Published:Updated:

மருத்துவர், பேராசிரியர்... ட்விட்டர் CEO பராக் அக்ரவாலின் மனைவி வினிதா அகர்வாலா புரொஃபைல்!

பராக் - வினிதா
News
பராக் - வினிதா

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அக்ரவாலின் மனைவி, வினிதா அகர்வாலா. இருவருக்கும் 2016-ல் திருமணம் முடிந்தது. தற்போது கலிபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் வசிக்கும் இந்தத் தம்பதிக்கு அன்ஷ் என்ற மகன் உள்ளார்.

கடந்த இரண்டு நாள்களாக உலகம் முழுக்கச் செய்தியாகியிருக்கிறார், முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அக்ரவால். ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து பராக் அக்ரவால் ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பராக் - வினிதா
பராக் - வினிதா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தியாவைச் சேர்ந்த பராக் அக்ரவால் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் மைக்ரோசாஃப்ட், யாஹு போன்றவற்றில் பணியாற்றினார். பின் ட்விட்டர் நிறுவனத்தில் சேர்ந்த பின்னர், விளம்பரம் தொடர்பான தயாரிப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். படிப்படியாக அவர் செயற்கை நுண்ணறிவு வேலைகளிலும் ஈடுபட்டு, ட்விட்டரின் தொழில்நுட்பப் பிரிவின் தலைமைப் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அக்ரவாலின் மனைவி, வினிதா அகர்வாலா. இருவருக்கும் 2016-ல் திருமணம் முடிந்தது. தற்போது கலிபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் வசிக்கும் இந்தத் தம்பதிக்கு அன்ஷ் என்ற மகன் உள்ளார்.

வினிதா அகர்வாலா
வினிதா அகர்வாலா
Twitter Photo:/ @vintweeta

பராக் அக்ரவாலின் மனைவி வினிதா அகர்வாலா அடிப்படையில் ஒரு மருத்துவர். தற்போது ஸ்டான்ஃபோர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் துணை மருத்துவப் பேராசிரியராக உள்ளார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும், ஹார்வர்ட் மெடிக்கலில் ஸ்கூலில் எம்.டியும் முடித்துள்ளார். தொடர்ந்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிர் இயற்பியலில் பி.எச்டி பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும் அவர் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், நிர்வாகிகள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள நபர்களை இணைக்கும் தளமான `Andreessen Horowitz'-ல் எழுதி வருகிறார். சோஷியல் மீடியாவில் காணக் கிடைக்கும் இந்தத் தம்பதியின் புகைப்படங்கள், அவர்களின் இந்திய பாரம்பர்ய திருமணம், பராக்கின் பயண ஆர்வம் போன்றவற்றை சொல்கின்றன.

பராக் அக்ரவால் ட்விட்டரின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியான பிறகு, ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 24,000-ல் இருந்து 2.5 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. வினிதா அகர்வாலா தன் கணவரின் புதிய பொறுப்பு பற்றி தன் சமூக வலைதளப் பக்கத்தில் இதுவரை எதுவும் பதிவிடவில்லை.