Election bannerElection banner
Published:Updated:

விவோ V19: குறையும் விலை - சீன எதிர்ப்பு மனநிலை காரணமா?

விவோ V19
விவோ V19

ஆன்லைன் தளங்கள் மட்டுமல்லாமல் ஆஃப்லைன் மார்க்கெட்டிலும் இதன் விலை குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது விவோ தரப்பு

இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான விவோ V19 ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்திருக்கிறது அந்த நிறுவனம். தொடரும் சீன எதிர்ப்பு மனநிலை, மிட்ரேஞ்ச் ஏரியாவில் ஒன்ப்ளஸ் என்ட்ரி என இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன டெக் வட்டாரங்கள்.

27,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த இந்த மாடல் (8GB RAM + 128GB வேரியன்ட்) தற்போது 24,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 3,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் 8GB RAM + 256GB வேரியன்ட்டின் விலை 4,000 ரூபாய் குறைக்கப்பட்டு 27,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

விவோ V19
விவோ V19

விவோவின் இணையதளம், ஃப்ளிப்கார்ட், அமேசான் என ஆன்லைன் தளங்கள் மட்டுமல்லாமல் ஆஃப்லைன் மார்க்கெட்டிலும் இதன் விலை குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது விவோ தரப்பு. சரி விவோ V19-ல் இருக்கும் அம்சங்கள் என்ன?

விவோ: `அசத்தலான கேமரா ஆப்ஷன்கள்!’ - இந்தியாவில் வெளியாகிறது X50 சீரிஸ்

விவோ V19 ஸ்பெக்ஸ்:

6.44-இன்ச் full-HD+ (1,080x2,400 pixels) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

ஸ்னாப்டிராகன் 712 புராசஸர்

48 MP + 8 MP (அல்ட்ரா-வைடு) + 2 MP (மேக்ரோ) கேமரா

32 MP + 8 MP செல்ஃபி கேமரா

4,500 mAh பேட்டரி

33W ஃபாஸ்ட் சார்ஜிங்

இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு