Published:Updated:

Instagram: ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் களமிறக்கும் புதிய செயலி!- சிறப்பம்சம் என்ன?

இன்ஸ்டாகிராம்
News
இன்ஸ்டாகிராம்

எலான் மஸ்கின் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்ட புதிய சமூக வலைத்தளச் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Published:Updated:

Instagram: ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் களமிறக்கும் புதிய செயலி!- சிறப்பம்சம் என்ன?

எலான் மஸ்கின் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்ட புதிய சமூக வலைத்தளச் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம்
News
இன்ஸ்டாகிராம்
பிரபல சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமை  கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மற்ற சமூக வலைதளங்களைவிட இன்ஸ்டாகிராமிற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. இதனால் புது புது அப்டேட்டுகளை அந்த நிறுவனம் வழங்கிக்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் எலான் மஸ்கின் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையமாகக் கொண்ட புதிய சமூக வலைத்தளச்  செயலியை மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் புகைப்படம், வீடியோ மற்றும் இணைப்பு லிங்க்-களையும் இணைக்கும் வகையில் ஏற்பாடுகளை நிபுணர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியில் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய செயலி வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து ப்ளூ டிக்கிற்கு  கட்டணம் வசூலிப்பது வரை பல்வேறு நடவடிக்கைளை ட்விட்டரில்  மேற்கொண்டு வந்ததால் பயனர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி இருந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யவுள்ள இந்த புதிய செயலி பயனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெரும் என்று கூறப்படுகிறது.