12 லட்சம் ரூபாய்க்குள் ஒரு டீசல் எஸ்யுவி வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். தினமும் 70 கி.மீ வரை பயணிப்பேன். வார இறுதி நாட்களில் குறைந்தது 500 கி.மீ தூரம் வரை சென்று வருவேன். மைலேஜ் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய தேவை. என்ன கார் வாங்கலாம்?

- ராஜ்குமார், திருவள்ளூர்.

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற, அதிக மைலேஜ் தரக்கூடிய சிறந்த எஸ்யுவி, ரெனோ டஸ்ட்டர். இதில், நீங்கள் 85bhp சக்திகொண்ட மாடலை வாங்கவேண்டும். இது, நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக 20 கி.மீ வரை மைலேஜ் தரும். மேலும், டஸ்ட்டரில் இருப்பது 50 லிட்டர் கொள்ளளவுகொண்ட டீசல் டேங்க். அதனால், நீங்கள் அடிக்கடி டீசல் நிரப்ப வேண்டிய அவசியமும் இருக்காது.

முதல் கார் வாங்கப் போகிறேன். என்னுடைய பட்ஜெட் 4 லட்சம். சிட்டி டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு வசதியான, நான்கு பேர் செளகரியமாக உட்கார்ந்து பயணிக்க வசதியாக இருக்க வேண்டும். நல்ல மைலேஜ் தரக்கூடிய காராகவும், அதிகமாக சர்வீஸ் செலவுகள் வைக்காததாகவும் இருக்க வேண்டும். ஹூண்டாய் இயான், மாருதி ஆல்ட்டோ 800, டட்ஸன் கோ ஆகிய இந்த மூன்று கார்களை ஷார்ட் லிஸ்ட் செய்துவைத்திருக்கிறேன். எந்த காரை வாங்கலாம்?

- சித்தார்த், செங்கல்பட்டு.

அதிகமாக விற்பனையாகும் கார் ஆல்ட்டோ. மாருதி கார்களில் பராமரிப்புச் செலவுகளும் குறைவு. ஆனால், பெர்ஃபாமென்ஸ் ரொம்பவும் சுமார். இயான், ஸ்டைலான கார். ஆனால், முழுமையான கார் இல்லை. ட்ஸன் கோ, நீங்கள் கேட்கும் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்யும். மற்ற இரண்டு கார்களுமே 800சிசி இன்ஜின்களைக் கொண்டவை. டட்ஸன் கோ காரில் இருக்கும் 1.2 லிட்டர் இன்ஜின் பெர்ஃபாமென்ஸில் சிறப்பாக இருப்பதோடு, மைலேஜும் அதிகம் தரும். நான்கு பேர் மிகவும் வசதியாக உட்கார்ந்தும் பயணிக்கலாம். செப்டம்பர் - அக்டோபர் மாதம் வரை பொறுமையாக இருக்க முடியும் என்றால், ரெனோ க்விட் விற்பனைக்கு வரும் வரை காத்திருங்கள். ரெனோவின் இந்தச் சின்ன கார் மைலேஜிலும், சிறப்பம்சங்களிலும் சிறந்த காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் ஹோண்டா சிஆர்-வி காரை, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயன்படுத்திவருகிறேன். 25,000 கி.மீ-க்கு ஒருமுறை டயர்களை மாற்றி விடுவேன். ‘டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டு, காரில் இருந்தவர்கள் பலி’ என்பதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் பயமாக இருக்கிறது. இந்த வகையான விபத்துகளில் பெரும்பாலும் எஸ்யுவி கார்கள்தான் இருப்பதைப் பார்க்கிறேன். டயர் வெடிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி, டயர்களைப் பராமரிப்பது எப்படி?

- ரவிச்சந்திரன், சேலம்.

நெடுஞ்சாலையில் அதிக அளவில் பயணம் செய்பவர்களுக்கு, டயர் வெடிப்பு என்பது மிகவும் பயம்தரக்கூடிய விஷயம். எஸ்யுவி/எம்யுவி கார்களில் அதிக வேகத்தில் செல்லும்போது டயர் வெடித்தால், கார் கவிழும் வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் உயிர்ப்பலி அதிக அளவில் இருக்கிறது. இப்போது டயர் நிறுவனங்கள் டயர் வெடிப்பைத் தடுக்க பல புதுமையான தொழில்நுட்பங்களின்படி டயர்களைத் தயாரித்துவருகின்றன. இருந்தாலும், டயர் வெடிப்பதைத் தடுக்க முடியவில்லை. கார் ஓட்டும்போது நாம்தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில டிப்ஸ் இங்கே...

* டயர் வெடிப்புகளில் 75 சதவிகித விபத்துகள், டயர்களில் குறைந்த காற்று இருப்பதால் ஏற்பட்டவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது, ஐந்து டயர்களிலும் சரியான அளவு காற்று இருக்கிறதா என்று செக் செய்த பிறகே காரை எடுங்கள். 100 கி.மீ தூரம் நெடுஞ்சாலையில் பயணித்துவிட்டு, அதன் பிறகு டயர் பிரஷரை செக் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. டயர்கள் ஏற்கெனவே சூடாகிவிட்டிருக்கும். காரை வெளியில் எடுத்து 5 கி.மீ தூரம் பயணிப்பதற்குள் டயர் பிரஷரை செக் செய்வது நல்லது.

* பொதுவாக, வாரத்துக்கு ஒருமுறை டயர்களில் வெடிப்பு ஏதும் இருக்கிறதா, ஆணி குத்தியிருக்கிறதா என்று செக் செய்வது அவசியம். ட்யூப்லெஸ் டயர்கள் என்றால், ஆணி குத்தியிருந்தாலும் உடனடியாகத் தெரியாது. அதனால், டயர் செக்-அப் அவசியம்.

* டயர்களை மாற்றும்போது தரமான, நல்ல பிராண்ட் டயர்களையே தேர்ந்தெடுங்கள். 1,000 ரூபாய் குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக, தரம் குறைந்த டயர்களை வாங்க வேண்டாம்.

* நெடுஞ்சாலையில் 100 கி.மீ வேகம் என்பது ஓகே. அதற்கு மேல் பயணிப்பது ஆபத்தானது. 100 கி.மீ வேகம் வரை பயணிக்கும்போது, டயர் வெடித்தால்கூட காரை கன்ட்ரோல் செய்ய முடியும். அதற்கு மேல் வேகமாகப் போனால், கார் கன்ட்ரோலில் இருக்காது.

* டயர் வெடித்தால் உடனடியாக பிரேக்குகளை அழுத்தக் கூடாது. அதேபோல், உடனடியாக ஆக்ஸிலரேட்டரில் இருந்தும் கால் எடுக்கக் கூடாது. ஸ்டீயரிங்கை ஸ்ட்ராங்காகப் பிடித்துக்கொண்டு பிரேக்குகளையும், ஆக்ஸிலரேட்டரையும் விட்டு விட்டு எடுக்க வேண்டும். பதட்டப்படாமல் இருந்தால், காரை கன்ட்ரோல் செய்துவிடலாம்.

12 லட்சம் ரூபாய் என் பட்ஜெட். செடான் கார் வாங்குவதா அல்லது எஸ்யுவி வாங்குவதா எனக் குழப்பமாக இருக்கிறது. ஹோண்டா சிட்டி, ரெனோ டஸ்ட்டர் ஆகிய இரண்டு கார்களையும் இறுதி செய்து, டெஸ்ட் டிரைவ் செய்தும் பார்த்துவிட்டேன். எந்த காரை வாங்கலாம்?

- அஸார், ஆம்பூர்.

இரண்டு கார்களில் எந்த கார் வாங்குவது என்பது, முழுக்க முழுக்க உங்கள் தேவையைப் பொறுத்ததே! நகருக்குள்தான் அதிகமாகப் பயணம் செய்வீர்கள் என்றால், கையாள்வதற்கு ஈஸியான ஹோண்டா சிட்டி வாங்கலாம். இதில் டர்போ லேக் பிரச்னைகள் இல்லை; அடிக்கடி கியர்களை மாற்ற வேண்டிய அவசியமும் இருக்காது. நெடுஞ்சாலையில் அதிக தூரம் பயணம் செய்வீர்கள் என்றால், ரெனோ டஸ்ட்டர் வாங்கலாம்.

நான் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் ரசிகன். என் அப்பா பழைய புல்லட் வைத்திருந்தார். நானும் இப்போது புல்லட் வைத்திருக்கிறேன். என்னுடைய மகனுக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்கையே வாங்கித் தரலாம் எனத் திட்டம். அவனுக்கு கான்ட்டினென்ட்டல் ஜிடி பைக் பிடித்திருக்கிறது. இந்த பைக்கின் ப்ளஸ் மைனஸ்; மைலேஜ் மற்றும் வேக விவரங்கள் பற்றித் தெரிய வேண்டும்.

-நரசிம்மன், திருச்சி.

புல்லட் பைக்குகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பைக், கான்ட்டினெட்டல் ஜிடி. உண்மையில் இந்த பைக் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கே புதுப் பாடம்தான். நீங்கள் பரம்பரையாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் பயன்படுத்தி வருவதால், அந்த நிறுவன பைக்குகளின் தரம் எப்படி இருக்கும் எனத் தெரியும். பழைய என்ஃபீல்டு பைக்குகளைக் காட்டிலும் கான்ட்டினென்ட்டல் ஜிடியின் தரம் சிறப்பாகவே இருக்கிறது. 535சிசி திறன்கொண்ட இந்த பைக், அதிகபட்சமாக 128 கி.மீ வேகம் வரை பறக்கும். கான்டினென்ட்டல் ஜிடி லிட்டருக்கு 26.6 கி.மீ மைலேஜ் தரும். கான்டினெட்டல் ஜிடி, கஃபே ரேஸர் ஸ்டைல் பைக் என்பதால், இந்த பைக்கை அன்றாடப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது சிரமம். மேலும், கிளட்ச்சின் பெர்ஃபாமென்ஸும் ரொம்ப சுமார். 2 லட்சம் ரூபாய் கொடுத்து கட்டாயம் வாங்க வேண்டும் என்று சொல்லக்கூடிய எந்த விஷயமும் இந்த பைக்கில் இல்லை. ராயல் என்ஃபீல்டு ரசிகரான உங்களையும், உங்கள் மகனையும் இந்த பைக் திருப்திப்படுத்தினால் மட்டுமே வாங்கலாம்.

நான் கடந்த ஏழு ஆண்டுகளாக யமஹா FZ-16 பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். இப்போது புதிதாக இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல்லான பைக் வாங்கலாம் என நினைக்கிறேன். பட்ஜெட் 2 லட்சம். கேடிஎம் RC390 பைக்கை மனதில் வைத்திருக்கிறேன். கொஞ்சம் அட்வென்ச்சர் பைக்காக இருக்க வேண்டும். வேறு ஏதும் புது பைக்குகள் வர இருக்கின்றனவா?

- விக்னேஷ்வரன், மதுரை.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியின் முதல் பைக் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது அட்வென்ச்சர் டூரர் பைக்காக இருக்கும். தவிர, ஹீரோ இம்பல்ஸ் 250சிசி பைக் வர இருப்பதாகவும் தகவல்கள் உலவுகின்றன. தீபாவளி வரை பொறுத்திருங்கள்.