Published:Updated:

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

Published:Updated:
டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டெக் பிட்ஸ்
டெக் பிட்ஸ்

க்ளவுஸ் ரிமோட் கன்ட்ரோல்!

ஜாய்ஸ்டிக்கின் மூலம் பறக்கும் ட்ரோன்களை இயக்கும் பழைய முறைக்கு விடைகொடுக்க வந்திருக்கிறது கே.ஆர் இன்னோவேட்டிவ் ஆரா ட்ரோன் வித் க்ளவ்ஸ் கன்ட்ரோலர். நம் கையில் அணிந்துள்ள க்ளவ்ஸின் மூலமே ட்ரோன்களை இயக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். நம் கையின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக உணரும் வகையில், அதிநவீன சென்சார்களை க்ளவ்ஸில் பொருத்தியிருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றும் பேட்டரிகள், தானாகவே மேலெழும்பும் மற்றும் தரையிறங்கும் வசதி எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது ட்ரோன் வித் க்ளோவ் கன்ட்ரோலர்.

டெக் பிட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாத்தாவின் பயணம்! 

ப்பானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஒருவரது பேரன், இரு நாடுகளுக்கும் இடையே பசிபிக் பெருங்கடலில் தாத்தா மேற்கொண்ட பயணங்களை திரும்பிப் பார்ப்பதே கதை. இரு நாடுகளிலும் இருக்கும் மலைகள், காடுகள், புல்வெளிகள் மற்றும் வானுயர்ந்த கட்டடங்கள் ஆகியவற்றின் மீது தாத்தா வைத்திருந்த தீராக் காதலை காட்சிப்படுத்தியபடி கதை நகர்கிறது. சொந்த ஊரை விட்டு இடம்பெயரும் மக்களின் உணர்வுகளை வார்த்தைகள் மற்றும் படங்கள் வாயிலாக கடத்துவது இந்நூலின் சிறப்பு. இரு நாடுகளின் கலாசாரத்தை உணரும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்ட இந்நூலை ஆலன் சே எழுதியுள்ளார்.

டெக் பிட்ஸ்

இயற்பியல் புதிர்!

யற்பியலின் அடிப்படையைக் குழந்தைகளின் மனதுக்குக் கொண்டு சேர்க்க உதவுவதே ஷாட்டர் பிரெய்ன். புள்ளியையோ கோடுகளையோ அல்லது உங்களுக்குத் தேவையான உருவங்களையோ வரைந்து,  இயற்பியல் அடிப்படையிலான புதிர்களை விடுவிப்பதே இந்த கேமின் இலக்கு. ஒரு புதிரை விடுவிக்கப் பல வழிகள் இருந்த போதிலும், மிகச் சரியான வழியைக் கண்டுபிடித்து புதிரை விடுவிக்க வேண்டும். குறைவான நேரத்தில் ஒரு புதிரை விடுவிப்பதன்மூலம் மட்டுமே அதிக ஸ்டார்களைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற முடியும்.

டெக் பிட்ஸ்

லாஜிக் மாஸ்டர்!

குழந்தைகளின் நினைவுத்திறன், கவன ஒருங்கிணைப்பு மற்றும் புதிர்களை விடுவிக்கும் திறனை அதிகரிக்க, ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சிறந்த ஆப் லாஜிக் மாஸ்டர். உயர் தரத்திலான கிராஃபிக்ஸ்களோடு இணைந்து 200-க்கும் மேற்பட்ட புதிர்களையும் உள்ளடக்கியிருக்கிறது லாஜிக் மாஸ்டர். குறைவான நேரத்தில் அதிகமான புதிர்களை விடுவிப்பதே இந்த ஆப்பின் இலக்கு. அதிக மதிப்பெண்களை எடுப்பதன்மூலம் மட்டுமே அடுத்த லெவலுக்குள் நுழைய அனுமதிக்கிறது இந்த ஆப். புதிர்களைத் தொடர்ச்சியாக விடுவிப்பதன்மூலம், குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்க இந்த ஆப் உதவுகிறது.

டெக் பிட்ஸ்

தி நியூ மியூட்டன்ட்ஸ்!

மார்வெல் காமிக்ஸின் அடுத்த படைப்பாகக் களமிறங்க உள்ளது `தி நியூ மியூட்டன்ட்ஸ்.’ `எக்ஸ் மேன்’ சீரிஸில் 13-படமாக வெளியாக உள்ள இப்படத்தை ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரகசிய இடத்தில் தங்கள் சூப்பர் பவரை உணர்ந்த பின்னர், தங்கள் உயிரைக் காப்பாற்ற போராடும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதையே தி நியூ மியூட்டன்ட்ஸ். ஜோஸ் பூனே தயாரிக்கும் இப்படத்தை அடுத்த வருடம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

- ச.முத்துகிருஷ்ணன்

டெக் பிட்ஸ்

தெரியுமா?

கீழடி அகழாய்வு மையம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism