Published:Updated:

`மெசேஜ்களைக் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் தானாகவே அழியச்செய்யலாம்!' - வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!

இதெல்லாம் அடுத்த அப்டேட்களில் அனைவருக்கும் வந்துசேரும் என எதிர்பார்க்கலாம்!

Self Destructing Message
Self Destructing Message

வாட்ஸ்அப் தன் பயன்பாட்டாளர்களுக்குப் புதிய அம்சமாக, அனுப்பும் செய்திகளையும் புகைப்படங்களையும் குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் மறையச் செய்யும்படியான`Self-Destructing Message' வசதியை விரைவில் கொண்டுவரவுள்ளது. இந்த அம்சம், சமீபத்தில் வாட்ஸ்அப் வெளியிட்ட பீட்டா வெர்ஷனை (v2.19.275) ஆராய்ந்து கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது WABetaInfo இணையதளம். வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷன் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் பிரத்யேக இணையதளம் இது.

Self Destructing Message
Self Destructing Message

ஒரு குறுஞ்செய்தியை, நாம் தேர்வு செய்த நேரத்துக்குப்பின் தானாக அழித்துவிடும் இந்த அம்சத்தைக் கொண்டுவந்ததன் மூலம், தன் போட்டி சேவையான`டெலிகிராமை’ முறியடிக்க முயல்கிறது வாட்ஸ்அப்.

டெலிகிராம் தன் பயன்பாட்டாளர்களுக்கு `Secret Chat’ என்ற அம்சத்தின் மூலம் பகிரப்படும் அனைத்தையுமே தேர்வு செய்த நேரத்துக்குப்பின் மறைத்துவிடுவதுடன் அந்த ரகசிய சாட்களை தன்னுடைய எந்த சர்வரிலும் சேகரிப்பதில்லை. அது மட்டுமல்லாமல், அந்த சாட்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்கவும் அனுமதிப்பதில்லை.

Telegram
Telegram

இதனால், மக்களிடையே ரகசியமான முக்கிய செய்திகளை பகிர்வதற்கு டெலிகிராம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்கெனவே பெரும் அளவில் பயன்பாட்டாளர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய அம்சம் டெலிகிராம் பயன்பாட்டாளர்களையும் தன் பக்கம் இழுப்பதற்கு இந்த வசதி உதவும் என்று கருதப்படுகிறது.

WABetaInfo வெளியிட்ட தகவலின்படி வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய அம்சம் குரூப் சாட்டிற்கும் வருமாம். அனுப்பிய தகவல் 5 விநாடியிலிருந்து 1 மணி நேரம் வரை எப்போது மறைய வேண்டும் என்பதையும் குரூப்பின் அட்மின்கள் தாங்கள் அனுப்பும் மெசேஜுக்கு யார் யார் பதில் அனுப்பலாம், யார் யார் அனுப்ப முடியாது என்பதையும் தீர்மானிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.

`வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நேரடியாக ஃபேஸ்புக்குக்கு அனுப்பலாம்’ - அசத்தும் புதிய அப்டேட்!

இதெல்லாம் அடுத்த அப்டேட்களில் அனைவருக்கும் வந்துசேரும் என எதிர்பார்க்கலாம்