Published:Updated:

வெர்ஷன் “HL-2M Tokamak” - இது, சீனாவின் பிரமாண்ட டூப்ளிகேட்!

சீனர்கள் உருவாக்கியுள்ள ஒரு பொருளின் போலியைக் கண்டால், நிச்சயம் நாம் அனைவரும் ஆச்சர்யமடைவோம்.

பிரமாண்ட டூப்ளிகேட்
பிரமாண்ட டூப்ளிகேட்

ஒரு பொருளுக்கு அச்சு அசலான மற்றொரு போலியை உருவாக்குவது சீனர்களுக்குக் கைவந்த கலை. அவர்கள் தயார் செய்யும் அந்தப் போலிக்கும் அசலுக்கும் கொஞ்சம்கூட வித்தியாசமில்லாத பல பொருள்கள் நம் சந்தைகளில் உலா வருவதை நாம் நேரில் கண்டிருப்போம். இந்நிலையில், தற்போது சீனர்கள் உருவாக்கியுள்ள ஒரு பொருளின் போலியைக் கண்டால் நிச்சயம் நாம் அனைவரும் ஆச்சர்யத்தில் வாய்பிளந்து போவோம்.

சீனா
சீனா

என்னதான் பாஸ் அந்தப் பொருள்? நாம், வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பொருளாதானே இருக்கப்போகுது என்கிறீர்களா... அதுதான் இல்லை. சின்ன மாறுதல், வீட்டுக்கு உள்ளே இருக்கும் பொருள் அல்ல, வெளியே இருக்கும் ஒன்று. ஆம், நாள் தவறாமல் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் சூரியனைத் தற்போது செயற்கையாக உருவக்கியிருக்கிறார்கள், சீன விஞ்ஞானிகள். 'என்னது சூரியனையா?' என ஷாக்காகாதீர்கள். சீனாவின் தேசிய அணுசக்தி நிறுவனம், சௌத் வெஸ்டர்ன் இயற்பியல் நிறுவனத்துடன் இணைந்து, சிசோன் (Sichuan) மாகாணத்தில் உள்ள லெஷன் நகரில் உருவாக்கப்பட்டுள்ள சூரியனின் இந்த டூப்ளிகேட் வெர்ஷனுக்கு “HL-2M Tokamak” என பெயரிடப்பட்டுள்ளது.

சூரியனுக்கு நிகரான வெப்பத்தை இவர்களால் எப்படி உருவாக்க முடிகிறது? என்று நாம் நினைக்கும்போதே, சூரியனைவிட சுமார் 7 மடங்கு வெப்பத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள் இவர்கள். அதாவது, சூரியனின் வெப்பம் 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ், இந்த செயற்கைச் சூரியனைத் தற்போது சுமார் 100 மில்லியன் டிகிரி செல்ஷியஸ் அளவில் பரிசோதனை செய்து வெற்றிபெற்றுள்ளனர். உலகில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களும் 'அணுப் பிளவு' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்திசெய்யும் வேளையில், இந்த HL-2M 'அணுச் சேர்கை' தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

வெர்ஷன் “HL-2M Tokamak” - இது, சீனாவின் பிரமாண்ட டூப்ளிகேட்!

அணுக்களை ஒன்றாகச் சேர்க்கும்போது உண்டாகும் சக்தி, அதாவது 'அணுச் சேர்கை' சக்தி தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்பாட்டில் இல்லாத நிலையில், தற்போது இந்தக் கருவியில் உள்ள பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டால், 'அணுப் பிளவு' தொழில்நுட்பத்தைவிட தூய்மையான மற்றும் மலிவான செலவில் அதிக ஆற்றலை உருவாக்கிவிடமுடியும். மேலும், அணுக்கழிவுகளின் அளவும் இதில் குறைவு என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைச் சூரியன், பிரான்ஸில் உள்ள சர்வதேச வெப்ப ஆற்றல் பரிசோதனை உலைக்கு சீனாவின் பங்களிப்பாகும். ITER என்பது சுமார் 20 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய அணு இணைவுத் திட்டமாகும். சீனாவுடன் 34 நாடுகள் பங்கேற்றுள்ள இத்திட்டம், 2025-ம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.