Published:Updated:

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டெக் பிட்ஸ்

மு.பிரசன்ன வெங்கடேஷ்

டெக் பிட்ஸ்

மு.பிரசன்ன வெங்கடேஷ்

Published:Updated:
டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டெக் பிட்ஸ்

ஒரு படம்

அக்வா மேன்!

டெக் பிட்ஸ்

காமிக்ஸ் உலகின் இரண்டு ஜாம்பவான்கள், மார்வெல் மற்றும் டி.சி. இவற்றில் மார்வெல் தன் அனைத்து சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுக்கும் தனித்தனி படம் கொடுத்துவிட, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல எனத் தன்னுடைய கதாபாத்திரமான அக்வா மேனுக்குப் புதிய படம் ஒன்றை இயக்குகிறது டி.சி காமிக்ஸ். பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர் உமன் வரிசையில் அக்வாமேனுக்கும் பல லட்சம் லைக்ஸ்களோடு காத்திருக்கிறது ரசிகர் பட்டாளம். படம், வரும் டிசம்பருக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு கேட்ஜெட்

எலெக்ட்ரானிக் கிட்!

டெக் பிட்ஸ்

நம் வீட்டுக்கு எலெக்ட்ரிக்கல் வேலைசெய்ய யாராவது வந்தால் கண்கொட்டாமல் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்தானே. நாமும் அவர்கள் கையாளும் பொருள்களை எடுத்து பார்ப்போம். அதற்குள் “ஏய், தொடக் கூடாது” என எச்சரிக்கை வரும். எலெக்ட்ரானிக்  காம்பொனன்ட்ஸ் புராஜெக்ட் கிட்டில் சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற எலெக்ட்ரானிக் பொருள்கள் இருக்கும். எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு உள்ளிருக்கும் பொருள்கள் அனைத்தும் இருக்கும். நாம் நம் கற்பனைக் குதிரையையும் கொஞ்சம் அறிவையும் பயன்படுத்தி அதை வித்தியாசமான காம்போக்களில் கனெக்ட் செய்து அறிவை வளர்க்க வேண்டியதுதான்.

ஓர் ஆப்

டிஜிட்டல் டைரி!

டெக் பிட்ஸ்

சிறு வயதிலிருந்தே சிலருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும். நமக்குக் கிடைத்த மகிழ்ச்சியான தருணங்கள், நாம் செய்த தவறுகள் என அனைத்தையும் அதில் பதிவு செய்வோம். இந்த டிஜிட்டல் உலகில் நாமும் டிஜிட்டலாக மாற வேண்டாமா? டைரி எழுதும் பழக்கம் கொண்டவர்களுக்காகவே மேலும் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி,  அதை உங்கள் மொபைலில் கொடுக்கிறது ‘ஜர்னி’ (Journey) செயலி. நீங்கள் தினம் தினம் நடப்பவற்றை எழுத்தில் பதிவுசெய்யலாம், ஆடியோவாகவும் பதிவுசெய்யலாம். அதோடு, அந்த நேரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணைத்து, நம் நினைவுகளை இன்னும் பசுமையாக வைத்துக்கொள்ளலாம்.

ஒரு கேம்

காட் ஆஃப் வார்!

மிரட்டலான கிராஃபிக்ஸ், தத்ரூபமான சண்டைக்காட்சிகள், அதிரடி கேம் பிளே என அனைத்துக்கும் பெயர் பெற்றது, ‘காட் ஆஃப் வார்’ வீடியோ கேம். 

டெக் பிட்ஸ்

2005-ல் ப்ளே ஸ்டேஷன் 2-வுக்கு முதல் காட் ஆஃப் வார் சீரிஸ் வெளியிடப்பட்டது. அதன் பிறகு இன்று வரை 8 சீரிஸ்கள் வெளிவந்து வசூலை வாரிக் குவித்தன. இதன் லேட்டஸ்ட் வெர்ஷன் ப்ளே ஸ்டேஷன் 4-க்கானது கடந்த ஏப்ரல் 2018-ல் வெளியிடப்பட்டது. வெளிவந்து முதல் மாதத்திலேயே 5 மில்லியன் பிரதிகள் விற்றுத் தன் மூதாதையர்கள் பெருமையைக் காப்பாற்றியிருக்கிறது இந்த லேட்டஸ்ட் வெர்ஷன்.

ஒரு புத்தகம்

மட்டில்டா!

டெக் பிட்ஸ்

குழந்தைகள் எழுத்தாளர் ரோல் தாலின் ஒரு ஆல் டைம் ஃபேவரைட் நாவல் ‘மட்டில்டா’. 2012 -ன் படி குழந்தைகளுக்கான நாவல்களில் முதல் 30 நாவல்களுக்குள் இடம்பிடித்துள்ளது. பொருள்களைத் தொடாமலேயே அதை அசைக்க முடிந்த சூப்பர் பவர்கொண்ட புத்திசாலி சிறுமி மட்டில்டா, வேண்டா வெறுப்பாகத் தன் பெற்றோர்களால் வளர்க்கப்படுகிறாள். அவள் படிக்கும் பள்ளியில் அவளது திறமையை அறிந்த ஆசிரியை ஹனி அவளை நல்ல நிலைக்குக் கொண்டுவரப் போராடுகிறாள். இடையில் மட்டில்டாவின் வளர்ப்பு சொந்தம் ஒருவரால் ஹனிக்குப் பிரச்னை வர அதை மட்டில்டா எப்படி சரிசெய்து ஹனியுடனே வாழ்க்கையை மேற்கொள்கிறார் என்பதே கதை.

தெரியுமா?

தென்னாப்பிரிக்கா நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் நெல்சல் மண்டேலா.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism