Published:Updated:

ஆன்லைன் அமைதிப் படை! - ஒரு ஜாலி கேலி அலசல் #MyVikatan

Social Media ( Pixabay )

பொதுவாக இணையத்தில் பதிவிடுவோரை பார்த்துச் சொல்லும் குற்றச்சாட்டு அவன் எப்ப பாத்தாலும் ஆன்லைனிலேயே இருப்பான்னு. ஆனால்...

ஆன்லைன் அமைதிப் படை! - ஒரு ஜாலி கேலி அலசல் #MyVikatan

பொதுவாக இணையத்தில் பதிவிடுவோரை பார்த்துச் சொல்லும் குற்றச்சாட்டு அவன் எப்ப பாத்தாலும் ஆன்லைனிலேயே இருப்பான்னு. ஆனால்...

Published:Updated:
Social Media ( Pixabay )

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

"ஜன்னலை திறந்தேன்

அகப்பட்டது வானம்

இணையம்!

இதயம் இல்லாமல்கூட இருக்கலாம் ஆனால் இணையம் இல்லாமல் இருக்க முடியாத நிலை தற்போது.

ஒலிக்காமலேயே அலைபேசியை

எடுத்துப் பார்ப்பது

இணையம் வந்த பிறகுதான்!"

பொதுவாக இணையத்தில் பதிவிடுவோரை பார்த்துச் சொல்லும் குற்றச்சாட்டு அவன் எப்ப பாத்தாலும் ஆன்லைனிலேயே இருப்பான்னு. ஆனால், உண்மையில் ஆன்லைனில் அதிக நேரம் இருப்பவர்கள் எந்தப் பதிவும் போடாமல் வெறுமனே வேடிக்கை பார்ப்பவர்கள்தான் என ஆய்வு சொல்கிறது.

Onlne | Instagram
Onlne | Instagram
Pixabay

இவர்கள் இணையத்தைக்கூட அணைத்து வைப்பதில்லை. 'இணையம் கற்றுக்கொடுத்ததில் முக்கியமானது... மெளனமாய் வேடிக்கை பார்ப்பது' எனும் பொன்மொழி படி வாழும் பொக்கிஷங்கள்.

பஸ்ஸில் ஏறின 10 வது நிமிஷத்தில் படுத்து பஸ் நின்னாதான் எழும்பும் சிலரைப் போல டைம்லைனில் சிலர், புரொபைல் பிக்சரை தவிர ஒண்ணும் இருக்காது. முருகன்னு பேர் வச்சா நோய் வராதுனு நினைத்து பேர் வைத்த 70'ஸ் கிட்ஸ் போல சாமி போட்டாவைத்தான் வைத்திருப்பார்கள். அப்புறம் அந்த முருகன் பேருக்கு பின்னாடி குமார் சேர்த்தால் டிரெண்டியாக இருக்கும் என நினைத்த 80 கிட்ஸ் போல் ஒரு பூ படம் வைத்தோ, எப்போதோ ஒரு முறை ஊட்டி சென்று கூலர்ஸ் போட்டு எடுத்த ஒரு போட்டோவை வைத்தோ புரொஃபைலை நிரப்பியிருப்பார்கள்.

நாகப்பாம்புனு சொன்னால் தப்புத்தாளம் போடணும், இல்ல நல்ல பாம்பு வீட்டுக்கு வந்திடும்னு நம்பிய 90'ஸ் கிட்ஸ் போல ஒரே ஒரு குட்மார்னிங் மெசேஜ் இருக்கும். அப்புறம் எல்லாரும் பதிவிடுவதைப் பார்த்து தைரியம் வந்து கடவாயில் கைவைத்திருக்கும் போட்டோ என பிக்கப் ஆவார்கள்.

#எதா இருந்தாலும் ஃபார்வேடுதான்

தாயத்து கட்டி வீரம் வந்த ராஜாதிராஜா சின்ராசு போல ஓரளவு வித்தை கற்றுக்கொண்டபின் என்ன ஏதுனு தெரியாம எதா இருந்தாலும் ஃபார்வேர்டு செய்வதுதான் இவங்க ஹாபி. இப்பதான் புதுசு என்பதால், அதிகம் பகிர்ந்தால் 1000 MB டேட்டா கிடைக்கும் தகவல்கள், புற்று நோய்க்கு மருந்து, தேசியகீதம் யுனேஸ்கோவில் செலக்ட் ஆனது, புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள், ராபின் சர்மாவின் Who will cry wen u die, வெந்தய தண்ணியில வெள்ளாவி புடிச்சா பித்த வெடிப்பு வராது, கருப்பட்டி சாப்பிட்டா கட்டிச்சளி வராது உள்ளிட்ட மருத்துவ குணமுள்ள தகவல்கள் என மார்கழி மாச சாணித்தண்ணியைப் போல சரளமாக தெளிப்பார்கள். மேலும் முக்கால் கிலோமீட்டர் நீளமுள்ள நீதிக்கதைகள், LKG குழந்தை ஆக்சிடன்ட் ஆனது என எல்லாத்தையும் ஃபார்வேர்டு செய்துவிட்டு புதுசா மீசைக்கு டை அடிச்சது போல ஒரு கர்வத்துடனேயே சுத்துவார்கள்.

சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள்

சுயசார்பு இந்தியா போல முதன்முதலில் தானே ஒரு போட்டோஷாப் செய்து குட்மார்னிங், குட் நைட் இடுவார்கள். இன்னும் சிலர் சாமத்தில வாரேன் சாமந்திப்பூ தாரேங்கிற மாதிரி அதிகாலை 4 மணிக்கெல்லாம் அன்பான வணக்கம்னு அலப்பறை ஆரம்பிச்சிடுவாங்க... அரே ஓ சம்போ!

#பின் நவீன கவிஞர்கள்

கவிதையில் களி கிண்ட ஒரு குரூப் காத்திருக்கும். மரத்தில இருக்கு காய், தூங்கத்தேவை பாய்னு கவிதை எழுதினால் கண்டுபிடிச்சிருவாங்கனு சொல்லி... வார்த்தைகளை வச்சே வடை சுடுவது. `காயம்'னு ஒரு கான்செப்ட் புடிச்சு ஓயாம அதை வைத்தே உடுக்கை அடிப்பது. சுகர் இருப்பவர்களுக்கு வந்த காயம்கூட ஆறிடும் ஆனா கவிதை எழுதுவோர்க்கு ஏற்படும் காயம் மட்டும் ஆறாதுப்பே.

Mobile Phone Usage
Mobile Phone Usage

அடுத்தது தேநீர்... இதைக் குடிப்பதை அப்படியே சிலாகிக்கணும். அதை டீ கப்புனு போட்டா தெய்வ குத்தம் ஆகிடும். அதனால் கண்டிப்பா கோப்பை, குவளைனு போட்டே ஆகணும். அப்புறம் டீ குடினு சொல்லக்கூடாது மிடறு, விழுங்குனு நவீனப் படுத்திக்கணும். உலகத்தில் நான் ஒரு அப்பாவி என்னை ஏமாத்திட்டான். உண்மையானவனாய் இருக்கக் கூடாது இதை மட்டுமே வலியுறுத்தி கபீம்குபாம், குபாம் கபீம்னு மாத்தி மாத்திப் போரிங் பவுடரை போட்டு படிக்கிறவன் உஸ்ஸப்பானு சொல்லும் வரை அடிக்கணும். ஊருக்கு ஊர் கபடி நடத்திற மாதிரி கவிதைப் போட்டி நடக்க ஆரம்பிச்சிருச்சு. அதில் கலந்துகொண்டதை கவர் போட்டோவாய் வைத்தால் நீயும் கவிஞனே.

இதுக்கு மேலையும் மெளனம், அடர்த்தி, காமம், சிறகு, மழைனு அடியோ அடினு அடிக்கணும். இதெல்லாம் தவறியும்கூட புரியக் கூடாது. அப்படியே புரிந்தாலும் அது கபசுர குடிநீரை கல்ப்பா அடிச்சது போல் இருக்கணும் சாமீ! மொழிபெயர்ப்பு கவிதைகளை படித்துவிட்டு அதில் உள்ள மொக்கை வார்த்தைகளைப் போட்டு முட்டுக் கொடுப்பாங்க பாருங்க.. உஸ்ஸ்...

போதா குறைக்கு டைம்லைன் ID-யில் மறக்காம கவிஞர், கவிதாயினி, ரைட்டர், தமிழச்சி, வெளிப்படையான்/ள், நேர்மையானவன்/ள் என இருக்க வேண்டும்.

Social Media
Social Media

#மென்சன் எனும் மேன்சன்

மேன்சனில் இருப்போர் போல மென்சன் போடுவோர் அதிகம்.

சொந்தமா எழுத வராததால் பை ரன்னர் போல ஓடி ஒரிஜினலுக்கு மென்சன் இடுவார்கள். அதனை ரசிக்கும்படி நகைச்சுவையாய் போடுவோர் அதிகம். ஆனால், அதில் சில புது முகங்கள் உள்ள வந்து உருட்டுக் கட்டையில் அடிப்பாங்க. பட்டுக்கோட்டைக்கு வழி என்னனு கேட்டால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம் என்பது மாதிரி என்னனே தெரியாம வந்து பல்பொடி விற்பாங்க. சீரியசா இலக்கிய விவாதம் செய்யும்போது சுந்தர ராமசாமி எங்க ஊருக்கு வந்திருந்தார். ஆட்டோகிராப் வாங்குவதற்குள் ஆட்டோ பிடித்து போயிட்டாருனு அடிச்சுவிடுவாங்க.

தான் ஒரு மொரட்டு இலக்கியவாதி என ஒவ்வொரு மொமன்ட்டும் நினைக்க வைப்பார்கள். எதாச்சும் படிச்ச வரி பதிவிட்டால் அதற்கு பாராட்டாம உடனே தனது YOU TUBE channel ஐ சப்ஸ்க்ரைப் செய்யலனா சாணி பவுடரை குடிச்சிருவேன்கிற ரேஞ்சுக்கு மென்சன் செய்வார்கள். ஷேர் சாட், ஹலோ ஆப்பில் வருவதை மட்டும் ஃபார்வேர்டு செய்வாங்க. சிலர் சொபஸ்டிகேட்டட் சோம்பேறி போல எதா இருந்தாலும் வாய்ஸ் மெசேஜ்தான் அனுப்புவாங்க. இல்லனா ஸ்டிக்கர் போட்டே சாவடிப்பாங்க.

Mobile usage
Mobile usage

#அமைதியோ அமைதி

தமிழ் பேசத் தெரியும்; எழுதத் தெரியும்; ஆனால் டைப் பண்ணத் தெரியாது எனச் சொல்லும் நவீனவாதிகள் இவர்கள்.

தாமரை கூட மலரும் ஆனா இவங்க டைம்லைனிலிருந்து ஒற்றை வார்த்தை கூட உதிராது. ஆன்லைன் வந்ததிலிருந்து இதுவரைக்கும் ஒரு பதிவோ, பதிலோ எதுவும் போட்டிருக்க மாட்டார்கள். சப் ஜெயிலுக்கு ஜாமீன் கையெழுத்து போட வந்தவர்கள் போல பொறுமையா இருப்பாங்க. எங்க பேசினா மாட்டிக்குவோம்கிற மாதிரியே மெய்ன்டைன் பண்ணுவார்கள். நான் பதிவெல்லாம் ஒண்ணும் போடமாட்டேன்னு ஒரு பெருமை வேற. பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னால்கூட ரிப்ளை செய்யாமல் லைக் மட்டும் இடும் லைக்கியன்ஸ். ஆனால், அதிக நேரம் ஆன்லைனிலேயே இருப்பவர்கள் இவங்கதான். வெட்டியா வேடிக்கை பார்ப்பதில் அலாதி பிரியம் இவர்களுக்கு. இதுக்கு அந்தப் பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே பாஸ்.

#ஆரோக்கியமாய் அணுகலாம்

அரசியல், கருத்தியல் தவிர்த்து ஏராளமான தகவல்கள் இருப்பது இணையம்தான். கற்றுக்கொள்ள எவ்வளவோ இருந்தும் இன்னும் வேடிக்கை வீடியோக்களை மட்டும் கண்டு கடந்து போய்விடாமல் தனக்கு தெரிந்த அறிந்த பங்களிப்பை அதில் செய்ய வேண்டும். ஓய்வாக இருக்கும்போது நம் டைம்லைனை பாருங்கள். அதில் நல்ல விஷயங்கள் இல்லையெனில் இனி நல்ல பகிர்வை செய்ய முயற்சி செய்யலாம். வீண் சண்டைகளைத் தவிர்ப்பது மன அமைதிக்கு மகிழ்ச்சி தருவது. படித்த வரிகளையோ, எண்ணங்களை நாகரிகமாய் பகிரும்போது அதே ஒத்த சிந்தனையுள்ள பலரை நண்பராக்கலாம். பிடித்த வரியை தாராளமாய் பகிரலாம். பாராட்டலாம்.

Mobile Usage
Mobile Usage
Pixabay

"நீ கற்றுக்கொள்ள தயாராய் இருக்கும்போது உன் குரு முன்னால் தோன்றுவார்" என்பது புகழ்மிக்க வரி.

நல்ல சிந்தனைகளைத் தேட ஆரம்பிக்கும்போது சுவாரஸ்யமான பல விஷயங்கள் நம் விரலருகில் வந்து நிற்கும். அது நம் அறியாமையைத் திறக்கும் இன்னொரு சாவி போலத் தோன்றும்.

ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள நினைக்கும்போதும் புதிய தகவலாய் வந்து குவியும். அப்போது அதை நமக்காக டைரியிலும் குறித்து வைத்தால் பல நாள்கள் உபயோகமாக இருக்கும்

சேமிப்பும், கடனும், இதுபோல் குறிப்பும் ஆரம்பத்தில் சிறிதாய் இருந்தாலும் பின்னால் விஸ்வரூபமாய் விளங்கும். நாம் கற்றுக்கொள்வதோடு பிறருக்கும் பகிரும்போது இருவருக்கும் உதவியாய் இருக்கும். இனியாவது இணையத்தை ஆரோக்கியமாய் பயன்படுத்தலாமே!

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/