அது நிலக்கரிச் சுரங்கமோ அல்லது இரும்புச் சுரங்கமோ, பாதை அற்ற சதுப்பு நிலங்களோ, பாறைப் பிரதேசங்களோ... முதுகு நிறைய சுமையை ஏற்றியபடி, செங்குத்தாக ஏறி வளைந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்லும் டிப்பர் லாரிகளின் டிரைவர்களைக் கண்டால், ‘ஹீரோ’ போலத் தோன்றும். சந்தேகமே இல்லை; அவர்கள் ஹீரோக்கள்தான். ஆனால், கொஞ்சம் பயிற்சி இருந்தால், எந்த டிரைவரும் அந்த ஹீரோயிஸத்தைச் செய்ய முடியும் என்கிற அளவுக்கு, சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் டிப்பர் லாரிகளை வடிவமைத்திருக்கிறது பாரத் பென்ஸ்.

இதுபோன்ற வேலைகளைச் செய்ய வால்வோ, பென்ஸ் அல்லது ஸ்கானியா போன்ற ஐரோப்பிய டிப்பர் வாகனங்கள் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. இனி, நமது நாட்டில் அதுவும் நம் சென்னையில் தயாராகும் 3143 எனப் குறிப்பிடப்படும் பாரத் பென்ஸின் ‘தண்டர் போல்ட்’ டிப்பர் லாரிகள், நம் நாட்டுச் சுரங்கங்களில் சுற்றிச் சுழல இருக்கின்றன.

தண்டர்போல்ட் டிப்பரில் ஏறி உட்கார்ந்தபோது, பட்டத்து யானையின் மீது ஏறி அமர்ந்த கம்பீரம். 12 சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரமாண்டமான வாகனம்; பாதுகாப்புக்காக யானையின் காது சைஸுக்கு ட்ரக்கின் இருபுறமும் மிகப் பெரிய சைடு மிரர்ஸ்; கோ-டிரைவர் சீட்டுக்கு நேராக பக்கவாட்டில் கூடுதலாக, இன்னொரு பெரிய சைடு மிரர்; 12 லிட்டர் திறன்கொண்ட இன்ஜினில் இருந்து வெளிப்படும் 430bhp சக்திக்கு ஈடுகொடுக்க, ஏபிஎஸ் பிரேக்ஸ் மற்றும் 12 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் என அத்தனையும் பக்கா!

நிஜமான சுரங்கத்தின் சூழலை ஏற்படுத்த, டெஸ்ட்டிங் டிராக்கில் மணல் பாதை, கரடு முரடான பாதை, தண்ணீர் சூழ்ந்த சாலை, சேறுகள் நிறைந்த பாதை, செங்குத்தான பாதை, கொண்டை ஊசி போலத் திரும்பும் வளைவுப் பாதை என பலவிதமான பாதைகளைச் செயற்கையாக உருவாக்கி இருந்தார்கள். சுமார் 12 டன் எடைகொண்ட அந்த வாகனத்தில், 40 டன் எடை கொண்ட இரும்பையும் ஏற்றியிருந்தார்கள். ட்ரக்கை முன்னால் செலுத்த 8 கியர்களும் ரிவர்ஸில் செலுத்த 4 கியர்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்பதால், கிளட்ச் பெடல் கிடையாது. ஆனால், மேனுவல் மோடில் ஓட்ட விரும்பினால், ஸ்டீயரிங் அருகிலேயே இருக்கும் பேடில் ஸ்விஃப்ட் போன்ற லீவரைப் பயன்படுத்தலாம்.

மேனுவலாக ஓட்டும்போது வேகத்துக்குத் தகுந்த கியரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், தானாகவே சரியான கியருக்கு மாறிக்கொள்கிறது. உயரமான பகுதியில் இருந்து செங்குத்தாகக் கீழே இறங்கும்போது, ஸ்டீயரிங்கை மட்டும் பிடித்துக்கொண்டு ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக்கில் இருந்து காலை எடுத்துவிட்டால், இன்ஜின் பிரேக்கே வாகனத்தைப் பத்திரமாக இறக்கிவிடுகிறது.

இதன் பார பாலிக் டைப் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும், இரண்டு ஹைட் ராலிக் ஷாக் அப்ஸார்பர்களும், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, அதிர்வுகளை அழகாக உள்வாங்கிக் கொள்கின்றன.

டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு ட்ரக்கில் இருந்து உற்சாகமாகக் கீழே குதித்து இறங்கிய நம்மைப் பார்த்து பிரதீப் குமார் (பாரத் பென்ஸின் பொறியாளர்), ‘‘பார்வைக்கு மட்டுமல்ல, மைலேஜிலும் இது கிங். நம் நாட்டில் கிடைக்கும் உதிரி பாகங்களைக் கொண்டே (90 சதவிகிதம் உதிரிபாகங்கள்) பெரும்பாலும் இதை வடிவமைக்கிறோம் என்பதால், ஸ்பேர்ஸ் கிடைக்கவில்லை என்ற பேச்சே வராது. இது நல்ல மைலேஜும் கொடுக்கும் என்பதால், இதை இயக்கும் ஆபரேட்டர்களுக்கு செம லாபம்!” என்றார்.

டெஸ்ட் டிரைவ் பண்ணலாமா!