டாய் ஸ்டோரி!

சுட்டிகளுக்குப் பொம்மைகள் என்றால் ரொம்பப் பிரியம்தானே. அந்தப் பொம்மைகளுக்கு உயிர் வந்தால் எப்படி இருக்கும் என்ற சுட்டி கான்செப்ட் தான் டாய் ஸ்டோரி படத்தின் கதைக்கரு. இதற்கு முன்பு 3 பாகங்கள் வந்து ஹிட்டடித்த இந்த டாய் ஸ்டோரி படங்களின் தொடர்ச்சியாக வெளிவரவிருக்கிறது ‘டாய் ஸ்டோரி 4’. டாய் ஸ்டோரியின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜோஷ் கூலியே இந்தப் பாகத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தை, பிக்ஸர் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க, வால்ட் டிஸ்னி வெளியிடுகிறது படம் 2019 ஜூன் ரிலீஸ். வெயிட் பண்ணுவோம்.

ஹெரால்டு அண்டு தி பர்பிள் க்ரையான்!

ஒரு நாலு வயது சுட்டிக் குழந்தையிடம் மேஜிக் க்ரையான் ஒன்று இருக்கிறது. அதை வைத்து எதை வரைந்தாலும் அது நிஜமாக மாறும் மாயாஜாலத் தன்மை கொண்டது. அதை வைத்து வெவ்வேறு இடங்களை வரைந்து அதற்குள் செல்லும் குழந்தை, பிறகு தன் அறைக்குத் திரும்ப வழிகண்டுபிடிக்க முடியாமல் அந்த க்ரையானை வைத்து புதிய அறையைக் கண்டுபிடித்து உறங்கிவிடுவதுதான் கதை. 1955ல் வெளியான ‘ஹேரால்டு அண்டு தி பர்பிள் க்ரையான்’ என்ற இந்தப் புத்தகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஆறு சீரிஸ்கள் இதன் வரிசையில் வந்துவிட்டன.

ஃபார்சூன் சிட்டி!

தினமும் நாம் செய்யும் செலவுகளை ஒரு டைரியில் கணக்கெழுதி வைப்போம். அதனை டிஜிட்டலாக கணக்கு வைத்துக் கொண்டும் அந்தக் கணக்கை வைத்து ஒரு கேமையும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்தச் செயலி. இதில் நீங்கள் நிஜத்தில் செய்யும் செலவுக் கணக்குகளை வைத்து செயலியில் செலவு செய்து ஒரு சிட்டியை உருவாக்கி விளையாடலாம், அதன் மூலம் கொஞ்சம் சேமிப்பையும் கற்றுக்கொள்ளலாம். சிறுவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைச் சிறந்த வழியில் செலவழிக்கவும் பழகலாம்.

வேர்ல்டு ஆஃப் வார் ஷிப்ஸ்!

போர்க்கப்பல்களை வைத்து, நண்பர்களுடன் கைகோத்து விளையாடும் மற்றொரு ஆக்ஷன் கேம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் மாதிரிகளே இந்த விளையாட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைனில் விளையாடும் வசதியுடன் 2015-ல் வின்டோஸில் வெளிவந்த இந்த விளையாட்டு இப்போது ஆண்ட்ராய்டிலும் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்ஷன், அட்வென்ச்சர், மல்டிபிளேயர் எனப் பல வித பாசிட்டிவ் கலவையோடு கேம் அதிரி புதிரி ஹிட்.

- மு. பிரசன்ன வெங்கடேஷ்

தெரியுமா?

* சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், டாக்டர். வி.சாந்தா.