Published:Updated:

கொரோனா போர்... நம்பிக்கையளிக்கும் தொழில்நுட்பங்கள்!

தொழில்நுட்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்நுட்பங்கள்

வாய்ப்புள்ள அனைவருமே இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கொரோனா யுத்ததில் தங்கள் பங்களிப்பை உறுதிசெய்துகொள்ளலாம்.

உலகமே மிகப்பெரிய போரை எதிர்கொண்டுவருகிறது. கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். அதேசமயம் வைரஸ் பரவல் உலகுக்கு புதிதல்ல. 1918-ம் ஆண்டு அமெரிக்க - ஐரோப்பிய கண்டங்களில் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தியது.

பிறகு 1957, 1968, 2009-ம் ஆண்டுகளில் வைரஸ்கள் பரவின. 1918 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதிலும் மக்களுக்கான நம்பிக்கையை விதைப்பதிலும் அறிவியல் தொழில்நுட்பம் அளப்பரிய பங்குவகிக்கிறது. வைரஸுக்கு எதிரான போரில் நமக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தரும் தொழில்நுட்பங்கள் அவை.

கொரோனாவைத் தடுக்கும் குறிப்பிட்ட மருந்து மட்டும்தான் தற்போது இல்லை. ஆனால், வைரஸ் எப்படிப் பரவுகிறது, நம் உடலில் எந்தப் பாதையில் பயணிக்கிறது, நம்மை நாம் எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என அனைத்துவிதமான தகவல்களையும் இதன்மூலம் நம்மால் கண்டறிய முடிந்திருக்கிறது. வாய்ப்புள்ள அனைவருமே இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கொரோனா யுத்ததில் தங்கள் பங்களிப்பை உறுதிசெய்துகொள்ளலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அசாத்திய பாய்ச்சல் ஸ்மார்ட்போன்கள். விரல் நுனியில் உலகை வலம் வரலாம். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்காக செயலிகள் நிறைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிமிடத்துக்கு ஒருமுறை கொரோனா தகவல்கள் அப்டேட்ஸ், வீட்டைவிட்டு வெளியேறினால் எச்சரிக்கை, கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் எச்சரிக்கை... என கொரோனா பரவலைத் தடுப்பதில் ஸ்மார்ட்போன்களின் பங்கு அதிகம்.

ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன்கள்

தகவல் தொடர்பும் மிக முக்கியமான ஒன்று. ‘குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது’ என வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் நொடியில் பலகோடி மக்களைச் சென்றடைகின்றன.

கொரோனா தவிர்த்து மற்ற உடல்நலம் சார்ந்த பிரச்னை களுக்கு மருத்துவர்களை அணுக டெலி-மெடிசன் செயலிகள், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கான சேவைகளை வழங்கும் மென்பொருள்கள், ஹேங்-அவுட் மீட்டிங்ஸ், மொபைல் பணப்பரிவர்த்தனை எனப் பலவிதங்களிலும் ஸ்மார்ட்போன்களும் லேப்டாப்களும் கைகொடுக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரோபோக்கள்

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளி களுக்கு உணவு மற்றும் மருந்து கொடுப்பதில் ரோபோக்களைப் பயன்படுத்தியது சீனா. அதை தொடர்ந்து மற்ற நாடுகளும் அதே நடைமுறையைப் பின்பற்ற முடியுமா எனச் சோதனை செய்தன.

இந்தியாவிலும் ஜெய்ப்பூர் மற்றும் சென்னையில் ரோபோ மூலம் உணவு வழங்கும் முறை கொண்டுவரப்பட்டது. இது முழுமையாக அனைத்து இடங்களிலும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

எனினும், நிலைமை தீவிரமடைந்தால் இந்தத் தொழில்நுட்பம் நம் உயிர்க்காக்கும் எந்திரன்கள்.

கொரோனா போர்... நம்பிக்கையளிக்கும் தொழில்நுட்பங்கள்!

ட்ரோன்கள்

கடந்த வார இணையத்தின் வைரல், ட்ரோன்கள் தான். ஒரே இடத்தில் கூட்டாக விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், ட்ரோனைப் பார்த் ததும் தலைதெறிக்க ஓடிய காட்சி, ட்ரோன்களை வைத்து மக்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம், சட்டத்தை மீறுபவர்களை எப்படி அடையாளம் காணலாம் என்பதைக் காட்டியது.

தமிழக தலைநகர் சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. சண்டிகர் மற்றும் வாரணாசியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக இரண்டு ட்ரோன்கள் தமிழகத்திலிருந்து சென்றுள்ளன. மற்ற நாடுகளில், வீட்டில் இருப்பவர்களின் உடல் வெப்பத்தை அளவிட, மருந்துப் பொருள்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டுசெல்ல எனப் பலவிதமான செயல்களுக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.உடல் வெப்பத்தை அளவிட, மருந்துப் பொருள்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டுசெல்ல எனப் பலவிதமான செயல்களுக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனா போர்... நம்பிக்கையளிக்கும் தொழில்நுட்பங்கள்!

செயற்கை நுண்ணறிவு

வைரஸின் மரபணுவைக் கண்டறிவதில் இருந்து, வைரஸ் தாக்கப்பட்ட நோயாளியை விரைவில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பதற்கான வழியைக் கண்டறிவது வரை அனைத்திலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர். சார்ஸ் நோய்த்தொற்று பரவியபோது, அந்த வைரஸின் மரபணு எப்படி இருந்தது என்பதைக் கண்டறிய பல மாதங்கள் ஆகின. ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவின் உதவியால் குறுகிய காலத்திலேயே கொரோனாவின் மரபணு எப்படி இருக்கும் எனக் கண்டறிந்தனர் சீன ஆராய்ச்சியாளர்கள். ஆஸ்திரேலிய ஆராய்ச்சி யாளர்களோ, அதேபோன்ற வைரஸை ஆய்வகத்தி லேயே மறு உருவாக்கம் செய்தனர். இந்த மரபணுவைக் கண்டறிவது, தடுப்பு மருந்தை விரைந்து கண்டறிவதற்கு உதவியாக இருக்கும்.

தொழில்நுட்பங்கள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எதையும் எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் நம் மனங்களில் விதைக்கின்றன. ஒரு கதவு அடைபடும்போது, தொழில்நுட்பங்கள் மாற்றுவழியைக் காட்டுகின்றன. அந்த நம்பிக்கை தான் இப்போதைய தேவையும்கூட!