“எஸ்.பி உங்களைப் பார்த்து விசாரிச்சுட்டுப் போக வந்திருக்கார் தலைவரே!”
“என்னை விசாரிச்சு விசாரிச்சுதான்யா இன்ஸ்பெக்டரா இருந்த அவர் எஸ்.பியே ஆனாரு!”

- அஜித்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``தலைவருக்குப் பொருளாதாரம் தெரியவில்லை என்று குறை கூறுவோர், அவருக்கு மற்ற சப்ஜெக்ட்டுகள் தெரியும் என்பது போன்ற பொருளில் பேசுவதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும்!’’

- வி.சி. கிருஷ்ணரத்னம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“உலகத்தின் எல்லா நாடுகளிலும் உங்களுக்குக் கிளைகள் இருக்கிறதா சுவாமி ஜீ..?”
“தூதரகங்களே இருக்கு..!”

- பழ.அசோக்குமார்
“குண்டும் குழியுமா உள்ள சாலைகளைப் பார்த்துட்டு தலைவர் நொந்துபோயிட்டார்...”
“மக்கள் கஷ்டப்படுவாங்கன்னு நினைச்சா?”
“இல்ல. ரோடு போட பினாமி பேர்ல கான்ட்ராக்ட் எடுத்திருந்தா செம துட்டு பார்த்திருக்கலாமேன்னு..!”

- வி. ரேவதி, தஞ்சை