Published:Updated:

Wordle வார்த்தை விளையாட்டை வளைத்துப் போடும் நியூ யார்க் டைம்ஸ்... எத்தனை இலக்கத் தொகை தெரியுமா?

Wordle வார்த்தை விளையாட்டு

உலகமெங்கும் பிரபலமாகி வரும் Wordle வார்த்தை விளையாட்டை வாங்க உள்ளது தி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ்.

Wordle வார்த்தை விளையாட்டை வளைத்துப் போடும் நியூ யார்க் டைம்ஸ்... எத்தனை இலக்கத் தொகை தெரியுமா?

உலகமெங்கும் பிரபலமாகி வரும் Wordle வார்த்தை விளையாட்டை வாங்க உள்ளது தி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ்.

Published:Updated:
Wordle வார்த்தை விளையாட்டு
Wordle விளையாட்டு கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் பெரும்வரவேற்பை பெற்ற வார்த்தை விளையாட்டு. இப்போது இந்த கேமை அமெரிக்க நாளிதழான நியூ யார்க் டைம்ஸ் வாங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Wordle கேம் மிகவும் எளிமையான விளையாட்டு. மறைக்கப்பட்டிருக்கும் அன்றைய ஐந்து எழுத்து வார்த்தை என்ன என்பதை ஆறு வாய்ப்புகளில் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் கொடுக்கிற எழுத்துக்கள், கண்டுபிடிக்க வேண்டிய வார்த்தையில் சரியான இடத்தில் இருந்தால், அந்தக் கட்டம் பச்சை வண்ணமாகவும், தவறான இடத்தில் இருந்தால் மஞ்சள் வண்ணமாகவும், அந்த வார்த்தைக்குச் சம்பந்தமில்லாத எழுத்தாக இருந்தால் சாம்பல் வண்ணமாகவும் மாறும். ஆறு வாய்ப்புகளில் நீங்கள் அந்த வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் விளையாடுகிற விளையாட்டாக பிரபலமாகி உள்ளது இந்த Wordle.

எந்தவித கிராபிக் விஷயங்களும் இல்லாத இந்த எளிமையான வார்த்தை விளையாட்டு அதிகப்படியான வரவேற்பை பெற்றது தனக்கே ஆச்சரியமாகயிருப்பதாக இந்த விளையாட்டை உருவாக்கிய ஜாஸ் வார்டில் (Josh Wardle) தெரிவித்திருக்கிறார். இவர் அமெரிக்காவின் புரூக்ளினைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Wordle வார்த்தை விளையாட்டு
Wordle வார்த்தை விளையாட்டு

தி நியூ யார்க் டைம்ஸ் இந்த கேமை வாங்குவது குறித்த ஒப்பந்தத்திற்கான தொகை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஏழு இலக்கத்தில்தான் அந்தத் தொகை இருக்கும் என்று மட்டும் தெரிகிறது. (டாலர் மதிப்பில் ஏழு இலக்கம், பாஸ்!) இருந்தும் இந்த விளையாட்டிற்கு உலகமெங்கும் ரசிகர்கள் உருவாகிவரும் இந்த வேளையில் இந்தத் தொகைக் குறைவான ஒன்றாகவே தோன்றுகிறது என்ற கருத்தும் இணையத்தில் உலவுகிறது.

எது எப்படியோ, நியூ யார்க் டைம்ஸ்-இன் குறுக்கெழுத்து புதிர், ஸ்பெல்பீ போன்ற விளையாட்டுகள் புகழ்பெற்றவை. அவற்றோடு Wordle உம் இணைய உள்ளது. "இந்த விளையாட்டுக்கான பாதிப்பு நியூ யார்க் டைம்ஸில் இருந்து வந்ததுதான். எனவே, அதனோடான இணைப்பு இயல்பானதே" என்கிறார் ஜோஷ்.

இப்போது இந்த விளையாட்டு இலவசமாக பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. நியூ யார்க் டைம்ஸ் இதை வாங்கிய பிறகும் அப்படியே தொடரும் என்று அறிவித்திருக்கிறார். 2013-ல் இதற்கான ஐடியாவை ஜோஷ் சொன்ன போது யாரும் பொருட்படுத்தவே இல்லையாம். இன்றைக்கு அதன் மதிப்பு பிரமிக்கவைக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism