Published:Updated:

ஸ்மார்ட்போன் உங்கள் குழந்தையின் தூக்கத்தைப் பாதிக்குமா? மருத்துவ விளக்கம் #ChildCare

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்மார்ட்போன் உங்கள் குழந்தையின் தூக்கத்தைப் பாதிக்குமா? மருத்துவ விளக்கம் #ChildCare
ஸ்மார்ட்போன் உங்கள் குழந்தையின் தூக்கத்தைப் பாதிக்குமா? மருத்துவ விளக்கம் #ChildCare

ஸ்மார்ட்போன் உங்கள் குழந்தையின் தூக்கத்தைப் பாதிக்குமா? மருத்துவ விளக்கம் #ChildCare

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால் கையில் கொடுப்பது தொடங்கி, தூங்க வைப்பது வரை வீட்டில் உள்ளவர்களின் ஓர் உறுப்பு போல மொபைலை ஆகிவிட்டோம். பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகத் தொடங்கியுள்ளார்கள். இது சரியா, தவறா என்ற வாதத்தைவிட இதன்மூலம் நாம் இழப்பது உடற்பயிற்சியை, விளையாட்டை... அதனினும் முக்கியமான தூக்கத்தை. மொபைல் தொடர்ந்து பார்ப்பதால் பலர் தூக்கமின்மையால் அவதியுறுகிறார்கள் என்கிறது பல வெளிநாட்டு சர்வேக்கள்.

ஸ்மார்ட்போன் உங்கள் குழந்தையின் தூக்கத்தைப் பாதிக்குமா? மருத்துவ விளக்கம் #ChildCare

ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி மற்றும் லேப்டாப் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் வெளிச்சம் மற்றும் கதிர்வீச்சின் காரணமாகத் தூக்கமின்மை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு ஞாபக சக்தி மற்றும் கவனித்தல் திறன் குறைபாடு ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளதாகப் பல ஆய்வறிஞர்களும் கூறுகின்றனர்.  

இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் செல்வன் அவர்களிடம் பேசினோம். ``பல தொழில்நுட்ப மேதைகள் தங்கள் குழந்தைகளை மின்னணு சாதனங்கள் எந்த வித சீர்கேடும் செய்து விடாத வகையில்தான் பழக்கப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் காலை முதல் சத்தமாகத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். வீட்டிலிருக்கும் சிறுவர் முதல் முதியவர் வரை ஒவ்வொருவருக்கும் தனித் தனி போன்கள், பள்ளிக் குழந்தைக்கு டேப்லெட் எனக் குழந்தைகளையும் தொழில்நுட்ப உலகிற்குப் பழக்கி விடுகின்றனர்.

பள்ளிகளும் ஸ்மார்ட் வகுப்புகளில் பாடம் நடத்துவது, வீட்டுப் பாடம் முதல் தேர்வுகள் வரை அனைத்தையும் இணையதளம் வழியே பயிலும் வகையில் கல்வி அமைப்பினை மாற்றி அமைத்துவிட்டனர். இந்த முறையில் சில நன்மைகள் இருந்தாலும்... குழந்தைகள் ஸ்மார்ட் சாதனங்களின் பிணைக்கைதிகளாக மாறிவிடும் அபாயம் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. 

ஸ்மார்ட்போன் உங்கள் குழந்தையின் தூக்கத்தைப் பாதிக்குமா? மருத்துவ விளக்கம் #ChildCare

ஸ்மார்ட் போன், டேப்லெட் போன்ற கருவிகளிலிருந்து பிரதிபலிக்கும் அதிகளவிலான நீலநிற கதிர் வீச்சு நம் உடலிலிருந்து மெலடோனின் (Melatonin) என்னும் இயக்குநீர் (Hormone) சுரத்தலைத் தடுக்கிறது. மெலடோனின்தான் நமக்குத் தூக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன். வயதிற்கேற்ப தேவைப்படும் நிம்மதியான உறக்கமே நல்ல உடல்நிலையைத் தரும். இந்த மெலடோனின் குறைபாட்டினால் தூக்கத்தின் அளவு குறைவாகச் சுரக்கும். விளைவு... சுறுசுறுப்பு இல்லாமை, கவனச் சிதறல், உடல் பருமன், கற்றலில் ஞாபகக் குறைவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளன.

இவற்றைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட  நேரம் மட்டுமே வீட்டினுள் செல்போன், டிவி, மொபைல் போன்ற சாதனங்களை உபயோகிக்க வேண்டும் என்கிற கடுமையான ஊரடங்கு உத்தரவைப் பிறப்பியுங்கள். அந்த உத்தரவை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். உத்தரவை மட்டும் போட்டுவிட்டு பிள்ளைகள் படுத்ததும் நீங்கள் மொபைல் பார்ப்பது சரியில்லை. இதுவரை நீங்கள் ஸ்மார்ட் ஸ்க்ரீனுக்கு பிள்ளைகளைப் பழக்கப்படுத்தியிருந்தாலும் பரவாயில்லை. இனி அனுமதிக்காதீர்கள். அந்த நேரத்தை உரையாடுவதிலும் ஒன்றாக வெளியில் செல்வதிலும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதிலும் செலவழியுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். உடல் உழைப்பே மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கும். அதே போல் ஸ்மார்ட் போன், டிவி பார்க்கும் நேரங்களில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை உடனிருந்து கவனியுங்கள்."

இவ்வாறு செய்தல் குழந்தைகள் தொழில்நுட்பத்தின் பிடியிலிருந்து விலகி மனிதம், உணர்வுகள், போன்ற சமுதாய வாழ்க்கை நெறிகளை நேசிக்கும் வழிகளைப் பின்பற்றிச் செல்ல உதவுமென்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவிபுரியும் என்றும் மருத்துவர் செல்வன் கூறுகிறார்.

- மா.யுவராணி

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு