Published:Updated:

How To: இன்ஸ்டாகிராமில் புளூ டிக் பெறுவது எப்படி?|How To Get Verified On Instagram?

இன்ஸ்டாகிராம் பிசினஸ்
News
இன்ஸ்டாகிராம் பிசினஸ்

இன்ஸ்டாகிராமில் உங்கள் கணக்கை அங்கீகரிக்கும் விதமாக புளூ டிக் அடையாளம் ஒன்று கொடுக்கப்படுகிறது. அதைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

Published:Updated:

How To: இன்ஸ்டாகிராமில் புளூ டிக் பெறுவது எப்படி?|How To Get Verified On Instagram?

இன்ஸ்டாகிராமில் உங்கள் கணக்கை அங்கீகரிக்கும் விதமாக புளூ டிக் அடையாளம் ஒன்று கொடுக்கப்படுகிறது. அதைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் பிசினஸ்
News
இன்ஸ்டாகிராம் பிசினஸ்

தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் பலரும் பயன்படுத்தும் செயலியாக மாறியுள்ளது. பல பிரபலங்கள், தொழில் முனைவோர்கள் எனப் பல துறைகளைச் சார்ந்தவர் களும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலியில், உங்களுடைய கணக்கை தனித்துவமாகக் காட்டவும், இது உங்களுடைய உண்மையான கணக்குதான் என்பதை நிரூபிக்கவும், உங்களைப் பின்தொடர்பவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், உங்கள் பெயரைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தடுக்கவும், உங்களுக்கு உங்கள் கணக்கை அங்கீகரிக்கும் `புளூ டிக்’ அடையாளம் ஒன்று கொடுக்கப்படும். அதைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

* முதலில் இன்ஸ்டாகிராம் செயலியில் உங்கள் கணக்கை ஓப்பன் செய்துகொள்ளவும்.

* பின்னர், வலது பக்க மூலையில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்கின் மெனு பகுதியை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.

* அதனுள் சென்றவுடன் Settings பகுதியைத் திறக்கவும்.

* தொடர்ந்து Account என்ற பகுதியை க்ளிக் செய்து உள்ளே சென்று, Request Verification என்ற பகுதியைத் தேர்ந்தெடுத்து உள்ளே செல்லவும்.

* இங்கு உங்களுடைய முழு பெயரை, உங்களுடைய அரசு ஆவணங்களில் இருப்பது போன்று உள்ளிடவும். கூடவே உங்களுடைய அரசு ஆவணம் ஒன்றின் விவரம் கேட்கப்படும். அதை உள்ளிட்டு, கூடவே ஆவணத்தின் புகைப்படத்தையும் அப்லோட் செய்ய வேண்டும்.

* தொடர்ந்து உங்களின் கணக்கைப் பற்றிய சில விவரங்கள் கேட்கப்படும். அதை உள்ளிட்டு Submit கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான விவரம் தோன்றும்.

* பின்னர், அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் உங்கள் கணக்கு மதிப்பீடு செய்யப்பட்டு, 30 நாள்களுக்குள், உங்களுடைய கணக்குக்கான புளூ டிக் கிடைக்கப்பெறுமா என்பது பற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.

Instagram
Instagram

குறிப்பு

* இதற்கு இடைத்தரகர் போன்றோரை அணுகுதல் வேண்டாம்.

* யார் வேண்டுமென்றாலும் கணக்குக்கான அங்கீகாரம் பெற முயற்சி செய்யலாம்; ஆனால் அனைவருக்கும் இது கிடைக்கும் என்று கூற முடியாது.

* இன்ஸ்டாகிராம், இதற்கென கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை என்பதால், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

* இன்ஸ்டாகிராமில் புளூ டிக் கிடைத்தால் அது ஃபேஸ்புக்குக்கானது அல்ல. அதற்கென தனி வழிமுறை இருப்பதால், அதைப் பின்பற்றி பெற்றுக்கொள்ள வேண்டும்.