ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் கூகுளின் தாய் நிறுவனமான ஆஃல்பாபெட் போரைத் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம்.
ரஷ்யாவில் பல இணையதள நிறுவனங்கள் அமைக்கப்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதில் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களும் அடங்கும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனவே, நிறுவனங்களை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யாவைப் பழிவாங்கும் விதமாக போரை தூண்டும் விதத்தில் இந்த நிறுவனங்கள் செயல்படுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பாவில் இயங்கிவரும் ரஷ்ய ஊடகங்களுக்கு எதிராக, வெளிநாடுகளில் செயல்படும் இணைய சேவைகள் பாகுபாடு காட்டுவதை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய மாநிலத்தின் தகவல் தொடர்பு நிறுவனமான ரோஸ்கோமனட்சோர் (Roskomnadzor) கோரிக்கை விடுத்துள்ளது.