Published:Updated:

`ஐந்து கேமராக்கள், அதில் ஒன்று 108 MP' - மாஸான அறிமுகத்துக்குத் தயாராகும் Mi Note 10

இந்த போன் இந்தியாவில் வரும் டிசம்பர் 26-ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

108 MP Mi Note 10
108 MP Mi Note 10

புதுப் புது மாடல்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து கவர்ந்து வரும் மொபைல் நிறுவனம் ஷியோமி. இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது Mi Note 10 என்னும் புதிய மாடலை வெளியிடப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Mi Note 10 மொபைலின் பின்புறத்தில் மட்டும் ஐந்து கேமராக்கள் இடம்பெறும் என்று ஒரு டீசரில் காட்டப்பட்டிருந்தது.

Mi Note 10
Mi Note 10

இந்த Note 10 மாடல், ஏற்கெனவே நவம்பர் 5-ம் தேதி சீனாவில் வெளியான Mi CC 9 pro மாடலின் குளோபல் வெர்ஷன் என்று கூறப்படுகிறது. பெயர் மட்டும்தான் வேறு, மற்ற எல்லாமே ஒன்றுதான் என்று கூறப்படுகிறது.

`1000 இன்ஜினியர்களின் உழைப்பு!’ ஸ்மார்ட்போனில் வித்தை காட்டிய ஷியோமி

தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ ஷியோமி நிறுவனம் தனது இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் வெளியிட்டது. இந்த மாடலில் 'கிராபைட் சீட்' பயன்படுத்தப்படுகிறது. இது மொபைலிருந்து வெப்பத்தை எளிதாக வெளியேற்றிவிடும் என்று கூறப்படுகிறது. Qualcomm Snapdragon 730G SoC சிப்செட், 5260 mAh பேட்டரி ஆகியவை இதில் இருக்கும். இந்த மொபைல் 6GB RAM+ 128 GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் இந்தியாவில் வரும் டிசம்பர் 26-ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை எப்படியும் 40,000 ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலில் கேமராதான் ஸ்பெஷல். ஐந்து கேமராக்கள் கொண்ட பென்டாகேமரா அமைப்பில் 108-மெகா பிக்ஸல் மெயின் கேமரா, 20-மெகா பிக்சல் அல்ட்ரா-வைடு கேமரா, டெலிபோட்டோ கேமரா, மேக்ரோ கேமரா மற்றும் 12-மெகா பிக்ஸல் portrait கேமரா ஆகியவை அடங்கும். இதில் இருக்கும் டெலிபோட்டோ லென்ஸ் மூலம், 10x hybrid zoom மற்றும் 50x digital zoom போட்டோக்களை எடுக்க முடியும் என்கிறது ஷியோமி.