Published:Updated:

ஃபேஸ்புக்கை உருவாக்க உதவிய ஷெரில் சாண்ட்பெர்க் அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா... காரணம் என்ன?

ஷெரில் சாண்ட்பெர்க்

ஃபேஸ்புக்கை உருவாக்க உதவிய ஷெரில் சாண்ட்பெர்க், ஃபேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவிலிருந்து தன் பொறுப்புகளைத் துறந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதுதான் சர்வதேச லெவலில் ஹாட் டாபிக். இதற்கான காரணம் என்ன?

ஃபேஸ்புக்கை உருவாக்க உதவிய ஷெரில் சாண்ட்பெர்க் அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா... காரணம் என்ன?

ஃபேஸ்புக்கை உருவாக்க உதவிய ஷெரில் சாண்ட்பெர்க், ஃபேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவிலிருந்து தன் பொறுப்புகளைத் துறந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதுதான் சர்வதேச லெவலில் ஹாட் டாபிக். இதற்கான காரணம் என்ன?

Published:Updated:
ஷெரில் சாண்ட்பெர்க்

ஃபேஸ்புக்கின் சிஇஓ-வான மார்க் சக்கர்பெர்க், தான் 23 வயதாக இருக்கும்போது 2008-ல் ஃபேஸ்புக் விளம்பர மார்க்கெட்டை உயர்த்துவதற்காக கூகுளிலிருந்து ஷெரில் சாண்ட்பெர்க்கை அழைத்து வந்தார். சாண்ட்பெர்க் ஃபேஸ்புக்கின் முக்கியமான நிர்வாகியாக பொறுப்பேற்றப்பின் ஃபேஸ்புக்கின் வருமானம் உச்சிக்குச் செல்ல ஆரம்பித்தது. குறிப்பாக ஃபேஸ்புக்கின் விளம்பர மார்க்கெட் அசுர வளர்ச்சி அடைந்தது. கடந்த 2021-ல் ஃபேஸ்புக்கின் 97 சதவிகித வருமானமான சுமார் 117 பில்லியன் டாலர், விளம்பரங்களின் மூலம் மட்டுமே வந்ததாகக் கூறப்படுகிறது.

ஷெரில் சாண்ட்பெர்க்
ஷெரில் சாண்ட்பெர்க்

இந்நிலையில் ஃபேஸ்புக் உலகளவில் ஒரு பெரிய நிறுவனமாக கோலோச்ச உதவி செய்து, மார்க் சக்கர்பெர்க் உடன் 14 ஆண்டுகள் பயணித்து வந்த ஷெரில் சாண்ட்பெர்க், ஃபேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவிலிருந்து தன் பொறுப்புகளைத் துறந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இது பற்றிக் கூறிய அவர், "பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதற்கான நேரம் இது. எதிர்காலம் என்ன கொண்டு வரும் என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. யாரும் நம்முடன் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை என்று நான் கற்றுக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்க் சக்கர்பெர்க்
மார்க் சக்கர்பெர்க்

இது பற்றிக் கருத்து கூறிய மார்க் சக்கர்பெர்க், "எனக்கு அப்போது 23 வயதுதான். ஒரு நிறுவனத்தை நடத்துவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஷெரில்தான் எங்கள் விளம்பர வணிகத்தை உருவாக்கினார். சிறந்த நபர்களை பணியமர்த்தினார். எங்கள் மேலாண்மை கலாசாரத்தை உருவாக்கினார். மேலும் ஒரு நிறுவனத்தை எப்படி நடத்துவது என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் என் வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்களில் அவர் என்னுடன் இருந்தார். எதிர்காலத்தில், ஷெரிலுடன் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தும் தருணங்களை இழந்தது எண்ணி நான் வருத்தமடைகிறேன்" என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism