவும் 7 MP-யில் இருந்து 12 MP-யாக உயர்ந்திருக்கிறது.

விலை:

64 GB ஸ்டோரேஜ், வை-பை மட்டும் - 54,900 ரூபாய்

64 GB ஸ்டோரேஜ், வை-பை + செல்லுலார் - 68,900 ரூபாய்

256 GB ஸ்டோரேஜ், வை-பை மட்டும் - 68,900 ரூபாய்

256 GB ஸ்டோரேஜ், வை-பை + செல்லுலார் - 82,900 ரூபாய்

மற்ற அறிவிப்புகள்:

ஐபோன் 13 சீரிஸூக்குப் புதிதாக அல்பைன் கிரீன் கலர் ஸ்கீமையும் நேற்றைய நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். அடுத்த வாரம் முதல் iOS 15.4-யும் பயனர்களின் பயன்பாட்டுக்கு வெளியிடவிருக்கிறது ஆப்பிள். ஜனவரி முதலே சோதனை செய்யப்பட்டு வந்த இந்தப் புதிய சாப்ட்வேர் அப்டேட் ஆப்பிள் பயனர்களின் பயன்பாட்டுக்கு வெளியாகவிருக்கிறது. மாஸ்க்குடனே பயன்படுத்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ் ஐடி, டேப் அண்ட் பே உள்ளிட்ட அப்டேட்களை இந்த iOS 15.4-ல் வழங்கியிருக்கிறது ஆப்பிள். மேலும், இன்டெல்லை அடிப்படையாகக் கொண்ட 27-இன்ச் ஐமேக்கின் விற்பனையையும் சத்தமில்லாமல் நிறுத்தியிருக்கிறது ஆப்பிள்.

இந்த பீக் பெர்ஃபாமன்ஸ் நிகழ்வைப் பொருத்தவரை ஆப்பிள் கொடுத்த அப்டேட்கள் இவ்வளவுதான். இதில் உங்களுக்குப் பிடித்த அப்டேட் எதுவென்று கமென்ட் பாக்ஸில் சொல்லுங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism