Published:Updated:

விவோ: `அசத்தலான கேமரா ஆப்ஷன்கள்!’ - இந்தியாவில் வெளியாகிறது X50 சீரிஸ்

விவோ X50 சீரிஸ்
விவோ X50 சீரிஸ்

ஏற்கெனவே சீனாவில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள், அதே ஸ்பெக்ஸுடன்தான் இந்தியாவிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

விவோ X50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜூலை 16-ம் தேதி மதியம் 12 மணி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது விவோ நிறுவனம். ஏற்கெனவே சீனாவில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அதே ஸ்பெக்ஸுடன்தான் இந்தியாவிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரிஸில் விவோ X50 மற்றும் விவோ X50 Pro என இரு ஸ்மார்ட்போன் மாடல்களை விவோ நிறுவனம் வெளியிடுகிறது. சீனாவில் விவோ X50 8 GB RAM / 128 GB வேரியன்ட் விலை 2,498 யுவான் (தோராயமாக ரூ. 37,000), 8 GB RAM/ 256 GB வேரியன்ட் விலை 3,898 யுவான் (தோராயமாக ரூ.41,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவோ X50 சீரிஸ்
விவோ X50 சீரிஸ்

விவோ X50 Pro 8 GB RAM/ 128 GB வேரியன்ட் 4298 யுவான் (தோராயமாக ரூ.45,500) எனவும் 8 GB RAM/ 256 GB வகை மொபைலுக்கு 4698 யுவான் (தோராயமாக ரூ.49,500) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதை விட சற்றே குறைவான விலையில்தான் இவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்

என்ன எதிர்பார்க்கலாம்?

சீனாவில் இவை என்ன ஸ்பெக்ஸுடன் வெளியாகின என்பதைப் பார்ப்போம்.

விவோ X50 - 6.56 இன்ச் ஃபுல் HD+ AMOLED (2,376 × 1080 pixels) கொண்ட டிஸ்ப்ளேயை கொண்டது. இது Adreno 620 GPU உடன் Qualcomm Snapdragon 765G ப்ராஸசர் கொண்டு இயங்கும். கூகுளின் ஆண்ட்ராய்டு 10 மேல் கட்டமைக்கப்பட்ட விவோவின் சொந்த FunTouch OS 10.5 skin உடன் இயங்கும் இது. பேட்டரி 4,200mAh, இதனுடன் 33W வேகமான சார்ஜிங்கிற்கான சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ X50 Pro, மேற்கண்ட வசதிகளோடு கூடுதலாக HDR 10+ support கொண்டுள்ளது. மேலும் 4200 mAh-க்கு பதில் 4315 mAh பேட்டரி கொண்டுள்ளது.

விவோ X50 ப்ரோ Gimbal camera
விவோ X50 ப்ரோ Gimbal camera

X50-ன் கேமராவை பொறுத்தமட்டில் நான்கு கேமராக்களை கொடுக்கப்பட்டிருக்கிறது. 48 MP மெயின் கேமராவுடன், 13 MP Portrait Camera, 8MP wide-angle lens மற்றும் 5MP macro lens ஆகியவை வருகிறது. இந்தப் பின்பக்க கேமராவில் 20x டிஜிட்டல் ஜூம் வசதி, Four axis OIS, EIS ஆகியவை இருக்கும். செல்பி கேமரா 32MP.

X50 Pro-வில் மேற்கூறிய அனைத்து வசதிகளுடன் gimbal camera வசதி உள்ளது. இதனால் 'ஷேக்' எதுவம் இல்லாமல் இதில் உங்களால் வீடியோக்களை பதிவுசெய்ய முடியும்.

அடுத்த கட்டுரைக்கு