Published:Updated:

வாட்ஸ்அப்ல இந்த ஷார்ட்கட்ஸ்லாம் உங்களுக்குத் தெரியுமா? #WhatsappTips

சு.சூர்யா கோமதி

வாட்ஸ்அப் அப்டேட்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் ( pixa bay )

தேவையில்லாத எண்களைச் சேகரிக்க வேண்டாம்:

வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்ப வேண்டுமெனில் அவர்களின் எண்ணை தொலைபேசியில் சேகரித்தால் மட்டுமே அவர்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்ள முடியும் எனப் பலரும் நினைப்பார்கள். ஆனால், அதற்கு மாற்றாக ஒரு வழி உண்டு. ரின், wa.me/91என்பதை டைப் செய்து, யாருக்கு நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்புகிறீர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி எண்ணையும் டைப் செய்து தகவல் அனுப்ப முடியும்.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்
pixa bay

உதாரணமாக, wa.me/91xxxxxxxxxx என நீங்கள் டைப் செய்து அனுப்பினால், இந்தத் தகவல் நீலநிறத்தில் ஒரு லிங்க் போன்று தோன்றும். அந்த லிங்க்கை க்ளிக் செய்தால், நீங்கள் யாருடைய எண்ணை சேகரிக்காமல் அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப விரும்பினீர்களோ அவர்களின் வாட்ஸ்அப் பக்கம் உங்களுக்குத் தெரியும்.

தேவையில்லாத குரூப்களைத் தவிர்க்க:

ஃப்ரெண்ட்ஸ் குரூப், ஆபிஸ் குரூப்னு புது புது வாட்ஸ் அப் குரூப்களில் உங்களைச் சேர்த்து மெம்பர் ஆக்குவார்கள். சில சமயங்களில் தேவையில்லாத குரூப்களில்கூட இணைத்திருப்பார்கள். சமயத்தில் அந்த குரூப்பில் இருந்து வெளிய வரமுடியாத தர்மசங்கடமான சூழ்நிலை வரும். இப்படி குரூப்களில் சேர்க்கப்படுவதைத் தடுக்க, உங்களுடைய வாட்ஸ் அப் அக்கவுன்ட்டில் செட்டிங்ஸில் சென்று பிரைவஸியை க்ளிக் செய்தால், 'Groups' என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.

வாட்ஸப் குரூப்
வாட்ஸப் குரூப்
pixa bay

அதில் Every one, My contacts, Nobody என்ற ஆப்ஷனில் Nobody என்பதைத் தேர்வுசெய்துகொள்ள வேண்டும். அதன்பின் யார் உங்களை வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க விரும்பினாலும் முதலில் உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வரும். அதற்கு ஓ.கே கொடுத்து நீங்கள் சம்மதித்தால் மட்டுமே உங்களை புது குரூப்பில் சேர்க்க முடியும்.

ஸ்வைப் டு ரிப்ளை:

குரூப்பிலோ அல்லது தனியாக சாட்டிலோ ஒருவரின் மெசேஜுக்கு நேரடியாக ரிப்ளை செய்ய வேண்டுமெனில், இதுவரை ஒரே வழி, அந்த மெசேஜைத் தேர்வுசெய்து சில நொடிகள் அழுத்திப்பிடிப்பதுதான். இப்படிச் செய்யும்போது, உடனே டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான கீ - போர்டு தோன்றும். உடனே மெசேஜை டைப் செய்வோம். இப்படி மெசேஜை தேர்வு செய்ய, அதை அழுத்திப்பிடிக்க, கீ போர்டு தோன்ற என ஒரு ரிப்ளைக்கு குறைந்தது மூன்று விநாடிகளாவது தேவைப்படும்.

ஸ்வைப் டு ரிப்ளை
ஸ்வைப் டு ரிப்ளை
pixa bay

ஸ்வைப் டு ரிப்ளை முறை உங்களது வேலையை இன்னும் எளிமையாக்கியுள்ளது. எந்த மெஜுக்கு நீங்கள் ரிப்ளை செய்ய வேண்டுமோ, அந்த மெசேஜை வலதுபுறமாக ஸ்வைப் செய்தாலே போதும், அடுத்த கணமே கீ-போர்டு பாப் ஆகி டெக்ஸ்ட் ரைட்டர் வந்துவிடும். எளிதாக ரிப்ளை செய்துகொள்ளலாம்.

ஆடியோ ரெக்கார்டிங்:

நாம் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டிய தகவல்களை ஆடியோவாகப் பகிர்ந்துகொள்ளும் வசதி வாட்ஸ்அப்பில் இருக்கிறது. இதற்கு முன்பு வரை டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான கீ - போர்டுக்கு அருகில் உள்ள ஆடியோ பொத்தானை அழுத்திப் பிடித்துக்கொண்டே தான் பேச வேண்டும். ஆடியோ பொத்தானை அழுத்துவதைவிட்டுவிட்டால் நாம் பேசிய தகவல் சம்பந்தவட்டவருக்கு சென்றுவிடும்.

தவறான தகவலைப் பேசியிருந்தால்கூட, அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிய பிறகுதான் மெசேஜை அழிக்க முடியும்.

இதற்குப் பதிலாக, ஆடியோ பொத்தானை அழுத்தி மேல்புறமாக ஸ்வைப் செய்து பேச ஆரம்பிக்கலாம். இப்போது, ரெக்கார்டு லாக் ஆகிவிடும். பேசும் தகவல் தவறாக இருந்தால், ஆடியோவை இடது புறமாக ஸ்வைப் செய்தால் போதும், ஆடியோ அழிந்துவிடும். மீண்டும் முதலில் இருந்து பேசி தகவலை அனுப்பலாம்.

அட்மின்கள் மட்டும் குரூப்பில் மெசேஜ் செய்ய முடியும்:

அத்தியாவசியத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட சில வாட்ஸ்அப் குரூப்களில், குரூப்பில் இருக்கும் மெம்பர்கள் அனைவரும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது தேவையற்றது என நினைக்கும் பட்சத்தில், அந்த வாட்ஸ்அப் குழுவில் அட்மின் மட்டுமே தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வசதியைப் பயன்படுத்தலாம்.

அட்மின்கள்
அட்மின்கள்
pixa bay

இதன்படி, வாட்ஸ்அப்பின் குரூப் செட்டிங்ஸில் 'சென்ட் மெசேஜ்' என்ற ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்தால், 'All participants' அல்லது 'only admins' என இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும். 'only admins' என்று செட்டிங்கை மாற்றினால், குழுவில் உள்ள அட்மின்கள் மட்டுமே அந்தக் குழுவில் தகவல் அனுப்ப முடியும். 'All participants' என செட்டிங்கை மாற்றினால் மட்டுமே அனைவராலும் அந்தக் குழுவில் தகவல் அனுப்ப முடியும்.

வாட்ஸ்அப் எழுத்துகளின் Font மாற்றும் முறை

வாட்ஸ்அப்பில், சில குறிப்பிட்ட தகவல்களை ஹைலைட் செய்து காட்ட விரும்பினால், அந்தத் தகவலை மட்டும் தனித்துவமாக காட்ட போல்டு அல்லது Italic-காகவோ மாற்றி ஹைலைட் செய்து காட்ட முடியும். உங்களது வாட்ஸ்அப் அக்கவுன்ட்டில் உள்ள டெக்ஸ்ட் டைப் போர்டில் நீங்கள் தனித்துக்காட்டவேண்டிய வார்த்தைக்கு முன்பும் பின்பும் * என்ற குறியீட்டை டைப் செய்தால், அந்த வார்த்தை மட்டும் போல்டாக காட்டப்படும்.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்
pixa bay

உதாரணமாக *VIKATAN* என டைப் செய்தால், VIKATAN என்ற வார்த்தை மட்டும் தனித்துவமாக இருக்கும்.ஒரு வார்த்தையை Italic-காக காட்ட வேண்டுமெனில் _ (underscore) குறியீட்டை டைப் செய்தால், அந்த வார்த்தை மட்டும் Italic எழுத்து உருவில் காட்டப்படும். உதாரணமாக, _VIKATAN_ என டைப் செய்தால், VIKATAN என்ற வார்த்தை மட்டும் இத்தாலிக்ஸ் எழுத்துருவில் இருக்கும்.