Published:Updated:

How To: வலைப்பதிவு தொடங்குவது எப்படி? | How To Create A Blog?

வலைதளம்
News
வலைதளம்

Blog தொடங்க பெரியளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை அறிந்திருங்க வேண்டியதில்லை. ரசிக்கும் வகையில் எழுதும் திறமையுடன், தங்களுடைய கருத்துகளை வெளிக்கொண்டு வந்தால் அதன்மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்புள்ளது.

Published:Updated:

How To: வலைப்பதிவு தொடங்குவது எப்படி? | How To Create A Blog?

Blog தொடங்க பெரியளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை அறிந்திருங்க வேண்டியதில்லை. ரசிக்கும் வகையில் எழுதும் திறமையுடன், தங்களுடைய கருத்துகளை வெளிக்கொண்டு வந்தால் அதன்மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்புள்ளது.

வலைதளம்
News
வலைதளம்

தமிழில் வலைப்பதிவு எனப்படும் Blog, மற்றும் Blogger-களுக்கு சமூக வலைதளவாசிகளின் ஆதரவு அதிகம். பெரியளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டியது இல்லை. ரசிக்கும் வகையில் எழுதும் திறமையுடன், தங்களுடைய கருத்துகளை வெளிக்கொண்டு வந்தால் அதன்மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்புள்ளது. மிக எளிய முறையில், மெயில் ஐடி இருக்கும் எவரும் கீழ்காணும் முறைகளை பின்பற்றி Blogger ஆகிவிட முடியும். பல இணையதளங்களில் blog எழுத முடியும் என்றாலும், பிளாக்கர் இணையதளத்தில் எழுதுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

வலைப்பூ
வலைப்பூ

* உங்கள் கணினியில் Blogger-கான அதிகாரபூர்வ இணையதளமான https://www.blogger.com என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.

* முகப்பு பக்கத்தில், Create Your Blog என்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இடத்தை க்ளிக் செய்துகொள்ளவும்.

* உங்கள் Google கணக்கு வழியாக உள்நுழைய வேண்டும். Blogger-ஐ பயன்படுத்த, இங்கு உங்கள் Google மின்னஞ்சல் அல்லது மொபைல்போன் எண்ணை உள்ளிடவும். அடுத்து `NEXT’ என்ற தேர்வை க்ளிக் செய்யவும். தொடர்ந்து உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை உள்ளிடவும். `NEXT’ என்பதைக் க்ளிக் செய்யவும்.

* ஒருவேளை உங்களிடம் Google கணக்கு இல்லையென்றால், உள்நுழைவு படிவத்தின் கீழே உள்ள, `கணக்கை உருவாக்கு` (Create Account ) என்ற இணைப்பைக் க்ளிக் செய்யவும்.

* அடுத்து திறக்கும் பக்கத்தில் உங்களுடைய blog பற்றிய தனிப்பட்ட தகவல்களை உள்ளிட வேண்டும். குறிப்பாக blog-ன் தலைப்பு, அதற்கான URL, முன்பக்கத்தில் தெரிய வேண்டிய பெயர் என அனைத்தும் குறிப்பிட வேண்டும்.

* அவ்வளவுதான் உங்களுக்கான blog தயாராகிவிடும். இங்கு உங்களுடைய blog-க்குக்கான தீம் தயார் செய்துகொள்ளவும். உங்களுடைய தனிப்பட்ட தகவல் சில கேட்கப்படும். அதை நிரப்பிய பின், நீங்கள் blog-ல் எழுதத் தொடங்கிவிடலாம்.

Laptop (Representational Image)
Laptop (Representational Image)
Pixabay

Blog-கில் எழுதத் தொடங்கும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

* எந்த மாதிரியான கருத்துகளை எழுத உள்ளீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளவும்.

* குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்தடுத்து எழுதுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

* உங்களுக்கான தீம்களை சிறப்பாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.

* உங்கள் எழுத்துக்கான ரசிகர்களைக் கவனியுங்கள்; அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள்.