Published:Updated:

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

Published:Updated:
டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டெக் பிட்ஸ்

ஒரு படம்

சஷாம்!

டெக் பிட்ஸ்

பழைய சூப்பர் ஹீரோக்களை வைத்தே தனித் தனியாகவும் சேர்த்தும் பல படங்கள் வெளிவந்துவிட்டன. அவர்களுக்கு ஒரு சின்ன இடைவெளி விடுவதற்காகப் புதிய சூப்பர் ஹீரோக்களைக் களம் இறக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன டி.சி-யும், மார்வலும். அந்த வகையில் டி.சி-காமிக்ஸின் புதிய கதாநாயகனாக அறிமுகமாகவிருப்பது, ‘சஷாம்’. 1941-ம் ஆண்டு வெளிவந்த ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் கேப்டன் மார்வல்’ என்ற காமிக் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து ‘சஷாம்’ கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளிவந்து ஹிட்டடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கேட்ஜெட்

ஸ்மார்ட் வாட்ச் ஃபோன்!

டெக் பிட்ஸ்

இப்போதெல்லாம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என உறுதி செய்வது மிகவும் அவசியம் ஆகிறது. குழந்தைகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ‘ஸ்மார்ட் வாட்ச்ஃபோன்’.  சிம் கார்டு வசதியுடன் வெளிவந்த இதில் ஜி.பி.எஸ்., வாய்ஸ் காலிங், சாட்டிங் போன்ற வசதிகளும் உள்ளன. வாட்ச்சின் பக்கவாட்டில்  SOS பட்டனும் உள்ளது. குழந்தைகள், ஏதாவது ஆபத்தில் இருப்பதுபோல உணர்ந்தால், இந்தப் பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றோர்களுக்கு தாங்கள் ஆபத்தில் இருப்பதை உணர்த்தலாம்,  ஜி.பி.எஸ் வசதியும் இருப்பதால், குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்டறியவும் முடியும். அதோடு, இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் முழுமையாகப் பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப் பட்டுள்ளன.

ஒரு கேம்

C.A.T.S.

டெக் பிட்ஸ்

நம் கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ற வகையில் புதிய புதிய காம்பினேஷன்களைப் பயன்படுத்த நமக்காக சண்டையிடும் இயந்திரத்தை உருவாக்க வேண்டும். இதேபோல, உலகம் முழுவதும் இருக்கும் பிளேயர்கள், அவர்களது இயந்திரத்தை உருவாக்கிக் களத்திலிறக்குவார்கள். அதில் எந்த இயந்திரம் மற்றவர்களது இயந்திரங்களைத் தோற்கடிக்கிறதோ, அதுவே வெற்றி வாகை சூடும். நமது இயந்திரத்தை வலுவாக வடிவமைக்கப் புதிய புதிய பார்ட்ஸ்களைப் பெறுவது, அவற்றை அப்கிரேடு செய்வதற்காக ‘பெட்டிங்’ கேமில் இறங்குவது எனச் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சம் இருக்காது, கேம் பிரியர்களுக்கான பெர்ஃபெக்ட் பேக்கேஜ்.

ஒரு புக்

கார்லோட்ஸ் வெஃப்!

டெக் பிட்ஸ்

‘ஸ்டுவர்ட் லிட்டில்’ கதாபாத்திரத்தை வைத்து நாவல் எழுதிய ‘இ.பி.ஒயிட்’டின் படைப்பு தான் ‘கார்லோட்ஸ் வெஃப்’.              1952-ல் வெளிவந்த இப்புத்தகம், நல்ல விமர்சனங்களையே பெற்றது. வில்பர் என்ற பன்றிக்கும் கார்லோட் என்ற சிலந்திக்கும் இடையே இருக்கும் ஆழமான நட்பை  விவரிக்கிறது. இதை மையமாக வைத்து 1973-ல் ஒரு அனிமேட்டட் சீரிஸ், 2003-ல் ஒரு படம் மற்றும் 2006-ல் ஒரு வீடியோ கேம் என மாற்றிக் கல்லா கட்டிவிட்டார்கள்.

ஒரு செயலி

Trello

டெக் பிட்ஸ்

எந்த ஒரு விஷயத்தையும் தனியகச் செய்து ஏன் கஷ்டப்படுகிறீர்கள், மற்றவர்களின் ஆலோசனையையும் கேட்கலாமே என்பதுதான் இந்தப் செயலியின் கான்செப்ட். எந்த வேலை என்றாலும் சரி, தெரியவில்லை என்றால் இந்தச் செயலியில் ஒரு ‘பிரசன்ட் சார்’ போட்டு வைக்கலாம். அதைப் பற்றித் தெரிந்தவர்கள், அதைப் பற்றிய அனுபவங்களைக் கூறுவார்கள். மற்றவர்கள் கேட்கும் கேள்விகளைப் பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் அவற்றைப் பற்றிய பதில்களையும் பதிவு செய்யலாம். நீங்களும் பயன்பெறலாம், மற்றவர்களுக்கும் உதவலாம்.

தெரியுமா?

மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றபோது அவரின் வயது 81