Election bannerElection banner
Published:Updated:

ஐபோன், வாட்ச், ஐபேட்... செப்டம்பர் 15 ஆப்பிள் நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்? #AppleEvent

Apple | Tim Cook
Apple | Tim Cook ( Brooks Kraft | Apple )

இந்த வருடம் ஆன்லைனில் விர்ச்சுவலாகதான் நடக்கப்போகிறது ஆப்பிள் ஈவென்ட்.

செப்டம்பர் மாதம் நடக்கும் ஆப்பிள் ஈவென்ட்தான் உலகிலேயே அதிகம் கவனிக்கப்படும் டெக் நிகழ்வாக இருக்கும். வாங்குகிறோமோ, இல்லையோ ஆப்பிள் என்ன அறிமுகம் செய்கிறது என்பதை காண்பதற்கு ஒரு தனிக்கூட்டமே உண்டு. கொரோனா சூழலிலும் இம்முறை செப்டம்பர் 15-ம் தேதி இந்த நிகழ்வு நடக்கும் என அறிவித்திருக்கிறது ஆப்பிள். சில வருடங்களாகவே க்யூபெர்டினோவில் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் மக்கள் ஆரவாரத்துக்கு நடுவேதான் ஆப்பிள் சாதனங்கள் அறிமுகமாகி வந்தன. ஆனால், இந்த வருடம் ஆன்லைனில் விர்ச்சுவலாகதான் நடக்கப்போகிறது ஆப்பிள் ஈவென்ட்.

`இறங்கி அடித்திருக்கும் ஆப்பிள்!' புதிய யுக்தி கைகொடுக்குமா? #AppleEvent

கடந்த வருடம் கேமிங் சேவை (Arcade), ஸ்ட்ரீமிங் சேவை (Apple Tv+), ஆப்பிள் வாட்ச், ஐபேட், ஐபோன் என ஒரே மேடையில் புதிய சாதனங்கள், புதிய சேவைகள் எனக் களைகட்டியது ஆப்பிள் நிகழ்வு. இந்த வருடமும் ஐபோன் 12 சீரிஸ், வாட்ச் சீரிஸ் 6 எனப் பல புதிய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கசிந்திருக்கும் தகவல்களின்படி ஐபோன் 12 சீரிஸில் மொத்தம் நான்கு மாடல்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். அவை,

Apple Event
Apple Event
  1. ஐபோன் 12 (5.4 இன்ச்)

  2. ஐபோன் 12 (6.1 இன்ச்)

  3. ஐபோன் 12 ப்ரோ (6.1 இன்ச்)

  4. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் (6.7 இன்ச்)

இவை அனைத்துமே 5G சப்போர்ட்டுடன் வெளிவரும். ஆனால், ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் மட்டும்தான் மேம்பட்ட mmWave 5G வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக வெளிவந்த iPad-ல் இருந்த LiDAR சென்சார் ஐபோன்களிலும் இடம்பெறும் எனச் சொல்லப்படுகிறது. இது AR (Augmented Reality) அனுபவத்தை இன்னும் மெருகேற்றும். இம்முறை போனுடன் சார்ஜர் வராது என்றும் முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன. இவை அனைத்தும் உண்மையா என்ற கேள்விக்கு15-ம் தேதியே விடை கிடைக்காமலும் போகலாம்.

Apple Watch
Apple Watch
இந்த ஆண்டு ஐபோன் கொஞ்சம் தாமதமாகத்தான் வெளிவரும் என முன்பு சொல்லியிருந்தது ஆப்பிள். அதனால் இந்த நிகழ்வில் ஐபோன்கள் இல்லாமல் மற்ற சாதனங்கள் மட்டும் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அறிமுகம் மட்டும் செய்துவிட்டு விற்பனையைத் தாமதமாக தொடங்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

இந்த வருட ஈவென்ட்டுக்கு 'Time Flies' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த COVID19 சூழலில் நம்மை அறியாமல் நேரம் பரபரவென சென்றுகொண்டிருக்கிறது என்பதை குறிப்பதாக இந்தப் பெயர் அமைந்திருந்தாலும், மறைமுகமாக ஆப்பிள் வாட்ச்சின் அறிமுகத்தை முன்னிலைப்படுத்திய நிகழ்வாக இது இருக்கும் என்பதை குறிப்பதாகவும் இருக்கலாம். கடைசியாக வெளிவந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5-ன் அடுத்த அப்டேட்டாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 இந்த நிகழ்வில் அறிமுகமாகும். இதில் ஏற்கெனவே இருக்கும் ஃபிட்னஸ் வசதிகளுடன் கூடுதலாக Garmin போன்று ஃபிட்னஸ் சாதனங்களுக்காகவே பெயரெடுத்த பிரீமியம் பிராண்ட்களில் இருக்கும் சில வசதிகள் சேர்க்கப்படும் என நம்பப்படுகிறது. வாட்ச்சில் கேமரா கூட இருக்கலாம் என்கின்றன சில லீக்ஸ். எது உண்மை எது பொய் என்பது செப்டம்பர் 15 தெரிந்துவிடும். இத்துடன் சற்றே குறைவான விலையில் விற்பனையாகிவரும் வாட்ச் சீரிஸ் 3-க்கு மாற்றாக ஒரு வாட்ச்சும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் கற்றுத் தரும் பாடங்கள்! - முதலீட்டு ஆலோசனைகள்..!
ஸ்ட்ரீமிங் சாதனமான ஆப்பிள் டிவியின் அடுத்த வெர்ஷன், ஸ்மார்ட் ஹோம் அசிஸ்டென்ட்டான ஹோம்பாடின் அடுத்த வெர்ஷன், புதிய iPad Air, AirTags என்னும் லொக்கேஷன் ட்ராக்கிங் சாதனம் என மற்ற கேட்ஜெட்களும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஆப்பிள்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு