Published:Updated:

ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!

ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!
பிரீமியம் ஸ்டோரி
ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!

சாதனை

ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!

சாதனை

Published:Updated:
ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!
பிரீமியம் ஸ்டோரி
ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!

கேண்டி கிரஷ்ஷும், டெம்பிள் ரன்னும் விளையாடிக் கொண்டிருக்கவேண்டிய 10 வயதில், அதேபோன்ற கேமிங் ஆப்களையும், இணையதளங்களையும் உருவாக்கி நம்மை அசரவைக்கிறார், சாஹஸ் சுதாகர். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின்படி, சாஹஸ்தான் இந்தியாவிலேயே இளம் ஆப் டெவலப்பர். இதற்காகவே ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் இளம் சி.இ.ஓ என்றும் கெத்து காட்டுகிறார். இத்தனைக்கும், சாஹஸ் தற்போது படிப்பது ஆறாம் வகுப்புதான். சாஹஸின் டெக்னிக்கல் சாகசங்களைத் தெரிந்துகொள்ள, ஒரு விடுமுறை நாளில் அவரைச் சந்தித்தோம். டேட்டா ஆன் செய்ததும், மொபைலில் வந்துவிழும் நோட்டிஃபிகேஷன்கள் போல மளமளவெனப் பேசத்தொடங்கினார் சாஹஸ்.

“ஒருநாள் என் தாத்தா நியூஸ்பேப்பர் படிச்சிட்டிருந்தார். அதில் 16 வயது மாணவி ஒருத்தர் வெப்சைட் ஒண்ணு உருவாக்கியிருக்கிறதா ஒரு செய்தி இருந்துச்சு. உடனே என்னைக் கூப்பிட்டு அதைப் படிச்சுக் காமிச்சார். அப்போதான் நாம் ஏன் நமக்குனு ஒரு வெப்சைட் ஆரம்பிக்கக்கூடாதுன்னு தோணுச்சு. நான் இன்டர்நெட்ல தேடுற கூகுள்ல இருந்து, பார்க்கிற, படிக்கிற எல்லாமே வெப்சைட்தான். கூகுள்லயே, எப்படி வெப்சைட் உருவாக்குறதுன்னு படிச்சேன். ரொம்பக் கஷ்டம்லாம் இல்ல; மூணு மணி நேரத்திலேயே எனக்கான வெப்சைட்டை உருவாக்க ஆரம்பிச்சிட்டேன்.

ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!

ஓவியம் வரைவது, கவிதை எழுதுவது என ஒவ்வொருத்தர்குள்ளும் ஒரு திறமை இருக்கும். ஆனால், அதை வெளிப்படுத்த சரியான இடம் இருக்காது. சரி, அவங்களுக்காக ஒரு வெப்சைட் உருவாக்குவோம்னு ‘Curio Thoughts’னு ஒரு வெப்சைட் ஆரம்பிச்சேன். அதில் யார் வேணா, அவங்களோட படைப்புகளை, சாதனைகளை எல்லாம் பதிவிடலாம். நான் 4-வது படிக்கும்போதே இதைப் பண்ணிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா என் வெப்சைட் பற்றி  எல்லாருக்கும் தெரியவந்தது. அதுக்கப்புறம் இரண்டு வருடங்கள்ல, என் வெப்சைட்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வந்துருக்காங்க.

ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!இதெல்லாம் நடந்துட்டு இருக்கும்போதுதான், ஆப்ஸ் மேலயும் ஆர்வம் வந்தது. சரி, அதையும் கத்துக்குவோம்னு திரும்பவும் இன்டர்நெட்லயே தேடிப்படிச்சேன். அப்படி இதுவரைக்கும் 13 ஆப்ஸ் பண்ணிருக்கேன். முதல்ல என்னோட ஆர்வத்துலதான் வெப்சைட், ஆப்ஸ் எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். நாமளே பண்ணிட்டு இருந்தா, அப்டேட் ஆக முடியாதுன்னு மத்தவங்களுக்கும் இதெல்லாம் பண்ணித்தரலாம்னு யோசிச்சேன். அதையெல்லாம் ஒரே கம்பெனி பேர்ல பண்ணா நல்லாருக்கும்னுதான், டிஜிட்டல் கியூரியோ மைண்ட் கம்பெனியைத் தொடங்கினேன். அப்போதான் நான் உருவாக்குற சைட்ல எல்லாம் ஒரே டிரேட் மார்க் பேரைப் பயன்படுத்த முடியும். இதற்காக முறைப்படி இதை அரசிடம் பதிவு பண்ணிருக்கேன். டிரேட் மார்க்கும் வாங்கியாச்சு. இப்போ, இந்தக் கம்பெனிக்கு நான்தான் சி.இ.ஓ” எனச் சிரிக்கிறார் சாஹஸ்.

ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!

“நான் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கிறது தெரிஞ்சு, ஒரு டிசைனர் ஸ்டூடியோல இருந்து வெப்சைட் பண்ணித்தர முடியுமான்னு கேட்டாங்க. அவங்கதான் என் கம்பெனியோட முதல் வாடிக்கையாளர். அதுக்கடுத்து, கேமிங் ஸ்டூடியோ, ஃபார்மிங் கம்பெனின்னு இன்னும் ரெண்டு கிளையன்ட் கிடைச்சாங்க. யாருமே சின்னப்பையன், சுமாரா பண்றான்னு எல்லாம் சொல்லல; மத்தவங்க எல்லாரும் எப்படிப் பண்றாங்களோ, அதேமாதிரி நானும் தரமா பண்றேன்னுதான் சொன்னாங்க. நானும் என்னோட முதல் வெப்சைட் மாதிரி இல்லாம, நிறைய கத்துக்கிட்டு ஒவ்வொரு வெப்சைட்லயும் டெக்னிக்கலா நிறைய அப்டேட் பண்ணிகிட்டே வர்றேன்.  இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தினம்தினம் அப்டேட்டா இருக்கணும். இல்லைனா கொஞ்சம் கொஞ்சமா பின்னாடி போயிட்டே இருப்போம். அதனால எப்பவும் வெப்சைட், ஆப்ஸ் தொடர்பான விஷயங்களை மிஸ் பண்ணாம படிச்சுட்டே இருக்கேன். இப்போதைக்கு என்னோட குறிக்கோள், இந்த கம்பெனி மூலமா நிறைய சம்பாதிக்கணும்றது கிடையாது. என்னோட அறிவை இதன்மூலம் கொஞ்சம் கொஞ்சமா வளர்த்துக்கணும்றதுதான். அதனாலதான் இதுவரைக்கும் வெப்சைட் பண்ணி குடுக்குறதுக்காக தனியா பணம்கூட வாங்குனதில்ல. அந்த சைட் டொமைன் ரெஜிஸ்ட்டர் பண்ண, தொடர்ந்து பராமரிக்க எவ்ளோ செலவாகுமோ அதை மட்டும்தான் வாங்குறேன். இப்போதைக்கு என்னோட டார்கெட் எல்லாம் பத்து வாடிக்கையாளரையாவது பிடிக்கணும்ங்கிறதுதான். ஏற்கெனவே 4 பேரை பிடிச்சுட்டேன். அடுத்த 6 பேருக்காக வெயிட்டிங்.

ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!

இந்த ஆப்ஸ், வெப்சைட் எல்லாம்தான் என்னோட முழு பொழுதுபோக்கே. அதனால படிப்புக்கு போக இதுக்காக தனியா எல்லாம் நேரம் ஒதுக்குறது இல்ல. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதே வேலைதான்.” எனச் சொல்லும் சாஹஸ்க்கு விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்ப வேண்டும் என்பதுதான் கனவாம்.

ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்!

“இப்போ, ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குப் பெரிய பெரிய செயற்கைக்கோள்கள் எல்லாம் அனுப்புறாங்க. அதெல்லாம் நீண்டநாள் விண்வெளியிலேயே இருந்து நமக்கான டேட்டாவை சேகரிக்கும். ஆனால், எனக்கு ரொம்பச் சின்னதா ஒரு செயற்கைகோள் செஞ்சு அனுப்பணும்னு ஆசை. எனக்குத் தெரிஞ்சு இதுக்கு 5 லட்சம்தான் செலவாகும். இந்த செயற்கைக்கோள் நாம எவ்ளோ நாள் சொல்றோமோ, அந்தளவுக்கு மட்டும் அங்க இருந்துட்டு திரும்ப பூமிக்கே வந்துடும். ரொம்பக் குறைவான நாள்ல, அதிகமான டேட்டாவை சேகரிச்சிட முடியும். இதை எப்படி உருவாக்குறதுன்னுதான் யோசிச்சுட்டு இருக்கேன். கூகுள், அமேசான் மாதிரி பெரிய கம்பெனில எல்லாம் வேலை கிந்டைச்சா போவியான்னு என்ன கேப்பாங்க. ஆனால், அதிலெல்லாம் எனக்கு இஷ்டமே இல்ல. நாம எதுக்கு அவங்க சொல்ற வேலையெல்லாம் செய்யணும்? அதான் நானே ஒரு கம்பெனி வச்சுருக்கேன்ல? இதுக்காகத்தான் நான் எப்பவும் வேலை செய்யணும்னு நினைக்கிறேன்” எனச் சொன்ன சாஹஸிடம் ஆல் தி பெஸ்ட் சொல்லி விடைபெற்றோம்.

- ஞா.சுதாகர்

 படங்கள்: ரவிகுமார்