Published:Updated:

மீண்டும் சாதாரண போனுக்கு மாறினால் வாழ்க்கை எப்படி இருக்கும்? #FunRead

Feature Phone | சாதாரண போன்
Feature Phone | சாதாரண போன்

இப்படி ஏன் நடக்கப்போகிறது என்ற லாஜிக் கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள்.

500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பால் இந்தியாவே அதிர்ந்தது. அதிலிருந்துகூட ஓரளவு மீண்டு வந்துவிட்டோம். ஆனால், ஓர் அறிவிப்பு வந்தால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியாது. அப்படி என்ன அறிவிப்பு என்கிறீர்களா?

Vikatan

'இனி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை, பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து சாதாரண போன்களை வாங்கிக்கொள்ளுங்கள்!' என்று அரசு அதிரடியாக அறிவிக்கிறது. அது ஏன் அறிவிக்கப்போகிறது என்ற லாஜிக் கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். அப்படி நடந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனைதான். என்னவெல்லாம் நடக்கும்.

வாட்ஸ்அப் குருப்களுக்கு ஒரு கும்பிடு!

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

24 மணி நேரமும் ஹாஸ்பிட்டல், ஏடிஎம் உள்ளிட்டவை செயல்படுகின்றனவோ இல்லையோ வாட்ஸ்அப் குருப்கள் எப்போதுமே ஆக்டிவாகத்தான் இருக்கின்றன. இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இருக்கும் குருப்களைவிட, முகம் அறியாத, முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குருப்கள்தான் களைகட்டுகின்றன. ஸ்மார்ட்போன் இல்லையென்றால் அதில் தினமும் வரும் ஆயிரக்கணக்கான ஃபார்வர்டு வீடியோக்கள், 'தமிழனாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்' ரக மெசேஜ்களின் தொல்லை இல்லாமல் இருக்கலாம்.

பிரைவசியை நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

பிரைவசி
பிரைவசி

வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்களை வேவு பார்ப்பதற்கு என்றே சில நிறுவனங்கள் இயங்குகின்றன. சமீபத்தில் இது குறித்த சர்ச்சை எழுந்தது. ஃபேஸ்புக்கும் நம் தகவல்களைக் கசிய விட்டது. இதுவே, சாதாரண போனுக்குச் சென்றுவிட்டால் ஏதோ ஒரு டெக் நிறுவனம் நமக்குத் தெரியாமல் கேமரா, மைக் மூலம் நம்மை உளவு பார்க்கிறது என்ற டென்ஷன் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.

ரிலேஷன்ஷிப் ஸ்மூத்தா இருக்கும்

ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்

"நான் உனக்கு வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணேன், நீ ஆன்லைன்ல தான் இருந்த, ஆனா அதைப் பார்க்க உனக்கு 5 நிமிஷம் தேவை" என்ற கோபங்கள் முதல் "ப்ளூ டிக் வந்தும் நீ ரிப்ளை பண்ணல, உனக்கு அவ்வளவு திமிராகி போயிருச்சுல" என்ற அதட்டல் வரை எதுவும் சாதாரண போன் பயன்படுத்தினால் இருக்காது. சாதாரண போனில் மெசேஜ் அனுப்பி பார்க்கவில்லை என்றால்கூட உண்மையான காரணம் சொல்லி விளக்கலாம். இதனால் நட்பு, காதல் என அனைத்தும் சுமுகமாக இருக்கும். கல்யாணத்துக்குக்கூட ஸ்மார்ட்போனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் வேட்டு வைத்திருக்கின்றன.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்க மாட்டோம்.

PUBG
PUBG

மது, புகைக்கு அடிமையாக இருப்பவர்களைவிட ஸ்மார்ட் போனுக்கு அடிமையாக இருப்பவர்கள்தான் இன்று அதிகம். ஒவ்வொரு 5 நிமிடமும் நோட்டிஃபிகேஷன் எதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பது, 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பது என ஸ்மார்ட்போனுடன் ஒன்றி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம். இது சாதாரண போனுக்கு மாறினால் இருக்காது. PUBG-க்கு அடிமையாக இருக்க மாட்டோம். Snake கேம் வேண்டுமானால் ஆடுவோம். மத்தபடி SMS, கால்ஸ் மட்டும்தான்.

போ(ன்)னால் போகட்டும் போடா!

Mobile theft
Mobile theft
Pixabay

ஸ்மார்ட் போன் திருட்டு போனால் அவ்வளவுதான். பேடிஎம், கூகுள் பே, இ-பேங்க்கிங் ஆப்கள் என ஒரு குட்டி சுவிஸ் வங்கியே ஸ்மார்ட்போனுக்குள் இருக்கும். அவை தவிர, நம் போட்டோக்கள், பல முக்கிய தகவல்கள் இருக்கும். அனைத்தும் கைவிட்டுப் போய்விடும். அதுவும் 1 லட்சம் ரூபாய் ஐபோனை பாக்கெட்டில் வைத்திருப்பர். ஆனால், சாதாரண போனில் அப்படி அல்ல. சில எஸ்எம்எஸ்களும் சிலரின் போன் நம்பர் மட்டுமே இருக்கும். அதனால் 'போனால் போகட்டும் போடா' என்று இருக்கலாம்.

கவனச்சிதறல்

கவனச்சிதறல்
கவனச்சிதறல்
pixabay

பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் சென்றால் மக்கள், பேருந்தோ ரயிலோ வருகிறதா என்று பார்ப்பதில்லை. போனைத்தான் பார்க்கின்றனர். இதுகூட பரவாயில்லை. பால் குடிக்கும் குழந்தை முதல் பல்போன தாத்தா வரை அனைவரும் ஸமார்ட்போனே உலகம் என்று ஸ்மார்ட் போனும் கையுமாக உள்ளார்கள். ஸ்மார்ட் போனால் கவனச்சிதறல் அதிகம் ஏற்படுகிறது. சரி ஸ்மார்ட்போன் போய் சாதாரண போன் உபயோகிக்க வேண்டிய நிலை வந்தால், வீட்டிலோ, வெளியிலோ, அருகில் இருப்பவர்களுடன் பேசி உறவாடும் பழைய நிலை திரும்பி வரும்.

செல்ஃபி, டிக் டாக் மோகம்

ரிஸ்க் Selfie
ரிஸ்க் Selfie

சமீபத்தில் ஒரு பெண் தான் எடுத்த செல்ஃபி எதுவும் சரியில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வெளிவந்தது. மேலும், ஓர் இளைஞர் ஆழமான தண்ணீர் பகுதியில் டிக்டாக் செய்ய முயன்றபோது மரணமடைந்தார். இவை சில உதாரணங்களே. இது போன்று பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலரின் வாழ்க்கை டிக் டாக், செல்ஃபி மோகத்தால் திசைமாறி சிதைவடைந்துள்ளன. Narcissism (தங்கள் மீது அதிக ஈர்ப்பு உடையவர்கள்) என்னும் குணம் ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு, அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன் இல்லாத உலகத்தில் செல்ஃபி, டிக்டாக், ஸ்டேடஸ் என்ற நம்மைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் இன்றி பிற மனிதர்களையும் ரசிக்கத் தொடங்கலாம்.

ஆபீஸ் செல்பவர்கள் உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு, டூர் போன போட்டவை ஃபேஸ்புக், ஸ்டேட்டஸில் போட்டு மேலதிகாரியிடம் வாங்கிக் கட்டத் தேவையில்லை. முன்பு உறவுகளையும் நண்பர்களையும் திடீரென்று சந்திக்கும் தருணத்தில் ஏற்படும் உற்சாகம், தற்போது வெளிப்படுத்தப்படுவது இல்லை. சாப்பாடு முதல் சென்று வந்த இடங்களையெல்லாம், ஸ்டேட்டஸ் போட்டுவிடுவதால், சந்திப்பில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லையென்றால் திடீர் சந்திப்புகளில் ஒரு இனிமை இருக்கத்தானே செய்யும். நாம் போடும் ஸ்டேட்டஸ்க்கு லைக், ஹாஹா போட்டவர்களை நேரில் பார்த்தால் ஒரு சிரிப்பைச் சிந்தத் தயங்குகிறார்கள். இந்த நிலையெல்லாம் மாறி இயல்பான வாழ்க்கையின் சந்தோசம் கிடைக்கப் பெறலாம்.

Vikatan

ஆனால், இதற்காகத் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டம் தட்டிவிட முடியாது. ஸ்மார்ட்போன் இல்லையென்றால் நாம் இழப்பதற்கும் நிறையவே இருக்கிறது.

விரல்நுனியில் உலகம்

digital world
digital world
pixabay

இன்று, உலகத்தை விரல் நுனியில் முடுக்கும் பெருமை ஸ்மார்ட் போனுக்கே! படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள் முதல் சமையல் குறிப்பு வரை நமக்கு எல்லாமுமாக உதவுகின்றது ஸ்மார்ட்போன்கள். நம் நட்பு வட்டாரத்தைப் பெருக்கி உறவினர்களுடன் உறவைப் பலப்படுத்தும் பாலம் எனப் பல நன்மைகளும் உண்டு. எது எப்படியோ ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சாதாரண போனாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தும் முறை நம் கையில்தான் இருக்கிறது. ஸ்மார்ட்போன் நம்மிடம் இருந்தால் ஒரு தைரியம் தானாகவே வந்துவிடும். எங்கு போனாலும் GPS ஆன் செய்து சேர வேண்டிய இடத்தை அறியலாம் இப்படிப் பல நன்மைகளை ஸ்மார்ட்போனால் தினமும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

அடுத்த கட்டுரைக்கு