Published:Updated:

`தேவதை குளித்த துளிகளை அள்ளி..!’ - 30 டாலருக்கு விற்ற இன்ஸ்டாகிராம் ஸ்டார்

கார்க்கிபவா

தான் குளித்த நீரை தன் ஃபாலோயர்களுக்கு 30 டாலர் என விற்றிருக்கிறார் இன்ஸ்டாகிராம் ஸ்டார் ஒருவர்

Belle Delphine
Belle Delphine ( Belle Delphine / Instagram )

ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியிலிருப்பது எது என்றால் என்ன சொல்வோம்? அமேசான், ஃப்ளிப்கார்ட் தானே? ”அதெல்லாம் பழசு ப்ரோ... இப்பலாம் எல்லாமே இன்ஸ்டாலதான்” என்கிறார்கள் ஜென் இஸட் இளசுகள். இன்ஸ்டா மூலம் தங்களைப் பிரபலப்படுத்தி அதன் மூலம் வேண்டியதை விற்பது அதிகரித்து வருகிறது. அதில் விற்கப்படும் பொருள்களும் வித்தியாசமாக இருப்பதுண்டு. அப்படியொன்றுதான் ’பாத் வாட்டர்’.

Belle Delphine க்கு இன்ஸ்டாவில் 39 லட்சம் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். கோஸ்ப்ளே (cosplay) ஆர்ட்டிஸ்ட்டான பெல்லிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். கோஸ்ப்ளே என்பது புகழ்பெற்ற படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள் அல்லது சீரியலில் வரும் கதாபாத்திரங்களைப் போலவே உடையணிந்து அவர்களைப் போலவே நடித்துக் காட்டுவது.

பெல்லி தன் ஃபாலோயர்களிடம் தான் குளித்த நீரை பாட்டிலில் அடைத்து 30 டாலருக்கு விற்கப்போவதாக அறிவித்தார். “இது என்ன லூஸுத்தனமான ஐடியா” என ஒருபக்கம் விமர்சனம் வந்தாலும் மற்ற மூன்று பக்கங்களிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்தன. மூன்றே நாளில் மொத்த பாட்டில்களும் விற்றுத் தீர்ந்தன.

பாட்டிலின் மேல் “This water is not for drinking and should only be used for sentimental purposes." என எழுதியிருக்கிறார் பெல்லி. அது என்ன சென்டிமென்ட் எனப் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது இணைய உலகம். சத்தமில்லாமல் டாலர்களைக் குவித்துக்கொண்டிருக்கிறார்.