ஒரு புக்

தி க்யூரியஸ் இன்ஸிடன்ட் ஆஃப் தி டாக் இன் தி நைட் டைம்!

`தி க்யூரியஸ் இன்ஸிடன்ட் ஆஃப் தி டாக் இன் தி நைட் டைம்,’ 2003-ல் வெளிவந்த மர்ம நாவல். வித்பிரட்டின் சிறந்த நாவலுக்கான விருது, காமன்வெல்த்தின் சிறந்த முதல் புத்தகம் மற்றும் சிறந்த குழந்தைகளுக்கான கற்பனை நாவல் ஆகிய விருதுகளை வென்றுள்ளது. ஒரு நாயின் இறப்பு குறித்த மர்மத்தைக் கண்டுபிடிக்கக் கிளம்பும் 15 வயது சிறுவன் கிறிஸ்டோபர், முடிவில் தன் தாயைக் கண்டுபிடித்து அவர்களோடு தன் வாழ்க்கையை மேற்கொண்டு, முடிவில் ஒரு விஞ்ஞானியாக மாறும் இன்ட்ரஸ்டிங் மிஸ்டரி ஸ்டோரி. இதில், ஒவ்வொரு அத்தியாயத்தையும் குறிக்க எண்களை வரிசையாகப் பயன்படுத்தாமல், ப்ரைம் எண்களைப் பயன்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் மார்க் ஹேடன்.

ஒரு ஆப்

விக்கிஹௌ (Wikihow)

நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி தகவல் தேவைப்பட்டால் கூகுளை அணுகுவோம் . அதேபோல ஒரு விஷயத்தை எப்படிச் செய்ய வேண்டும் எனத் தெரியாவிட்டால் யாரிடம் கேட்பது என முழித்துக்கொண்டிருப்போம்தானே. இதோ, ‘விக்கிஹௌ’ (Wikihow) இருக்கிறார். அவரிடம் கேட்கலாம். இந்தச் செயலியில் ஒரு விஷயத்தை எப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்டால் போதும், விலாவாரியாகச் சொல்லிக்கொடுக்கும். இனி, ஏதாவது ஒரு விஷயத்தை எப்படி செய்ய வேண்டும் என நீங்களேத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் அணுக வேண்டிய முகவரி விக்கிஹௌ.

ஒரு கேட்ஜெட்

ரைடு ஆன் பைக்!

சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான வயது நமக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் சிறுவர்கள் ஓட்டுவதற்காகவே பிரத்யேகமாக ஒரு குட்டி பைக்கைத் தயாரித்திருக்கிறார்கள். பெரிய பைக்கைப் போலவே இருக்கும் இதில், கியர் மட்டும்தான் இருக்காது. மற்ற அனைத்து அம்சங்களும் இருக்கும். ஆக்ஸிலரேட்டரை கொடுத்தால் போதும், குறிப்பிட்ட அளவு வேகத்தில் செல்லும் இது, பேட்டரி சார்ஜிங் முறையில் இயங்கும். இனி என்ன வ்ர்... வ்ர்... வ்ரூம்... தான்.

ஒரு படம்

கேப்டன் மார்வல்!

அவெஞ்சர்ஸ், இன்ஃபினிட்டி வார், மார்வலின் மாஸ்டர்பீஸ். சமீபத்தில் வெளிவந்து வசூல் அள்ளிய படம். இந்தப் படத்தில், வில்லனை ஏற்கெனவே இருக்கும் சூப்பர் ஹீரோக்களால் அழிக்க முடியாமல் பாதியில் முடிந்திருக்கும். படத்தின் இறுதியில், யார் வந்து வில்லனை அழிக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு ஒரு சின்ன குறியீட்டைக் காட்டி சிம்பாலிக்காக முடித்திருப்பார்கள். அது வேறு யாரும் இல்லை, கேப்டன் மார்வல் என்ற புதிய கதாபாத்திரம்தான். இதுவரை கேப்டன் மார்வல் என்ற கதாபாத்திரம் மார்வல் படங்களில் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே, கேப்டன் மார்வலை அறிமுகப்படுத்துவதற்காகப் புதிய படத்தைத் தயாரித்திருக்கிறது மார்வல் காமிக்ஸ். மார்வல் ஒரு பெண் என்பது கூடுதல் தகவல்.

ஒரு கேம்

பப்ஜி (Pubg)

மொபைல் கேமிங்கில் சமீபத்திய ட்ரெண்டிங் இந்த பப்ஜி (Pubg). நூறு பேரை ஒரு குட்டித் தீவில் இறக்கி விட்டு விட, அதில் மற்ற அனைவரையும் வீழ்த்தி உயிர் பிழைக்கும் ஒருவர் மட்டுமே வெற்றியாளர். இதில் சிறப்பு என்னவென்றால், அந்த நூறு பேருமே வேறு வேறு நாடுகளில் இருந்து விளையாடுவார்கள். ஒரே நேரத்தில் நூறு போட்டியாளர்களுடன் போட்டி போட வேண்டும். இதில், நம் நண்பர்களுடன் இணைந்து குழுவாகவும் விளையாடி, மற்றவர்களை முதலில் தோற்கடிக்கலாம். 50 மில்லியன் டவுண்லோடுகளுடன் பிளே ஸ்டோரில் முதல் இடத்தில் இருக்கிறது பப்ஜி.

தெரியுமா?

பிரபல மொபைல் நிறுவனமான NOKIA தலைமையகம் அமைந்துள்ள நாடு, ஃபின்லாந்து.