Published:Updated:

அடிபணிந்த ஃபேஸ்புக்... ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களுக்கு பணம் கொடுக்க ஒப்புக்கொண்டது ஏன்?!

பேஸ்புக் தற்போது Seven West என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அடுத்த மூன்று வருடங்களில் உலகம் முழுவதும் செய்திகளுக்காகத் தோராயமாக 7230 கோடி ரூபாய் செலவிடப்போவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

சமூக வலைத்தளங்கள் மற்றும் தேடல் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்குக் குறிப்பிட்ட பணம் செலுத்தும் புதிய சட்டத்திருத்தமான 'News Media and Digital Platform Mandatory Bargaining code' ஆஸ்திரேலியாவில் அமலானது.

கடந்த பல மாதங்களாகவே டெக் நிறுவனங்களுக்கும் ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் தங்கள் தளத்தில் செய்திகளை முடக்கியிருந்த ஃபேஸ்புக் (Facebook) நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த முடக்கத்தை நீக்கி செய்தி நிறுவனங்களுடன் இயைந்துபோக முடிவெடுத்துள்ளது.

''ஆஸ்திரேலிய அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகு, செய்தி நிறுவனங்களுடன் வணிக ரீதியிலான உறவை மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்'' என அறிவித்திருக்கிறது ஃபேஸ்புக்.

பிரேசில் செயற்கைக்கோளுடன் விண்ணில் பறக்கத்தயாராகும் இந்தியாவின் PSLV C51!
Facebook, Google | பேஸ்புக், கூகுள்
Facebook, Google | பேஸ்புக், கூகுள்

கூகுள் ஏற்கனவே, News Corp மற்றும் Nine Entertainment ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஃபேஸ்புக் தற்போது Seven West என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அடுத்த மூன்று வருடங்களில் உலகம் முழுவதும் செய்திகளை செய்தி நிறுவனங்களிடம் இருந்து வாங்க தோராயமாக 7,230 கோடி ரூபாய் செலவிடப்போவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

முதலில் ஆஸ்திரேலிய அரசை மிரட்டும் வகையில் நடந்துகொண்ட ஃபேஸ்புக் பணிந்துபோக ஆஸ்திரேலிய அரசின் உறுதியான நிலைப்பாடுதான் காரணம். ஆஸ்திரேலிய அரசைப் பகைத்துக்கொண்டால், அந்நாடு பல்வேறு உலகநாடுகளுடன் இணைந்து பல பிரச்னைகளை செய்யலாம், அதனால் தங்கள் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என உணர்ந்து ஆஸ்திரேலிய அரசின் சட்டத்துக்கு அடங்கிப்போயிருக்கிறது ஃபேஸ்புக்.

ஆஸ்திரேலியாவில் தற்போது ஆரம்பமாகியிருக்கும் இந்நடைமுறை மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பிரான்சும் இதே போன்று டெக் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்குப் பணம் செலுத்தும் வகையிலான புதிய விதிமுறைகளைக் கொண்டு வர இருக்கின்றன. மேலும், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் இது குறித்து ஆலோசித்து வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு