Published:Updated:

மூன்று வடிவங்களில் வரும் வாட்ஸ்அப்பின் `டார்க் மோடு' வசதி!

வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் இந்த டார்க் மோடு வசதி கிடைக்கத்தொடங்கியுள்ளது.

'டார்க் மோடு'
'டார்க் மோடு' ( WABetaInfo )

``உங்களுக்கு நான் வாட்ஸ்அப் பண்ணிடறேன்” என்று யாரேனும் சொல்லுகையில் என்கிட்ட வாட்ஸ்அப் இல்லையே என்று சொன்னால் நிச்சயம் நம்மை ஆதிகால மனிதனைப்போலதான் பார்ப்பார்கள். அந்தளவுக்கு நண்பர்கள் உடனான உரையாடல்கள் தொடங்கி அலுவலகம் சார்ந்த மிக முக்கிய தகவல் பரிமாற்றம் வரை இன்று அனைத்துமே வாட்ஸ்அப்பில்தான் நடக்கிறது.

வாட்ஸ்அப் 'டார்க் மோடு' | Dark Mode in Whatsapp
வாட்ஸ்அப் 'டார்க் மோடு' | Dark Mode in Whatsapp
WABetaInfo

வாட்ஸ்அப் நிறுவனமும் அதன் பயனாளர்களுக்கு மிக எளிய முறையில் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து புதுப்புது வசதிகளுடன் அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் பயனாளர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான `Dark mode' அப்டேட் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், பீட்டா வெர்ஷனில் இந்த டார்க் மோடு வசதி கிடைக்கத் தொடங்கியுள்ளது.

`120 நாள்களாக இன்டர்நெட் சேவை இல்லை!' - வாட்ஸ்அப் கணக்கை இழக்கும் காஷ்மீர் மக்கள்

WABetaInfo என்ற இணையதளத்தில் ஆண்ட்ராய்டு போன்களுக்கான வாட்ஸ்அப் குறித்த சமீபத்திய தகவலின்படி, டார்க் மோடு அப்டேட் வெளியிடப்பட்டால் அதில் பேட்டரி சேவர் மோடு, டார்க் மோடு, லைட் மோடு என மூன்று வெவ்வேறு ஆப்ஷன்களை உடையதாக இருக்கும் எனத் தெரிகிறது. இதில் பேட்டரி சேவர் ஆப்ஷன் ஆன்ட்ராய்ட் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட மொபைல்களில் மட்டுமே இயங்கக்கூடும்

வாட்ஸ்அப் 'டார்க் மோடு' | Dark Mode in Whatsapp
வாட்ஸ்அப் 'டார்க் மோடு' | Dark Mode in Whatsapp
WABetaInfo

மேலும் டார்க் மோட் தீம் ஆப்ஷனில் மிக அடர்த்தியான சாம்பல் நிறத்துடன் கூடிய பின்னணியுடன் வெள்ளை நிற எழுத்துகள் இருக்கும் எனவும் இதே லைட் மோட் ஆப்ஷனில் டார்க் மோடில் உள்ள அடர்த்தியைவிட சிறிது குறைவாக இருக்கும் என தெரிகிறது. இந்த வகை வசதிகளை நாம் ட்விட்டரின் டார்க் மோட் ஆப்ஷனில் dim, lights out என பார்த்திருப்போம்.

இது மட்டுமல்லாமல் telegram மற்றும் signal முதலிய மெசேஜிங் ஆப்களில் உள்ள “self destructing messages” என்ற புதிய வசதியும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வசதியின் மூலம் நாம் பிறருக்கு அனுப்பும் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை செட் செய்துவிடலாம். அதன்பின் அவை தானாகவே அழிந்துவிடும்.