ஜானி இங்கிலீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகெய்ன்!

குழந்தைகளின் ஆல் டைம் ஃபேவரைட்டான ‘மிஸ்டர் பீன்’ தொடரின் நாயகன் ரோவன் அட்கின்சன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ஜானி இங்கிலீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகெய்ன். இப்படத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ரகசிய உளவாளியாக ரோவன் அட்கின்சன் நடித்துள்ளார். ஜானி இங்கிலீஷ் சீரீஸில் மூன்றாவது படமாக வெளிவரவிருக்கும் இப்படத்தை டேவிட் கெர் இயக்கியுள்ளார். இங்கிலாந்தில் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகவிருக்கும் இப்படம் காமெடி கலந்த அதிரடித் திரைப்படமாக இருக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பால் ரோபோ!

கடினமான கோடிங் (coding) விஷயங்களை விளையாட்டாகவும் எளிமையாகவும் செய்துபார்க்க உதவும் கேட்ஜெட் ‘ரோபோபால்’. இது ஆக் ஷன், ஃபங்ஷன் மற்றும் லாஜிக் ஆகிய மூன்று தனிக் கட்டமைப்புகளின் உதவியுடன் புரோகிராமிங் செய்ய உதவுகிறது. இம்மூன்றையும் காந்த சக்தி உதவியுடன் இணைத்து நம் கட்டளையை ரோபோவுக்கு அனுப்பி, அதற்கு ஏற்றவாறு ரோபோவைத் தன் பணியைச் செய்ய வைக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட வெளிப்புற யூஎஸ்பி இணைப்புகள் இருப்பதால் ரோபோவைப் பல பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாசி அதை நேசி!

குழந்தைகளின் வாசிக்கும் திறமையை அதிகரிக்க ப்ளே ஸ்டோரில் இருக்கும் சிறந்த ஆப் எண்ட்லெஸ் ரீடர். பள்ளி, நூலகம் மற்றும் குழந்தைகளின் புத்தகங்களில் பயன்படும் எளிய வார்த்தைகளிலிருந்து பயிற்சியைத் தொடங்குகிறது. ஒவ்வொரு வார்த்தையின் உச்சரிப்பையும் தெளிவாக விளக்கிக் குழந்தைகளை வாசிப்பில் தேர்ந்தவர்களாக உருவாக்குகிறது எண்ட்லெஸ் ரீடர். உச்சரிப்புப் பயிற்சியை வார்த்தைகளோடு நிறுத்தாமல் வாக்கியங்களையும் தெளிவாக உச்சரிக்கக் கற்றுத் தருவதே இதன் தனிச் சிறப்பு.

மந்திரப் பயணம்!

தனிமையிலிருக்கும் ஒரு சிறுமி தன் படுக்கை அறையில் ஒரு ரெட் மார்க்கரை வைத்து மந்திரக் கதவு ஒன்றை வரைந்து ஆச்சர்யம், சாகசம், ஆபத்து என அனைத்தும் நிறைந்த ஓர் உலகுக்குள் நுழைகிறாள். அவள் படகு, பலூன், பறக்கும் கார்பெட் எனப் பலவற்றை தன் ரெட் மார்க்கரால் உருவாக்கி அந்த மாய உலகில் வரும் தடைகளைக் கடந்து செல்கிறாள். இறுதியில் வில்லன் அவளைக் கடத்திச் சென்று விட, அவள் நம் உலகத்தை எப்படி அடைந்தாள் என்பதே கதை. ஆரோன் பெக்கர் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

மூளைக்கு ஒரு பயிற்சி!

மூளைக்குப் பயிற்சி கொடுப்பதில் ப்ளே ஸ்டோரில் முன்னணியில் இருக்கும் கேம்தான் லூமோசிட்டி. மூளையின் செயல்பாட்டினைப் பல புதிர் விளையாட்டுகளின் மூலம் அதிகரிக்கிறது லூமோசிட்டி. நம் மூளையின் நினைவுத்திறன், கவன ஒருங்கிணைப்பு மற்றும் புதிர்களை விடுவிக்கும் திறன் உள்ளிட்ட பல விஷயங்களை அதிகரிக்க இது உதவுகிறது. தினசரி பல புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் அடிப்படையில் நம் கணக்கில் எடுத்துக்கொண்டு நாம் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைச் சரியாகச் சுட்டிக் காட்டுவதால் மூளைப் பயிற்சி சம்பந்தப்பட்ட கேம்களில் முதலிடத்தில் இருக்கிறது லூமோசிட்டி.

தெரியுமா?

*ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர் இந்திய மலைத்தொடர்களே.