ஷாவ்மி 11 லைட் NE 5G (Xiaomi 11 lite NE 5G) மொபைலை இந்தியாவில் நேற்று வெளியிட்டது ஷாவ்மி நிறுவனம். இந்த மாதத் தொடக்கத்தில் உலகம் முழுவதும் ஷாவ்மி 11T மற்றும் ஷாவ்மி 11T ப்ரோ ஆகிய மொபைல்களை வெளியிட்டது ஷாவ்மி. அப்போதே ஷாவ்மி 11 லைட் மாடலையும் அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது இந்தியச் சந்தையில் இந்த ஷாவ்மி 11 லைட் NE 5G மொபைலை வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி.
தற்போது அறிமுகமாகும் ஷாவ்மி 11 லைட் NE 5G மொபைல், ஏற்கெனவே விற்பனையாகி வரும் Mi 11 Lite-ன் அப்டேட் செய்யப்பட்டது போன்ற மற்றொரு வேரியன்டாகவே வெளியாகியிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வசதிகள்
டிஸ்ப்ளே: 6.55 இன்ச் AMOLED
ரெப்ரெஷ் ரேட்: 90 Hz
ப்ராசஸர்: Qualcomm Snapdragon 778G
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் : 6 GB + 128 GB
8 GB + 128 GB
பேட்டரி: 4250 mAh பேட்டரி (33 W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்)
பின்பக்க கேமரா: 64 MP மெயின் கேமரா
8 MP அல்ட்ரா வைடு கேமரா
5 MP டெலிமேக்ரோ கேமரா
முன்பக்க கேமரா: 20 MP
ஆப்ரேட்டிங் சிஸ்டம்: MIUI 12.5, ஆண்ட்ராய்டு 11
விலை: 6 GB + 128 GB - 26,999 ரூபாய்
8 GB + 128 GB - 28,999 ரூபாய்
Mi 11 lite

Mi 11 lite-ல் உள்ள வசதிகளைக் கொஞ்சம் அப்டேட் செய்து ஷாவ்மி 11 லைட் NE-ஐ வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பவர் பட்டனுடன் சேர்த்து வலதுபக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹைபிரிட் சிம் ஸ்லாட்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது, இரண்டு நானோ சிம்களைப் பயன்படுத்தலாம் அல்லது ஒரு நானோ சிம் மற்றும் ஒரு மெமரி கார்டைப் பயன்படுத்தலாம். டைப்- சி போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. 33 W சார்ஜிங் சப்போர்ட்டோடு, 33 W சார்ஜரும் மொபைலோடு கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது ஷாவ்மி. Mi 11 lite-ல் இருக்கும் வசதிகளைக் கொஞ்சம் அப்டேட் செய்தது போல விலையையும் கொஞ்சம் அப்டேட் செய்திருக்கறது ஷாவ்மி. ஜாஸ் பளூ, டஸ்கனி கோரல், வினைல் ப்ளாக் மற்றும் டைமண்ட் ஃடேஸில் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது ஷாவ்மி 11 லைட் NE 5G. வரும் அக்டோபர் 2-ஆம் தேதி 12 மணி முதல் ஷாவ்மி 11 லைட் NE 5G-க்கான விற்பனை தொடங்கவிருக்கிறது.
இது புதிய போனில் இருக்கும் வசதிகள் மட்டுமே. Mi 11 lite-ன் அப்டேட்டட் வெர்ஷன் போல வெளியாகியிருக்கும் இதன் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருக்கும் என்பது பயன்படுத்திப் பார்க்கும்போதுதான் தெரியும்.