பிரபல இந்திய ட்ரக் தயாரிப்பு நிறுவனமாக ஐஷர், புதிய கூட்டணி ஒன்றை அமைத்திருக்கிறது. ஆஃப் ரோடிங் வாகனங்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற, அமெரிக்காவைச் சேர்ந்த போலாரிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஐஷர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொழிற் சாலையை அமைத்துள்ள இந்தக் கூட்டணி, மல்ட்டி பர்ப்பஸ் வாகனங்களை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் உருவாக்கக் களமிறங்கி இருக்கின்றன.

ஐஷர் - போலாரிஸ் கூட்டு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக அறிமுகமாகிறது ‘மல்ட்டிக்ஸ்’(Multix) 4 வீல் ட்ரைவ் வாகனம். இந்தியாவின் முதல் ‘தனிநபர் யுட்டிலிட்டி வாகனம்’ எனச் சொல்லப்படும் இது, விவசாயிகளுக்கும் சுயதொழில் செய்வோருக்கும், சிறு தொழிலகங்கள் நடத்துவோருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மல்ட்டிக்ஸ் வாகனம் இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் ஒரு மைல் கல்லாக இருக்கும்’ என்கிறது ஐஷர்.

சுமார் 2.5 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை (உத்தேசமாக) விலையில், இரண்டு வேரியன்ட்களாக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது மல்ட்டிக்ஸ். பேஸிக் வேரியன்ட்டில் கதவுகள் இருக்காது. டாப் வேரியன்டில் மட்டுமே கதவுகள் இருக்கும்.

ட்யூப்லர் ஃப்ரேம் கட்டமைப்பைக் கொண்டி ருக்கும் மல்ட்டிக்ஸ் வாகனத்தில், ரோல்-ஓவர் ப்ரொடெக்ஷன் சிஸ்டத்துடன் ப்ரோ ரைடு இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் சிஸ்டம் உள்ளது. ‘Flexituff’ பாடியைக்கொண்டிருக்கும் மல்ட்டிக்ஸ்-ன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 225 மிமீ. ஐந்து பேர் வரை உட்காரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில், பொருட்களை வைத்துக்கொள்ள 418 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடத்தை, தேவைப்பட்டால் பின்பக்க சீட்டுகளை மடக்கி, 1,918 லிட்டர் வரை உயர்த்திக்கொள்ளலாம்.

இதன் 511 சிசி டீசல் இன்ஜின், 9.78 bhp சக்தியையும், 2.76 kgm டார்க்கையும் அளிக்கும். லிட்டருக்கு 28.45 கி.மீ வரை மைலேஜை அளிக்கும் என்கிறது ஐஷர் - போலாரிஸ்.
மல்ட்டிக்ஸ்-ன் முக்கிய சிறப்பம்சம் என்றால், இதில் இருக்கும் X-PORT தொழில்நுட்பம் மூலம் 3kW வரை மின்சக்தியைப் பெறலாம். இதில், வீடுகளுக்கு மின்சாரத்தை அளிக்கவும், பம்ப்செட், ட்ரில்லிங் மெஷின் போன்றவற்றையும் இயக்கவும் முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் மல்ட்டிக்ஸ் வாகனம் விற்பனைக்கு வரும்.