சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஒரு சம்பவம். குழந்தையைக் கடத்த வந்த கும்பல் எனச் சந்தேகப்பட்டு சாமி கும்பிட வந்த ஒரு குடும்பத்தை அடித்தே கொன்றுவிட்டனர் பொது மக்கள். அடித்தவர்கள் யாரும் வன்முறையைத் தொழிலாகக் கொண்டவர்களோ சமூக விரோதிகளோ கிடையாது. நம்ம ஊர்க் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டுமென விரும்பியவர்கள். அந்தக் கொலையில் அவர்களுக்கு மட்டுமல்ல; உங்களுக்கும்கூடத் தொடர்பிருக்கலாம்.

ஆம். வாட்ஸ் அப்பில் வந்த ஒரு ஃபார்வேர்டு மெசேஜ்தான் அந்த மக்களை சந்தேகப்பட்டுக் கொலை செய்ய வைத்தது. எப்போதோ, யாரோ, எந்த ஊரிலோ நடந்த ஒரு விஷயத்துக்காக “கொஞ்சம் பத்திரமாக இருங்க” என ஒரு மெசேஜை அனுப்பியிருக்கலாம். அது எல்லைகள் கடந்து, மொழிமாற்றமாகி இந்தியா முழுவதும் பரவியது. விளைவு, திருவண்ணாமலையில் நடந்ததுபோன்ற சம்பவங்கள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே நடந்தன.

``அறுவை சிகிச்சைக்காக ரத்தம் தேவை” என ஒரு மெசேஜ் வருகிறது. நாம் என்ன செய்கிறோம்? ரத்தம் கொடுக்கிறோமோ இல்லையோ சில நூறு பேருக்கு அதை ஃபார்வேர்டு செய்கிறோம். ரத்தம் எப்போது தேவை, அந்த ஃபார்வேர்டில் தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறதா என எப்போதாவது பார்த்திருக்கி றோமா, அல்லது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணைத் தொடர்பு கொண்டு இன்னும் ரத்தம் தேவையா எனக் கேட்டிருக்கிறோமா? தேதியே இல்லாமல் சுற்றும் ஒரு ஃபார்வேர்டை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குச் சுற்றவைக்கப்போகிறோம்?

சென்ற மாதம் இலங்கையில் குண்டு வெடித்தது. உடனே ஒரு ஃபார்வேர்டு. “சென்னை மால்களில் குண்டு வைக்கப் போகிறார்கள் தீவிரவாதிகள். உங்கள் வீட்டு நபர்களை எந்த மாலுக்கும் அனுப்ப வேண்டாம் - சென்னைக் காவல்துறை.” உடனே, அதைச் சென்னை யிலிருக்கும் எல்லோருக்கும் ஃபார்வேர்டு செய்துவிட்டால் நம் கடமை முடிந்ததா? சென்னைக் காவல்துறை வாட்ஸ் அப் மூலமாகவா அறிவிப்புகள் தரும்?

காவல்துறை மட்டுமல்ல... அரசுத்துறைகள் சொன்னதாக ஆயிரக்கணக்கான ஃபார்வேர்டுகள். அரசுத் துறைகளுக்கு இணையதளங்கள் உண்டு. பொதுமக்களை எச்சரிக்க விரும்பினால் அவர்கள் இணையம் மூலமும் தொலைக்காட்சி மூலமும் நாளிதழ்கள் மூலமும் முறையான அறிவிப்பு செய்வார்கள்.

``21-28 வயதுக்குட் பட்டவர்கள் அதிகம் ஃபார்வேர்டு செய்வதில்லை” என்கிறது சமீபத்திய சர்வே ஒன்று. காரணம், அவர்களுக்கு எது உண்மை, எது பொய் எனக் கண்டறியத் தெரிகிறது என்கிறது அந்த சர்வே. சரி, எப்படி ஸ்மார்ட்டாக ஃபார்வேர்டு செய்வது?

ஃபார்வேர்டு செய்யும்முன் எவற்றையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும்?

அந்த ஃபார்வேர்டுக்குக் காலக்கெடு உண்டா? உண்டென்றால், அதில் தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறதா? உ.தா: ரத்தம் தேவை; புயல் வருகிறது...

அந்த ஃபார்வேர்டுக்கு Source குறிப்பிடப் பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அது தொலைபேசி எண்ணோ, இணையதள முகவரியோ எதுவாகவும் இருக்கலாம். இருந்தால் அதைச் சோதித்துவிட்டுப் பிறகு ஃபார்வேர்டு செய்யலாம். உ.தா: காவல்துறை அறிவிப்பு, மத்திய அமைச்சரவை அறிவிப்பு.

மிக முக்கியமான செய்தி என்றால் ஊடகங்களில் அச்செய்தி தவறாமல் இடம்பெறும். நீங்கள் ஃபார்வேர்டு செய்யும் செய்திக்குத் தொடர்பானவை தொலைக்காட்சியிலோ ஊடங்கங்களிலோ வந்திருக் கிறதா என்று சரிபார்க்கவும்.

உங்களுக்குச் சந்தேகம் வந்தால் உங்களுக்குத் தெரிந்தவர்களில் யாரிடம் கேட்டால் அதுபற்றி விளக்கம் கிடைக்கும் என யோசிக்கலாம். பெங்களூரில் நிலநடுக்கம் என்றால், அங்கு வாழும் நம் உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை அழைத்துக் கேட்கலாம்.

வேலைவாய்ப்பு பற்றிய ஃபார்வேர்டு வந்தால் அதில் என்ன மின்னஞ்சல் முகவரி இருக்கிறதெனப் பாருங்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி reliance@gmail.com என்றிருக்காது. எல்லா நிறுவனங்களுக்கும் அவர்கள் டொமைனிலேயே இருக்கும். உ.தா: careers@reliance.com

பொதுவான டிப்ஸ், அறிவியல் போன்ற செய்திகளை ஃபார்வேர்டு செய்யும் முன் அதைப் பற்றி கூகுளில் தேடிப் படியுங்கள். தமிழிலே கூகுளில் தேடலாம்.

கடைசி, ஆனால் முக்கியமான விஷயம். நீங்கள் அனுப்பும் ஃபார்வேர்டில் சின்ன சந்தேகம் என்றாலும் அதை அனுப்பாதீர். ஏனெனில், ஏன் ஃபார்வேர்டே செய்யவி ல்லை என யாரும் உங்களைக் கேட்கப்போவதில்லை. ஆனால், ஒரு தவறான செய்தியை ஃபார்வேர்டு செய்து பரப்புவதன் மூலம் ஒரு பொய்யைப் பரப்புவதில், ஒரு அசம்பாவிதம் நடப்பதில், ஒருவருக்கு மன உளைச்சல் ஏற்படுவதில் உங்களுக்குப் பங்கு இருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் நண்பர்களைக் காட்டுங்கள். உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்பதெல்லாம் அந்தக் காலம். நீங்கள் அனுப்பும் ஃபார்வேர்டுகள்தான் உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கும். உங்கள் அடையாளத்தை ஸ்மார்ட்டாக உருவாக்குங்கள்.

- ஸ்மார்ட் ஆவோம்...

ஓவியம்: ரமணன்