இந்தியச் சந்தையில் ஜிக்ஸரைக் களம் இறக்கிய சந்தோஷத்தில், ரேஸிங்கிலும் புகுந்துவிட்டது சுஸூகி. இந்தியாவில், முதன்முறையாக ரேஸ் கனவு, கோவையில் நனவாகியது. கடந்த ஜூன் 6, 7 தேதிகளில் இந்தியாவில் தேசிய அளவிலான முதல் சுஸூகி ஜிக்ஸர் கப்-2015 (Suzuki gixxer cup 2015)- வெற்றிகரமாக நடந்தது. ஜிக்ஸர் பைக்குகளுக்காக ஜிக்ஸர் கோப்பையுடன், மற்ற பைக்குகளுக்கும் வாய்ப்பு அளித்து, இரண்டு பிரிவாகப் போட்டிகளை நடத்தியது சுஸூகி. இது பற்றி சுஸூகி நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு விரிவாகக் கூறினார்...

“சர்வதேச அளவில் சுஸூகி நிறுவனம் ரேஸ் மற்றும் ஸ்போர்ட்ஸுக்காகவே பிரபலமானது. இந்திய அளவில் சுஸூகி நிறுவனம் ரேஸிங்கில் பங்கேற்பது இதுதான் முதல் முறை. இந்தியாவில் ரேஸிங் கலாசாரத்தைப் பிரபலப்படுத்த, இந்தப் போட்டிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். ரேஸில் ஆர்வம் இருப்பவர்கள் இங்கு நிறைய இருந்தாலும் ‘திறன்மிக்க பைக் வேண்டுமே. நிறைய செலவாகுமே, அனுபவமிக்க மெக்கானிக் வேண்டுமே!’ என்று அவர்களுக்கு நிறையத் தயக்கங்கள் இருக்கும். அதை முதலில் நீக்க விரும்பினோம். இதற்காக நாங்களே போட்டியாளர்களுக்கு பைக், எரிபொருள், மெக்கானிக் என அனைத்தையும் வழங்கி, தகுதியான வீரர்களைக் கண்டறிந்து களம் இறக்கியுள்ளோம். நுழைவுக் கட்டணம் மட்டும் அவர்கள் செலுத்தினால் போதும்.

இதனால், முதல் தலைமுறை வீரர்கள் ஊக்கம் அடைவார்கள். தகுதியான வீரர்களை மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மூலம் தேர்வுசெய்து, போட்டியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்து தருகிறோம்.

முதல் கட்டமாக கோவையில் நடந்த போட்டிகளை அடுத்து, ஜூலை 11, 12 தேதிகளில் சென்னையில் இரண்டாவது கட்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இறுதிக்கட்டப் போட்டிகள் டெல்லியில் நடக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு ஐந்து ரேஸ்கள் என இளம் வீரர்களின் திறமைகளுக்குத் தீனிபோட இருக்கிறோம். போட்டிகளை இரண்டு இரண்டு பிரிவாக நடத்தப்படும். முதலாவது, இதற்கு முன்பு ரேஸில் கலந்துகொள்ளாத வீரர்கள் (no vice), இரண்டாவது, ஏற்கெனவே ரேஸில் பங்கேற்று தோல்வியடைந்த வீரர்கள் அல்லது பங்கேற்ற வீரர்கள் (open class).

இவ்வளவு காலம் இந்தியாவில் சுஸூகியில் ரேஸுக்கு ஏற்ற பைக் இல்லாததால் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது ஜிக்ஸர் ஸ்போர்ட்ஸ் பைக்காக ஜொலிப்பதால், ஜிக்ஸர் SF பைக்கையே அடிப்படையாகக்கொண்டு சில மாறுதல்கள் மட்டும் ரேஸுக்காகப் பிரத்யேகமாக செய்துள்ளோம்” என்கிறார் சுரேஷ் பாபு.

மாறியது என்ன?

ஹேண்டில்பார் வடிவமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார்கள். ரேஸில் குறைந்த நேரத்தில் அதிகம் வளையக்கூடிய திறன் தேவை என்பதால், இந்த மாற்றம். சைலன்ஸர் மற்றும் ஏர்

ஃபில்டர் இரண்டும் ரேஸ் பைக்குக்காக மாற்றப்பட்டுள்ளது. பைக்கில் உள்ள டயர், ஸ்டிக்கி டயர் (sticky tyre) எனும் வகையைச் சேர்ந்தது. கையில் அழுத்திப் பிடித்தால்கூட ஒட்டும் இந்த வகை டயர், க்ரிப்புக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. பில்லியன் பகுதி காற்றுத் தடையை எதிர்கொண்டு செல்வதற்கு ஏற்ப கூர்மையாக அமைக்கப்பட்டுள்ளது. 155 சிசி இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தேசிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பல்வேறு மாநில வீரர்கள் கலந்துகொண்டனர்.